Friday, April 01, 2005

2004 செப்டம்பர் மாத விசேஷ தினங்கள்

ஆர். பி.

6.9.2004 ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி
அஷ்டமியைப் பெருமைப்படுத்த ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்ரீகிருஷ்ணனாக அவதரித்தது இந்த தினம். பூதனை, சகடாசுரன், திருணாவர்த்தன், அகாசுரன், பகாசுரன், கம்சன் சிசுபாலன், வத்ஸாஸுரன், அரிஷ்டாசுரன் போன்ற எண்ணற்ற அசுரர்களை அழித்து, கீதோபதேசத்தை அர்ச்சுனனை முன்னிட்டு உலகிற்கு அளித்து பூபாரம் தீர்க்க பகவான் எடுத்த பூர்ணாவதாரம் இது. “பிறந்ததிலிருந்தே பிரச்சினைகள் வரலாம். சிரித்துக் கொண்டே என்னைப் போல் எதிர் கொள். வெற்றி பெறுவாய்” என்று மனிதர்களுக்குப் பாடமாக வாழ்ந்து காட்டிய கண்ணன் அவதரித்த போது கம்சன் பற்களை நறநற வென்று கடித்ததால் முறுக்கு, சீடை, தேன் குழல் என்று நிவேதிக்கிறோம். வெண்ணெயும், பாலும், தயிரும். பிரியமாகத் தேடித்தேடி அவன் உண்டதால் அவைகளையும் நிவேதனம் செய்ய வேண்டும்.

அதிரசமும் நாகப்பழமும் கண்ணன் விரும்பி உண்டவை. குலேசர் அவனுக்கு அவலைக் கொடுத்துகுபேர சம்பத்தை அடைந்ததால்பாலில் இனிப்பு சேர்த்து அவலை ஊறவைத்து நிவேதிப்பார்கள். கண்ணன் காலடிகளை அரிசி மாவினால் வாசலிலிருந்து போட்டு பூஜையறையில் நிறுத்துவார்கள். ஊருக்காக வாழ வேண்டும் என்பதைக் காட்ட கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்து மக்களையும் பசுக்களையும் காத்து, காளிங்கனையும் அடக்கி யமுனை மடுவிலிருந்து விரட்டிய கிருஷ்ணன் பாண்டவர் சார்பில் எளியவனாகத் தூதும் சென்றான். திரௌபதியின் மானத்தையும் காப்பாற்றினான். அவன் தன்னை நம்பியவர்களை என்றும் கை விட்டதில்லை. நாமும் கண்ணனை இன்று வழிபட்டு தைரியத்தையும். சாமர்த்தியத்தையும் அவன் அருளையும் பெறுவோம்.


--------------------------------------------------------------------------------
18.9.2004
விநாயக சதுர்த்தி

எந்தக் காரியம் தொடங்கினாலும் விக்னமின்றி முடிய விநாயகரைத் தொழவேண்டும். அப்பேற்பட்ட விக்னேஸ்வரர் பிறந்த நாள் இது. அம்பிகை தன் மேனியிலுள்ள மஞ்சளைத் திரட்டி ஒரு உருவம் சமைத்து காவலாக நிறுத்திவிட்டு நீராடச் சென்றாள். அந்த நேரத்தில் பரமேஸ்வரன் வர காவலுக்கு இருந்த விநாயகர் தடுத்தார்.

கோபம் கொண்ட ஈசன் சூலத்தால் கணபதி தலையைக்
கொய்தார். முண்டமான மைந்தனைக் கண்டு தேவி கதறினாள். வடக்கே தலை வைத்துப் படுத்திருந்த ஒரு யானையின் தலையை வெட்டிபிள்ளை உடம்பில் பொருத்தி உயிர் கொடுத்தார் மஹேசன். விநாயகருக்கு யானை முகம் வந்த விதம் இது. அவருக்குப் பிடித்த நைவேத்யம் கொழுக்கட்டை.


இன்று எள்கொழுக் கட்டை நிவேதித்தால் சனி பீடை நீங்கும். உளுத்தங் கொழுக்கட்டை நிவேதனம் செய்தால் ராகுவால் பீடை ஏற்படாது. மேலிருக்கும் அரிசிமாவு சந்திர பீடையை அகற்றும். உள்ளி ருக்கும் இனிப்பு பூரணம் குரு, சுக்ர அருளைப் பெற்றுத் தரும். கோதுமை மாவால் தயாரிக்கப்படும் அப்ப நிவேதனம் சூரியனது அருளைச் சேர்க்கும். கஜமுகாசுரனை வதைத்தவர் சிறிய மூஷிகத்தை வாகனமாகக் கொண்டிருக்கிறார்.

அருகம்புல், எருக்கம் பூ, வன்னி இலை ஆகியவை கணேசருக்கு விருப்பமான அர்ச்சனைப் பத்ரங்கள்-அகஸ்தியரின் கமண்டலத்தில் இருந்த காவிரியை தழிழ் நாட்டைச் செழிப்பாக்கக் கவிழ்த்தவர்; இராவணன் கைலாயத்திலிருந்து கொண்டு வந்த லிங்கத்தை இலங்கை செல்ல விடாமல் செய்தவர். வியாசர் சொல்லச் சொல்ல தடை படக்கூடா தென்று தன் தந்தத்தையே உடைத்து மகாபாரதம் எழுதியவர்-மகா-பெரிய-பா-பாட்டுக்களாலான, ரதம் பாரதம். அந்தப் மிகப் பெரிய ரதத்தின் தேரைப் பிடித்து இழுத்து நிறுத்தியவர் விநாயகர். சாரதியாயாயிருந்தவர் கண்ணன். இருவர் பிறந்த நாளும் அடுத்தடுத்து வரும். நமது இரு கைகளாலும் நெற்றிப்பொட்டுக்களில் தினமும் காலை-மாலை இருவேளைகளிலும் 108 குட்டுக்கள் குட்டிக் கொள்ள வேண்டும். 108 குட்டு ஒரு சூறைத் தேங்காய்க்கு சமம். இதனால் பிரம்ம ரந்தரத்தில் அமிர்தம் பெருகி நாடிகளில் பாய்வதால் சோம் பேறித்தனம் விலகி சுறுசுறுப்பு உண்டாகிறது. தோப்புக்கரணம் போடுவது சிறந்த உடற்பயிற்சி யாவதோடு புண்ணியமும் சேர்கிறது. அதனால் வள்ளியை முருகனுக்கு மணம் முடித்து வைத்த விநாயகர் விழாவை சிறப்பாகக் கொண்டாடி விக்னங்களைத் தடுத்து வெற்றி பெறுவோம்.


--------------------------------------------------------------------------------
19.9.2004 ரிஷிபஞ்சமி

கச்யபர். அத்ரி, பரத்வாஜர், விஸ்வாமித்திரர், (கௌசிகர்) ஜமதக்னி. அருந்ததி சமேதராக வசிஷ்டர் இந்த சப்த ரிஷிகளையும், பூஜிக்கும் நாள் இது. முதலில் யமுனா பூஜையை செய்து விட்டு, வயதான, மாதவிலக்கு நின்று ஏழு ஆண்டு களான மாதர்கள் இதைச் செய்வார்கள். இதனால் கொடிய பாபங்களும் விலகும். அஷ்டதள தாமரைக் கோலமிட்டு அதன்மீது கலசம் வைத்து சாஸ்திரிகளைக் கொண்டு நடத்த வேண்டிய பூஜை இது.

விதர்ப்ப தேசத்தில் வாழ்ந்து வந்த சுசீலை-உதங்க ரிஷி தம்பதியருக்கு ஒரு பெண்ணும், பிள்ளையும் இருந்தனர். புதல்விக்கு உரிய காலத்தில் விவாகம் நடத்தினர். இளம்வயதிலேயே புத்திரி விதவை யானாள். ஒருநாள் பகலில் அவள் உறங்கிக் கொண்டிருக்கையில் அவளது தேகத்தில் புழுக்கள் நெளிவதை சிஷ்யர்கள் பார்த்து சுசீலையிடம் தெரிவித்தனர். அதற்கான காரணத்தை உதங்கரிடம் கேட்டாள் சுசீலை.

உதங்கர் ஞான திருஷ்டியில் பார்த்து “நம் மகள் மாதவிடாய் காலத்தில் ரிஷிபஞ்சமி விரதம்
இருந்த தன் தோழியரை ஏளனம் செய்ததோடு பூஜைப் பொருட்களையும் தீண்டினாள். பயபக்தியோடு ரிஷிபஞ்சமி விரதம் இருந்து பூஜை செய்தால் இக்குறை நீங்கும்” என்றார். அந்தப் பெண் ரிஷிபஞ்சமி பூஜையை ஆசாரத்தோடு செய்து முடிக்க அவள் சரீரத்திலுள்ள புண்கள் குணமாயின. இந்த விரதம் அத்தனை மேன்மையானது.



--------------------------------------------------------------------------------

24.9.2004 ஸ்ரீமத் வேதாந்த தேசிகர் திரு நக்ஷத்திரம்

காஞ்சீபுரம் அருகிலுள்ள தூப்புல் கிராமத்தில் அனந்த சூரி-தோதாரம்மா தம்பதியருக்கு திருப்பதி ஏழுமலையான் அருளால் பிறந்தவர் இந்த மகான். பெற்றோர் சூட்டிய பெயர் வேங்கட நாதன். மாமா ஆத்ரேய இராமானுஜர் காஞ்சிவரதர் கோயிலுக்கு மருமகனோடு சென்றார். கோயிலில் குருவத்ஸ்ய வரதாச்சாரியார் பிரவசனம் செய்து கொண்டிருந்தார். அவர் வேத சமுத்திரம். நட்புக்காக ஒரு விநாடி இராமானுஜரைப் பார்த்து புன்னகைக்க ஸ்லோகம் தடுமாறியது.

“பிப்ராணம் வஜ்ர கேடௌ ஹலமுஸல கதாகுந்த மத்யுக்ர தம்ஷ்ரம்! ஜ்வாலாகேசம் திரிநேத்ரம்” என்று அடியெடுத்துக் கொடுத்தார் வேங்கடநாதர். ஜனங்களின் கரகோஷம் விண்ணை அதிரச் செய்வதாய் இருந்தது. வரதாச்சாரியார் மெய்சிலிர்க்க சிறுவனை மனமார வாழ்த்தினார். அவர் வாக்குப் பொய்க்கவில்லை. நான்கு வேதங்கள், ஆறு சாஸ்திரங்கள், நியாயம், தர்க்கம், புராணங்கள், இதிகாசங்கள், மீமாம்ஸை அனைத்திலும்


பாண்டித்யம் பெற்றார் தேசிகர். அவரது மனைவியின் பெயர் திருமங்கை’ காஞ்சி ஸ்ரீமடத்தின் பொறுப்புக்களை வரதாச்சாரியார் இவரிடம் ஒப்படைத்தார்.

இம்மஹான் பிட்சை வாங்கியே காலம் கழித்தவர். இவர் இல்லாளும் கணவனுக்கேற்ற குணவதி-ஒருநாள் ஒரு வியாபாரி அரிசியோடு பொற்காசுகளையும் கலந்து இவருக்குப் பிட்சையிட அவற்றைக் குப்பையில் போட்ட பற்றற்ற பெருந்தகை இவர். 1263-ல் பிறந்தவர் 1363-ல் பரமபதமடைந்தார். நூறு ஆண்டுகள் வாழ்ந்த மகான். ஒரே இரவில் பாதுகாசகஸ்ரம்’ என்ற ஆயிரம் பாமாலைகளை இயற்றி ‘கவிதர்கிக்க கேசரி’ என்ற பட்டத்தைப் பெற்றவர். அந்நியப்படையெடுப்பின் போது ஸ்ரீரங்க நாதரைத் திருப்பதி ஆலயத்தில் ஒளித்துக் காப்பாற்றியவர். இவரது வரலாற்றை கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட் வெளியிட்டுள்ள ‘பாண்டுரங்கன் மகிமை’ என்ற புத்தகத்தைப் படித்து விபரமாகத் தெரிந்து கொள்ளலாம்.


--------------------------------------------------------------------------------
27.9.2004 அனந்த விரதம்

இன்று எல்லா விஷ்ணு ஆலயங்களிலும் பெருமாளை விசேஷமாக ஆராதிப்பர். ஆற்காடு வரதராஜப் பெருமாள் கோயிலில் இந்த விரதம் சிறப்பாகக் கொண்டாடப்படும். இதை வீட்டில் கொண்டாட பூஜை அறையில் தரையை சுத்தம் செய்த பின் அஷ்டதள தாமரைக் கோலமிட்டு அதன் மீது அரிசியைப் பரப்பி, அதன் மீது கலசம் வைத்து சந்தனம், பூ, மாவிலை இவற்றால் அலங்கரித்து, கலசத்தின் மேல் ஒரு பிடி தர்ப்பையால் செய்த கூர்ச்சத்தில் நாகப் பிரதிமையை வைத்து கும்ப பூஜை செய்ய வேண்டும். யமுனையை பூஜித்த பிறகே அனந்த பத்மநாப ஸ்வாமியை பூஜிக்க வேண்டும். இதனால் நாகதோஷம் நீங்கி புத்திரபாக்கியம் ஏற்படும். கால சர்ப்ப தோஷம் நிவர்த்தியாகி திருமணம் கைகூடும். மரண கண்டங்கள் விலகுவதோடு பாபங்கள் அழியும். 14 முடிச்சுள்ள சரடை பூஜை செய்து வலது கையில் கட்டிக் கொண்டால் பாக்கியங்கள் பெருகும்.

சுமந்த மகரிஷியின் புதல்வி சீலா தாயை இழந்தவள். கௌண்டின்ய மகரிஷி அவளை மணந்து கொண்டார். சிற்றன்னையின் கொடுமையால் சீர் எதுவும் தரப்படாமல் வெறுங்கையோடு வெளியேறினாள் சீலா. வழியில் ஆற்றங்கரையில் மங்கையர் அனந்த விரதம் அனுஷ்டித்துக் கொண்டி ருந்தனர். சீலாவும் அவர்களோடு சேர்ந்து நோன்புச்சரடை அணிந்தாள். அரண்மனையில் ஆஸ்தான குருவாக அமரும் பாக்கியம் கௌண்டின்யரைத் தேடி வந்தது.

ஒரு நாள் கௌண்டியன்யர் சீலா கையிலிருந்த நோன்புக் கயிற்றை ‘அசிங்கமாயிருக்கிறது’ இது. பொன்வளையல்களோடு இதுவும் எதற்கு?” என்று பிடித்திழுக்க கயிறு அறுந்தது. அதை எரியும் அடுப்பில் வீசினார். சீலா அதை எடுத்துப் புனிதமாகட்டும் என்று பாலில் போட்டும் அதன் கருமை நிறம் போகவில்லை! அன்று முதல் மன்னர் ரிஷியின் செயல்களில் நிறையக் குற்றங்கள் கண்டுபிடித்தார். ரிஷியின் பசுக்கள் திருடு போயின. பதவி பறிபோயிற்று.

மகரிஷி தவறை உணர்ந்தார். அதன் பின் பக்தி சிரத்தையுடன் அனந்த விரதம் இருந்து நோன்புக் கயிறை அணிந்து கொண்டார். பழைய வேந்தரே அவரைத் தேடி வந்து நமஸ்கரித்து குரு பதவியை அங்கீகரிக்க வேண்டுமென்று கோரினார். பசுக்களைக் களவாடியவன் பிடிபட்டு பசுக்களும் திரும்பக் கிடைத்தன. இதை நோற்பதால் வைகுண்டவாசம்
நிச்சயம் கிட்டும்.


--------------------------------------------------------------------------------

28.9.2004 உமா மஹேஸ்வர விரதம்

கோபம், சாபம் இரண்டையும் நினைத்தால் துர்வாசர்தான் நினை வுக்கு வருவார். துர்வாசர் கைலை சென்று சிவபெருமானை ஆராதித்தார். பரமேஸ்வரன் மகிழ்ந்து, தன் கழுத்திலிருந்த வில்வ மாலையை அளித்தார்.
மாலையோடு வெளியே வந்த முனிவரின் பார்வையில் கருடன் மேல் செல்லும் மகாவிஷ்ணு தென்பட்டார். ‘ஈஸ்வரப் பிரசாதம்’ என்றபடி மாலையைத் திருமாலிடம் கொடுத்தார் முனிவர். அதைக் கருடன் கழுத்தில் போட்டார் நாராயணன். அது சிலிர்த்த வேகத்தில் மாலை எகிறியது. துர்வாசர் சினத்துடன். திருமகளை மனைவியாகக் கொண்டதால் கர்வம் கொண்டு சிவப்
பிரசாதத்தை அலட்சியம் செய்தாய்’ அந்த மகாலக்ஷ்மி பாற்கடலில் மறையட்டும். கருடனும் இல்லாது போகட்டும்” என சபித்தார்.

கருடனும், அலைமகளும் கடலில் மறைந்தனர். திருமகள் இல்லாத வைகுண்டம் சோபையிழந்து விட்டது. வனத்திலே அலைந்து கொண்டிருந்த பெருமாள், கௌதம

ரிஷியை சந்தித்தார். அவரிடம் தனக் கேற்பட்ட சாபத்தைக் கூற அவர் ஸ்ரீ உமா மஹேஸ்வர பூஜை செய்தால் சாபம் நீங்கி விடும் என்று பூஜா முறையை உபதேசித்தார். ஸ்ரீ ஹரியும் உமா மகேஸ்வர பூஜையைக் கடைப்பிடித்து 15 முடிச்சுள்ள தோரகத்தை வலது கையில் கட்டிக் கொண்டார்.

பாற்கடலைக் கடைந்த போது மகாலக்ஷ்மி வெளிப்பட்டு நாராயணருக்கு மாலையிட்டாள். கருடனும் வந்து சேர்ந்தான். வைகுண்டம் முன்போலவே சோபையாயிருந்தது. இந்திராதி தேவர்களும், ரிஷிகளும், பல மன்னர்களும் இவ்விரதத்தைக் கடைப்பிடித்து பாக்கியங்களைப் பெற்றனர். இது சாஸ்திரிகளை வைத்து நடத்த வேண்டிய பூஜை.


--------------------------------------------------------------------------------
29.9.2004 மஹாளய பக்ஷ ஆரம்பம்

பாத்ரபத மாதம் வரும் பௌர்ண மிக்கு அடுத்த நாள் பிரதமை முதல் அமாவாசை உள்ள காலத்தில் பிதுர்க்கள் மண்ணுலகுக்கு வருகிறார்கள். இந்தப் பதினைந்து நாட்களில் அவரவர் வசதிப்படி ஒரு நாள் பிதுர்க்களுக்குத் திதி கொடுப்பதாலும், தர்ப்பணம் செய்வதாலும் சந்ததிகள் ஆசீர்வதிக்கப் படுகிறார்கள். 1.10.2004-ல் வரும் மஹாபரணி, 4.10.2004-ல் வரும் மஹாவியதீ பாதம் இந்த இரு நாட்களிலோ, இறந்தவரின் திதி, நட்சத்திரம், ஜனன நட்சத்திரம் இவைகளிலோ சிரார்த்த தர்ப்பணம் செய்வது விசேஷம்-வியதீபாதத்தன்று புண்ணிய தீர்த்தங்களில், கடலில் நீராடுவதும் தர்ப்பணம் செய்வதும் தான மளிப்பதும் அபரிமிதமான பலனைக் கொடுக்கும்.


--------------------------------------------------------------------------------
25.9.2004 வாமன ஜெயந்தி

அதிதி-கச்யபரின் மகனாய் குள்ள வாமனனாக மகாவிஷ்ணு அவதரித்த தினம் இது. இருக்காது களிலும் குண்டலம்; கைகளில் கங்கணம்; கால்களில் தண்டையும், சிலம்பும்; மார்பிலே ஸ்ரீ வத்ஸம் என்கிற மச்சம். பிறந்தவுடனேயே சிறிது சிறிதாக வளர்ந்து உபநயனம் செய்விக்கப்பட்டவர் வாமனர். சூரியன் காயத்ரியை உபதேசித்தான். சரஸ்வதி அட்சமாலையைத் தர, உமாதேவி முதல் பிட்சையிட்டாள். பிரகஸ்பதி பிரம்ம ஸுஸ்திரத்தைக் கொடுக்க, பூமாதேவி மான் தோலைக் கொடுத்தாள். குபேரன் பிட்சா பாத்திரத்தை அளிக்க, பிரம்மா கமண்டலத்தைத் தந்தார். மகா
பலிச்சக்கரவர்த்தியிடம் வாமனராக வந்த பகவான் மூன்றடி மண் தானம் கேட்டு அவன் தந்த பிறகு திரிவிக்ரமனாக வளர்ந்து வானம், நிலம் இரண்டையும் ஈரடியில் அளந்தார். மூன்றவாவது அடியைத்தர இயலாது தலை குனிந்த அவன் முடி மீது காலை வைத்து அவன் கர்வத்தை பகவான் அடக்கினார் என்கிறது புராணம். அதைப் படித்தாலே பாபங்கள் தீரும்.