Thursday, May 08, 2008

Paramachariyal Paathaiyiley - Kamakoti

ஸ்ரீபரமாச்சார்யாள் பாதையிலே....

பிரிய விரதன்னு ஒரு ராஜா. ஸ்வாயம்பு மனுவோட மூத்த பிள்ளை. இவன் துருவனுக்குப் பெரிய தகப்பன்.

பிரிய விரதனோட குமாரி ஊர் ஜஸ்வதி. அவளை அசுரகுருவான சுக்கிராச் சாரியாருக்குக் கல்யாணம் பண்ணிக்

கொடுத்தா. அவாளுக்குப் பொறந்தவதான் தேவயானி. அவ தான் அசுர ராஜகுமாரி சர்மிஷ்டையோட சண்டை

போட்டவ. யயாதியோட முதல் பெண்டாட்டி. பிரிய விரதனுக்கு பத்து பிள்ளைகள் பிறந்தா. அதிலே மூணுபேர்

இல்லற வாழ்க்கையிலே ஈடுபடலே. எல்லாம் கிடைச்சாலும் மனுஷனாலே சும்மாயிருக்க முடியாது.

“என்னோட இராஜ்ஜியத்துலே இராத்திரி வரதாவது”ன்னு பிரியவிரதன் நெனைச்சான். தன்னோட தவ

பலத்தாலே சூரியனைப் போல ஒரு பிரகாசமான தேர் செஞ்சு ஏறிண்டான். பூமியை எழு தடவை சுற்றி வந்தான்.

அப்போ ஏழு தடவை அவனோட ரதச்சக்கரம் பூமியிலே அழுந்தினது.

அதுதான் ஏழு சமுத்திரமாச்சு. அப்போ அவன் தேர் எத்தனை பெரிசுன்னு நீங்க கணக்குப் போட்டுக்கோங்கோ.



அந்த சமுத்திரங்களுக்கு நடுவிலேதான் ஜம்புத்வீபம், பலிஷத், சான்மலி, குச, ரௌஞ்ச, சாகதத்வீபம்,

புஷ்பராகம் முதலான தீவுகள் இருக்கு. அந்தச் சமுத்திரங்கன் உப்பு, கரும்புச் சாறு, தேன், நெய், பால், தயிர், சுத்த

ஜலம் என்கிற தன்மையோட இருக்கு க்ஷீராப்தியிலே மஹாவிஷ்ணு சயனிச்சிண்டிருக்கார். உப்புக்கடல் பூலோகத்

துலே இருக்கு. சன்யாசியாகாத ஏழு பிள்ளை களுக்கும் ஏழு கடலைப் பகிர்ந்து கொடுத்துட்டார் ராஜா.

பிரியவிரதன் சாதனையாலே தேவியை நோக்கித் தவம் பண்ணி ஏழு தீவுகளையும் பிள்ளைகளுக்குக் கொடுத்தான்.

சாதனைகளாலே அம்பாளை நெருங்கலாம். மனஸிலே பக்தி வேணும். நாலு பூப்போட்டாலும் ஆத்மார்த்தமா

இருக்கணும். கங்கையில் ஸ்நானம் பண்ணி குந்திக்காக கர்ணனையும், சுபத்திரைக்காக அபிமன்யுவையும்,

காந்தாரிக்காக துரியோதனாதியரையும் காண்பிக்க வேணுமின்னு வியாசர் ஜெகதாம் பிகையைத் தியானம்

பண்ணினார். பாரத யுத்தத்திலே மாண்டு போன எல்லோரும் ஒரு நிமிஷம் காட்சியளிக் கும் படி பண்ணினா

அம்பாள். அப்போ நாரதரும் கூட இருந்தார்.



தேவி நற்கதியை அளிப்பவள் என்கிறது அடுத்த ஸ்லோகம். யாருக்கு? நல்லவர்களுக்கும். தவசிகளுக்கும்,

வர்ணாச்சிரம தர்மத்தை ஒழுங்கா கடை பிடிக் கறவாளுக்கும் நற்கதி கொடுக்கறது அவ கடமை.

பிருகு மகரிஷியோட பார்யாள் புலோமை. அவர் களுடைய பிள்ளை தான் சியவன முனிவர். அவர் தவம் செய்கிற

போது புற்று மூடிண் டுத்து. சர்யாதி ராஜா வேட்டையாட வந்தப்போ அவரோட குமாரி சுகன் யையும் கூட வந்தா.

புற்றிலே ‘பளபளன்னு’ ஜொலிக்கிற ரிஷியோட கண்களைப் பளிங் குன்னு நெனைச்சு குச்சியாலே குத்தினா.

அதனாலே புற்று சரிந்தது. சியவனரோட கண் பார்வைபோயிடுத்து. அவர் தேவி உபாஸகர்.





தேவியோட கோபத்தாலே சர்யாதியும், அவன் பத்தினி யும் பரிவாரங்களும் மலஜலம் கழிக்க முடியாம அவஸ்

தைப்பட்டா. செஞ்சகுத் தத்துக்குப் பரிகாரமா கிழ முனிவருக்குப் பணி விடை செய்யப் போன சுகன்யை அவரை

முழுமனசோட கல்யாணம் பண்ணிண் டுட்டா. அதனாலே எல்லாரும் தேக உபாதை நீங்கி சௌக்கிய மானா.

அப்புறம் அஸ்வினி தேவாளுடைய கிருபையாலே புருஷனுக்கு இளமையை மீட்டுத் தந்தா சுகன்யை.



நற்கதின்னா மோட்சம் மட்டும்தான்னு பலபேரும் நினைச்சிண்டிருக்கா. குழந்தைகளை நன்னாப் படிக்க வைக்க நியாயமான சம்பாத்யம் வரணும். பிதுர்கர்மா ஒழுங்கா நடக்கணும். அகால மிருத்யு ஏற்படப்படாது. தாயார், தகப்பனார், இல்லேன்னா ஆதரிச்சவாளுக்கு அனுசரணையா இருக்கணும். கொடிய வியாதி எதுவும் வரப்படாது. சந்ததிகள் செழிப்பாயிருக்கறப்போ பாயிலே படுக்காம மரணம் நேரணும். தயாள குணத்தோட வாழ்ந்தா மோட்சம் கிடைக்கிறதிலே எந்த சிரமமுமில்லே! இப்படி வாழறதும் நற்கதிதான்.



‘கதியில்லைன்னு சொல்றோம். ‘கதி’ன்னா மார்க்கம். ‘மார்க்கம்னா பாதை, வழி. நல்வழியிலே வாழ்க்கை நடத்தினா நல்ல கதி தானா வரும். சுகன்யை கௌரியை தியானிச்சாள். அஸ்வினி தேவர்கள் இரண்டு பேர் சியவனக் கிழவரோடு தடாகத்திலே மூழ்கி எழுந்தி ருந்தா. மூணுபேருக்கும் சமமான அழகு, வயசு. ஒத்த ரூபம். புருஷனுக் குப் பார்வையும், வாலிபமும் வேணுங்கறதுக்காக அந்த சோதனையை ஏத்துண்டா. சாதிக்க நினைச்சா சோதனைக்கும் தயாராகணும். அம்பாள் அருளாலே சியவன ரைக் கண்டு பிடிச்சு மாலை போட்டா. அந்த சியவனரோட பிள்ளை தான் பிரமாதி.



பிரமாதியோட பார்யாள் பிரதாபி. அவாளுக்கு ருருன்னு ஒரு பிள்ளை. ருரு தூலகேச முனிவரோட ஆசிரமத்திலே பிரமத்வரை என்கிற ரூபவதியைப் பார்த்து ஆசைப்பட்டான் அந்தப் பெண் மேனகைக்கும் விஸ்வா வஸு என்கிற கந்தர் வனுக்கும் பொறந்தவ. தூலகேச ரிஷி யோட வளர்ப்புப் பெண். பிரமாதி, பிள்ளையின் விருப்பப்படி தூலகேச ரிஷி கிட்டே சம்பந்தம் பேசி கல்யாணத்துக்கு நாள் குறிச்சார். சம்பந்தப்பட்ட எல்லாரும் சந்தோஷமா யிருக் கறப்போ கல்யாணப் பெண் பாம்பை மிதிச்சுட்டா. பாம்பு கொத்திடுத்து. கடிச்சது ராஜநாகமானதாலே அந்த க்ஷணமே அவ உயிர் போயிடுத்து. எல்லோரும் ‘இப்படியாயிடுத்தே”ன்னு அழுதா. இப்படியெல்லாம் நடந்தா அது தீயகதி.



ருரு ஆத்தங் கரைக்குப் போய் குளிச்சு கையிலே நதி ஜலத்தை வைச்சுண்டு “நான் கிரமமா பூஜை, ஹோமம், காயத்ரி ஜபம், வேத அத்ய யனம், சூரிய நமஸ்காரம் எல்லாம் செய்தது சத்திய மானா, எனக்காக வரிக்கப்பட்ட ஸ்த்ரீ, உயிர் பெற்று எழுந்தி ருக்கணும். அப்படி அவள் பிழைக் கலைன்னா நான் பிராணனை விடுவேன்” அப்படீன்னு பகவானை பிரார்த்திச் சான். அவன் கண்ணிலேயிருந்து ஜலம் வழிஞ்சுண்டே யிருந்தது. ஆப்போ யமதூதன் வந்து “இதேன்ன அடாவடி? விவாகமே ஆகவில்லை! ஆவளை விட சௌந்தர்யவதி யான ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து b காள். பிரம்மதேவரை யோட முடிஞ்சுத்து” என்றான். ஆனா ருரு ‘வரிச்சவ தான் வேணும்’ கறதிலே வைராக்கியமாயிருந்தான். யமதூதன் “அப்படியானா உன் ஆயுசிலே பாதயை நீ அவளுக்குக் கொடுக்கணும்” னான்.




யமதூதன் கிட்ட “அவளுக்காக நான் நெருப்பிலே குதிக்கறதுக்கும் ஆயத்தமாயிருக்கேன். அப்படி இருக்க ஆயுசிலே பாதியைத் தரமாட் டேனா? எப்படியாவது அவ உயிரோட இருந்தாப் போதும்’’னான்ருரு.

பிரமத்வரையின் தகப்பனான விசுவாவஸு ருருவையும், கால தூதனையும் கூட்டிக் கொண்டு யமபட்டணம் போனான். யமன் கிட்டே நடந்ததை எல்லாம் காலதூதன் சொன்னான். யமன் ரொம்ப ஆச்சரியப்பட்டு பிரமத்வரையை எழுப்பித் தந்தான்.

ருருவுக்கு பிரமத்வரையோடு கல்யாணம் ரொம்ப சிறப்பா நடந்தது. ருருவுக்கு தர்ம காரியங்களாலே ஆயுசு பெருகித்து. பிரமத்வரையும் பௌர்ணமி பூஜை பண்ணி வயசை வளர்த்துண்டா. இது கெட்ட கதியையும், நல்ல கதியா மாத்திண்ட சம்பவம்.

பிரம்ம குமாரர்களான சனகாதி முனிவர்களால் தியானிக்கப் படுகிறவள் அம்பாள். ஸ்ரீதேவி பாகவதத்தை சனகாதியர், சூத முனிவரி டம் கேட்டுத் தெரிந்து கொண்டனர். சனகாதியர்களுக்கு அப்படி என்ன உயர்வு? அவர்கள் பரமபாகவதர்கள். அவர்களை வைகுண்ட வாசலில் தடுத்து நிறுத்தின தால் வைகுண்ட வாயில்காப்போர்களான ஜய விஜயர்கள் மூணு ஜென்மாக்கள் அசுரர்களாப் பொறந்தா! அதோட போச்சா? மகாவிஷ்ணுவும் வராக, நரசிம்ம, ஸ்ரீராம, ஸ்ரீகிருஷ்ண பலராமனா அவதாரம் எடுக்க வேண்டி வந்தது.



நூறு வருஷங்கள் இரண்யாட்சன், இரண்ய கசிபுவை திதி கருவில் சுமந்ததா பாகவதம் சொல்றது. சனகாதியர் மகத்துவம் ரொம்பப் பெரிசு. அவாளுக்குத் தான் சிவபெருமான் தக்ஷிணா மூர்த்தியா உபதேசம் பண்ணினார்.

அம்பிகையை ஸதாசிவனின் பத்னி என்கிறது 231-ஆவது நாமா. ஸ்ரீ சக்கரத்தின் நடுவில் ஸர்வானந்த மயம் என்ற பீடத்திலே பஞ்சபிரம்மா ஸனத்தில் ஸதா சிவனுடைய மடியில் மஹா திரிபுர ஸுந்தரி எழுந்தருளி யிருக்கா. பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன் முதலானவர்களைக் கால்களாகவும், ஸதாசிவனுடைய மடியையே மேல் பலகையாகவும் கொண்ட கட்டிலே பஞ்ச பிரம்மாஸனம் என்று சொல்லப்படறது.



வெளுப்பான சிவபெருமான் 25-ஆவது தத்துவமான ஸதாசிவத் தத்துவத் தோடு இரண்டறக் கலப்பதால் தேவியோட சாயையால் சிவப்பாகத் தோன்றி தேவிக்கு மகிழ்ச்சியை அளிக்கிறார் என்கிறது ருத்ரயாமளம்! இந்த ஸ்லோக வரிகள் எதையும் நிர்வகிக்கும் ஆற்றலைக் கொடுக்கக் கூடியது.

பத்னி என்கிறவள் கணவனோடு கலக்க வேண்டும். அவள் அப்படிக் கலக்க, அடிமுடி காண இயலாத சர்வேஸ்வரனும் அவள் சயனிக்கும் பொருட்டு தன் மேனியைப் பலகை யாகத் தர வேண்டும் என்பதை எடுத்துக் காட்ட சிவசக்தி தம்பதியரின் லீலை இது.

பண்டாசுரனோடு போரிட்ட களைப்பு லலிதைக்கு. இல்லற வாழ்வில் உறவினர் களோடு, பிள்ளைகளோடு, பொருளா தாரத்தோடு போரிட்ட களைப்பு, தன் பத்னிக்கும் இருக்கும் என்கிறதை ஒவ்வொரு ஆடவரும் புரிந்து கொள்ள, சக்தி தரிசனம் தந்த விதம் இது.

முப்புரத்தையும் சிரித்தே எரித்தோம்! காலனைக் காலால் உதைத்தோம் என்ற கர்வம் ஸதாசிவனுக்கும் இல்லை. ‘இது சிருங்கார பீடம். இங்கே தேவிக்கு நானே சகலமும் என்று சிவனைப் போல பள்ளியறையில் ஆடவர் செருக்கில்லாம தன்னையளிக்க வேண்டும்’ என்று உலகத்துக்குப் புரிய வைச்சவா அம்மையப்பர்.

நெருப்புப் பெட்டியில் தீக்குச்சி உரசமாட்டேன் என்றால் அடுப்பு எப்படி எரியும்? எப்படி உணவை சமைக்கிறது? புருஷன் பெண்டாட்டி கலகலப்பா இருந்தாதான் குழந்தைகள் கல்யாணப் பேச்சை எடுக்கற போது பின்வாங்க மாட்டா! தன் பத்னியோட சந்தோஷமா பிள்ளை குடும்பம் நடத்தணுமின்னு ஆசைப்பட்டா மட்டும் போறாது. வாழ்ந்து காட்டறதுதான் வாழ்க்கை. வாயால் உபதேசிக்கற தில்லே!







சுதந்திரம் வேணுமின்னு விறைப்பா வாழ்ந்தா பொண்ணு விவாகரத்துக்குப் போறதையும் வேடிக்கைதான் பார்க்க முடியும்! வேர்கள் வெளியே தெரியாம அடக்கமா இருந்தாதான் குடும்பம் என்ற விருட்சம் செழிப்பா வளரும்.

‘எல்லாவற்றுக்கும் அதிஷ்டானமா யிருக்கிறவள்’ என்கிறது அடுத்த வரி. அனைத்து சக்திகளும் தேவியிடமே அடங்கியிருக்கு. ‘க்லீம்’ என்று மட்டுமே ஜபித்தவனுக்கு காசி ராஜகுமாரியைக் கல்யாணம் பண்ணி வைச்சு, ராஜ்யத்தையும் மீட்டுக் கொடுத்தா. ‘ஹ்ரூம்’ என்று சொன்ன சத்தியவிரதனை பெரிய பண்டிதனாக்கினா.



அவளை மனசு உருகிப் பிரார்த்திச்சா போதும். நினைச்சது நடக்கும். சில காரியம் நடக்கத் தாமஸ மாகலாம். அதுக்காக முயற்சியைக் கைவிட்டுடப் படாது. காரியம் பெரிசாயிருக்கும். பத்தாயிரம் ரூபாயைக் கையிலே வைச்சுண்டு பங்களா
கிடைக்கலையேன்னு பெருமூச்சு விடலாமா? பணம் சேர்க்கற மாதிரி புண்ணியமும் சேரணும்.

சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் எல்லாம் அவகிட்டதான் ஒடுங்கிக் கிடக்கு.

‘சத்யமே வடிவானவள்’ என்கிறது அடுத்த ஸ்லோகம். காளிதாசன் முட்டிண்டான். அவனைக் காவியங்கள் படைக்க வைச்சா. ஒரு தடவை பவபூதிக்கும், காளிதாசனுக்கும் தர்க்கம் நடந்தது. யார் கவிதை உசந்ததுன்னு இரண்டு பேரும் வாதம் பண்ணினா! கடைசியிலே எல்லாப் புலவர்களுமா சேர்ந்து ஒரு தீர்ப்பு சொன்னார்கள். ரெண்டு பேர் பாட்டை எழுதின ஓலைச்சுவடிகளையும் அம்பாள் பாதத்திலே அர்த்த ஜாம பூஜையிலே வைச்சுடணும். மறுநாள் தேவி சொல்கிற தீர்ப்பை ஏத்துக்கணுமின்னா.

இரண்டு பேரும் சம்மதிச்சு ஏடுகளை பயபக்தி யோட சக்தியோட திருவடிகளிலே வைச்சா. மறுநாள் ரெண்டு பேருக்கும் ரொம்பப் பதட்டம். தீபாராதனை காட்டி ஓலைக் கட்டை எடுத்துண்டு வந்து கொடுத்தார் அர்ச்சகர்.

அதுலே பவபூதியோட ஏட்டிலே ‘இது ஒசத்தி’ங்கற வார்த்தை யைப் பார்த்ததும் காளி தாசர் கண்ணாலே ஜலம் விட்டார். “அம்மா! இப்படிச் சொல்லிட் டியே!” ன்னு சாப்பிடாம உருகினார். ராத்திரி களைப்பிலே கண் அசந்துட்டார்.



கனவிலே வந்த காளிகாம்பா “அட பைத்தியமே! பவபூதி கவிஞன். நீ நானில் லையா? உனக்குள்ளே இருந்து நானே எழுதறப்போ அதை ஒசத்தின்னா அது தற்பெருமையாகாதா? இதுபுரியலியே”ன்னா.

காளிதாசர் சிலிர்த்துப் போயிட்டார். சத்தியம் எங்கெல்லாம் இருக்கோ அங்கேயெல்லாம் அவ இருக்கா. அரிச்சந்திரன் சந்திரமதியை வெட்ட அரிவாளை ஓங்கறப்போ அங்கே கழுத்து துண்டாகலே. பூமாலையா விழுந்தது. அதனாலே பொய்சத்தியம் பண்ணப்படாது.



தவதத்தனின் பிள்ளை உதத்தியன் தகப்பனார் செய்த பாவத்தாலே ஊமையாப் பொறந்து காட்டிலே பதினாலு வருஷம் வாழ்ந்தான் . அவன் பொய் சொல்றதில்லேன்னு உறுதியாயிருந்தான். அதனாலே அவனை எல்லாரும் சத்தியதபன் என்றே கூப்பிட்டா. ஒரு நாளைக்கு ஒரு வராகத்தை ஒரு வேடன் துரத்திண்டு வந்தான். பன்றி உடம்பிலே அம்பு பட்டு இரத்தம் வழியறது.

அதைப் பார்த்து “ஹ்ரூ ஹ்ரூ”ன்னு கத்தினான் சத்தியதபன். பன்றி ஒரு புதருக்குள்ளே போய் மறைஞ் சுண்டது. வேடன் இரைக்க, இரைக்க வந்து ‘அடிபட்ட பன்றி எந்தப் பக்கம் போச்சு’ன்னு கேட்டான். பன்றி யைக் காட்டிக் கொடுத்தா அது இம்சை! தெரியா துன்னா அது சத்தியவிரத பங்கமாயிரும்.

“ஹ்ரு, ஹ்ரூ”ன்னு மறுபடி கூச்சலிட்டான் சத்தியதபன். “ஹ்ரூம்” என்கிறது ஸ்ரீவித்யா பீஜாக்ஷர மில்லையா? தேவி பிரத்யட்சமாகி எல்லா சாஸ்திரங் களும் அவனுக்கு வரும்படி அருள்புரிஞ்சா. ஏன்னா அவள் சத்திய சொரூபிணியாச்சே!



சத்தியதபன் மகாபண்டிதனாகி நாலு வேதங் களையும் மழையா பொழிஞ்சான். சத்தியத்துக்கு முதுமை கிடையாது. என்னிக்கும் அதுக்குப் பதினாறு வயசு. நாமளும் சத்தியத்தையே பேசி வாழ்க்கையிலே முன்னேறது தான் சாஸ்வதமான ஜெயம்.

‘ஸமா க்ருத்யை’ என்கிறது அடுத்த அர்ச்சனா ஸ்லோகம். சிறியவா, பெரியவா, நல்லவா, கெட்டவா எல்லாருக்கும் சூரிய சந்திர வெளிச்சமும், காத்தும், மழையும் பொது. இவை பேதம் பார்க்கறதில்லே! அக்னி யார் தொட்டாலும் சுடும், யார் பத்த வைச்சாலும் எரியும். அம்பாளும் அப்படித்தான். எல்லா அவயவங் களும் எப்படி அவளுக்கு அந்தந்த வடிவுப்படி அமைஞ்சிருக்கோ, அதே மாதிரி அவளும் எல்லாரிட மும் சமமா கருணையைப் பொழியறா.

மஹிஷனுக்கும், சும்ப, நிசும்பனுக் கும்,சண்ட முண்டனுக்கும், ரக்த பீஜனுக்கும், தூம் ராக்ஷனுக்கும் கூட காட்சி தந்திருக்கா.

சௌந்தர்யலஹரியிலே 41-ஆவது ஸ்லோகத்திலே கூட ‘ஸஹஸமயயா லாஸ்ய பரலா’ன்னு வரும். அம்பாள் சிவனுக்கு சமமா நர்த்தனம் ஆடுகிற வள். எந்தச் செயலையும் அவள் சிவனுக்கு சமமா செய்கிறவள் என்கிறதாலேதான் அவளுக்கு ‘ஸமயா’ன்னு பேர்.

சுக்ராச்சாரியார் தன்னோட பெண்
தேவயானிக்கு, மாப்பிள்ளை யயாதி துரோகம் செஞ்சதா நெனச்சார்.



‘ அதனால் “உனக்கு கிழட்டுத் தன்மை வரட்டும்’’னு சபிச்சுட்டார்.

தேவயானி தகப்பனார் கிட்டே அழுதா. மாப்பிள்ளையைக் கூப்பிட்டு புத்தி சொல்லுவேள்னு பார்த்தா இப்படி சாபம் கொடுத்துட்டேளே”ன்னு வருத்தப்பட்டா.

சுக்ராச்சாரியார் சாப விமோசனம் சொன்னார்.

‘‘யாராவது மாப்பிள்ளையோட வயோதிகத்தை வாங்கிண்டா, கொடுத்தவாளோட இளமை யயாதிக் குத் திரும்பவரும்”னார். யயாதி ஒவ்வொருத்தர் கிட்டயும் ‘இளமை’யை கொடுத்து உதவும்படி கேட்டார். ஒருத்தரும் சம்மதிக்கலே!

யயாதியின் இரண்டாவது சம்சாரமான சர்மிஷ்டை யோட பிள்ளை பூரு. அவன் தகப்பனாருக்கு தன்னோட வாலிபத்தைத் தந்தான். ‘மரணம் எப்ப வேணா வரலாம். உயிர் கொடுத்த தகப்பனாருக்கு உயிரோட இருக்கற போதே கேட்டதைக் கொடுக்கற பாக்கியம் வந்திருக்கே’ ன்னு முழுமனசோட கொடுத்தான்.

தகப்பனாருக்காகக் கல்யாணம் பண்ணிக்காம ஆயுசு முழுக்க பிரம்மாச்சாரியா வாழ்ந்தவர் பீஷ்மர்.

பூரு முதுமையை வீணாக்கலே. அப்போ
துவாபரயுகம். nக்ஷத்ராடனம் புறப்பட்டார். வழியிலே நாரதரை சந்திச்சார். பூரு அவர்கிட்டே “அம்மையப் பனை தரிசனம் பண்ணணுமே’’ன்னு சொன்னார்.



திருசூரிலேயிருந்து இரிஞாலக் குடா போற மார்க்கத்துலே சேர்ப்பு கிராமத்துக்குப் பக்கத்திலே இருந்த ஒரு இடத்தைக் காட்டி’ “இங்கே தபஸ் பண்ணு. நீ நினைச்சது நடக்கும்’’னார் நாரதர்.

பூரு அந்த இடத்துலே தபஸுக்கு உட்கார்ந் துட்டார். பூரு தவஸ் பண்ணின தாலே அந்த இடத்துக்கு ‘பூருவனம்’னு பேர் வந்தது. இப்போ ஜனங்க வாய் வழக்கிலே மருவி பெருவன மின்னு ஆயிடுத்து.

பூரு ரொம்ப காலம் தபஸ் பண்ணி அர்த்த நாரீஸ் வரரை தரிசனம் பண்ணினார். அவா மறைஞ்ச பிறகு அங்கே ரெண்டு சிவலிங்கங்கள் ஒரே பீடத்திலே இருந்ததாம். யயாதிக்கு வாழ்க்கை சலிச்சு பூருகிட்டே இளமையைத் திருப்பிக் கொடுத்து, ராஜாவாக்கி பட்டம் கட்டிட்டார். அங்கே பெரிய கோவிலைக் கட்டினான் பூரு.

ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி ராவண சம்ஹாரம் முடிஞ்சு திரும்பறச்சே பெருவனத்திலே ஒரு நாள் தங்கி இரட்டை யப்பர் மகா தேவருக்கு பூஜை பண்ணியிருக்காருன்னு பார்க்க புராணத்திலே இருக்கு. அப்போ கங்கா, யமுனா, நர்மதா, காவேரி நதிகளோட தீர்த்தத்தை வரவழைச்சு அபிஷேகம் பண்ணியிருக்கார் அவர். கிருஷ்ணாவதாரத்திலும், பலராமரோடு வந்து வழிபட்டி ருக்கார். வசிஷ்டரும், விஸ்வாமித்திரரும் வந்து ஆராதிச்சிருக்கா.

ஏன்னா அம்பாள் பிரபஞ்சமெல்லாம் படைச்சவ. அவளை காமேஸ்வரரோட வழிபடறது நிறைய பலத் தைத் தரும். அவளுக்கு ஈடு இணை சொல்ல முடியுமா? அவ எல்லாத்தையும் விட ஒசந்தவ.



தக்ஷப்ரஜாபதி துஷ்டன்னு அம்பாளுக்குத் தெரியாதா? ஆனாலும் நீதான் மகளா வரணுமின்னதும் சம்மதிச்சு வந்தா. ஆனா புருஷனுக்கு அவிர்ப்பாகம் தரப்படலேன்னதும் யாக குண்டத்துலே பாய்ஞ்சுட்டா.

சதிதேவியோட சரீரத்தை பரமேஸ்வரன் எடுத்துண்டு கோர தாண்டவம் ஆடினார். தேவியோட சரீரத்தை சுதர்ஸனச் சக்கரத்தாலே சேதிச்சார் பெருமாள். இருதயம் விழுந்த இடம் சிதா பூமிங்கறது சிவ புராணம். உடனேசிதை அடுக்கி அப்பன் தகனம் பண்ணியிருக்கார். அந்த இடம் ருத்ர பூமியாச்சு. இந்த ஹார்த்பீடத்துலே தேவியோட திருநாமம் ஜெயதுர்க்கா.

அவள் பூரணி. அன்ன பூரணியா விஸ்வநாதருக்கு பிiக்ஷயிட்டவ. அதனாலே ஈஸ்வரன் கையிலே ஒட்டிண்டிருந்த பிரம்ம கபாலமே கழன்று விழுந்துடுத்து.



தேவதத்தன், தனஞ்சயன் ரெண்டு பேரும் கூடப் பொறந்தவா. ஆனா தேவத்தன் மண்ணைத் தொட்டாலும் பொன்னாச்சு. தனஞ்ஜயனுக்கு எதுவும் விளங்கலே! பசிதாங்கமுடியலேயே,ன்னு அழுதான். தாயார் பொறுப்பாளா? சொப்பனத்திலே தபஸ்வியா வந்தா.

“குழந்தே! போன ஜென்மத்துப் பாவம். அன்ன பூரணியை ஸ்தோத்திரம் பண்ணு”ன்னா. அவனும் அப்படியே செஞ்சு பெரிய பணக்காரனாயிட்டான். அவன் தான் அன்னபூரணியைக் காசியிலே பிரதிஷ்டை பண்ணிக் கோவிலும் கட்டினான்’னு அகஸ்தியர் வனவாசம் வந்த ராமபிரானுக்கு இந்தக் கதையைச் சொல்லி, அன்ன பூரணியை நினைச்சுண்டிருந்தா பசி பிரச்சினையே வராதுன்னு, அன்ன பூரணி மந்திரத்தை உபதேசிச்சாராம்.

இதை கிருஷ்ணாவதாரத்திலே பஞ்ச பாண்டவாளுக்குச் சொல்லியிருக்கார் கிருஷ்ணர். அவா அன்ன பூரணி விரதத்தை கடைபிடிச்சி ருக்கா. ‘நாளைக்குக் காலையிலே சூரியனை ஸ்தோத்திரம் பண்ணு’ன்னா அம்பாள். அதனாலே தான் அவளுக்கு அட்சய பாத்திரம் கெடச்சது.

சிவனை மதிக்காத தட்சயாகத்திலே சூரியன் பல்லை இழந்தான். பெருமாள் சுதர்ஸனச் சக்கரத்தைப் பறிகொடுத்தார். நான்கு கொம்பு களும், ரெண்டு தலைகளும், ஏழுகைகளும், மூன்று கால்களும் கொண்ட அக்னி கிளியாகும்படி சபிக்கப்பட்டான்.

“ஆட்டை வாகனமாக் கொண்டவனே! சுயமா சிந்திக்காம மத்தவா சொல்றதுக்காக வந்தியா”ன்னு சீறினார் சிவன். தென் கிழக்கு திசைக்கு அதிபதியான அக்னி திருவாரூக்குப் பக்கத்திலேயுள்ள நன்னிலத்துக்கு வந்தான். காற்று அக்னியைக் கிரனூர் சிவ லோக நாதர் கோவிலுக்குக் கூட்டிண்டு போச்சு. சிவ லோக நாதர் சுயம்புலிங்கம். க்ஷீராம்பிகை அருளாலே சுய உருவம் பெற்றான் அக்னி. தேவியோட கோபம் க்ஷணத்திலே மறைஞ்சுடக் கூடியது.



பற்றற்றவள் என்கிறது அடுத்த அர்ச்சனா நாமாவளி. இந்த லோகத்திலே முக்கால் வாசி கடல்; கால் வாசி தான் நிலம் என்கிறது விஞ்ஞானம். ஆனா கடலுக்கு மேலேயும் ஆகாயம் இருக்கு. நம்ம வாசஸ்தலத்தைப் பூட்டிப் போட்டிருந்தாக் கூட தூசியடையறது. திறந்துகிடக்கிற ஆகாயம் நிர்மலமாயிருக்கு. ஆகாயம் மாதிரியானவ அம்பாள். அவளுக்கு நல்லவா, கெட்டவா, ஏழை, பணக்காரா, அழகானவா, குரூபி என்கிற வித்தியாச மெல்லாம் கிடையாது. யார்கிட்டேயும் பற்றும் கிடையாது. அதனாலேதான் ஆத்மாவிலே அவ அணுவா பரவியிருக்கா. யாருடைய ஜீவனும் வேதனைப் படுகிறமாதிரி பேசவோ, நடந்துக்கவோ கூடாது.



ஆத்மாவுக்கு அழுக்கு கிடையாது. சோம்பேறித் தனமும் இல்லே. இயங்குன்னா உடனே செயல்படும் ஆத்மா. நாமபக்தி காட்டினா பரதேவதை நமக்கு அருள் புரிவா.



ஸத்வம், ரஜஸ், தமஸ் என்கிற மூன்று குணங்களும் அம்பிகைக்கு உண்டு. 1803-ஆம் வருஷத்தில் ஈரோடு அருகே இருந்த பவானியில் அப்போதைய கோவை கலெக்டர் வில்லியம் காரோ என்கிறவர் முகாமிட்டிருந்தார். பவானிநதி காவேரியுடன் சங்கமமாகிற இடத்துக்கு அருகே விடுதியில் அவர் தங்கி இருந்தார். அம்பாள் வேத நாயகியோட மகிமையை தன் கீழே வேலை பார்ப்பவர்கள் சொல்லச் சொல்ல அப்பேற்பட்ட அம்பாளை நாமும் தரிசனம் பண்ணணும்னு வில்லியம் நெனைச்சார். தன் ஆசையை தாசில்தார் கிட்டே சொன்னார். தரிசில்தார் கோவிலோட கிழக்கு மதிளிலே ஒரு துவாரம் போட்டு அம்பாளை தரிசிக்க வழிபண்ணிக் கொடுத்தார்.

ஐப்பசி மாதம். மழை கொட்டறது. நடுராத்திரி. கலெக்டர் தன்னை மறந்து தூங்கிண்டிருக்கார். யாரோ தட்டி எழுப்பறா. அரைக் கண்ணை முழிச்சுப் பார்த்தார். ஒரு சின்னப் பெண் அவர் கையைப் பிடிச்சு தரதரன்னு இழுத்துண்டு போறா. எதுக்குன்னு தெரியாட்டாலும் இரும்பைக் காந்தம் கவர்ந்த மாதிரி பின்னாலே போறார்.



பெரிய சத்தம் கேட்டது. அந்த பழைய பயணிகள் விடுதி மடமடன்னு சரிஞ்சு விழறது. ஒரு விநாடி தாமதிச்சிருந்தாலும் என்ன ஆகியிருக்குமின்னு திகைச்சுப் போயிட்டார் வில்லியம்.

அப்புறம், ‘அந்தப் பொண்ணுக்கு நன்றி சொல்லலாம், நடுராத்திரியிலே அவளுக்கு இந்தக் கட்டடம் இடியுமின்னு எப்படித் தெரிஞ்சதுன்னு’ கேட்க தேடினார். உரக்க அழைச்சுப் பார்த்தார். அறிஞ்ச பிறகு கண்ணிலே தென்படுவாளா? வந்தது தேவின்னு கூட இருக்கிறவா புரியவைச்சா.

11-1-1804 அன்னிக்கு தந்தத்திலே பல்லக்கு பண்ணி காணிக்கையாக் கொடுத்தார் வில்லியம். இது அம்பாளோட சத்வகுணத்துக்கு ஒரு சின்ன உதாரணம்.

அம்பல் என்கின்ற பிரம்மபுரியில் அருள் புரிகின்ற பிரம்மபுரீஸ்வரரை தரிசிக்க ஆகாயம் வழியாகப் போய்க் கொண்டிருந்தார் துர்வாச முனிவர். மதலோலைன்னு ராட்சசமங்கை ஒருத்தி அவரை வழிமறிச்சா. என்ன வேணுமின்னு கோபமா கேட்டார். நீங்க எனக்கு பர்த்தாவாகணுமின்னா.

“பக்திக்கு எதிரியே காமம்தான்! குழந்தை வேணுமின்னு தானே ஆசைப்படறே! என் ரஜோ குணமும், உன் தாமஸ குணமும் சேர்ந்து இப்பவே ரெண்டு குழந்தை பிறக்கும்”னு சொல்லிட்டுப் போயிட்டார். இது வரம் மாதிரியிருக்கற சாபம்!

மதலோலை பயந்து போய் கீழே இறங்கினாள். அதுக்குள்ளே ஒரு குழந்தை பிறந்துடுத்து. அம்பரத்திலே (ஆகாயம்) பொறந்ததாலே அதுக்கு அம்பரன்னு பேராயிடுத்து. அடுத்தாப்பிலே பொறந்த சிசுவுக்கு அம்பன்னு பேர் வைச்சா.

இரண்டு பிள்ளைகளும் மடமடன்னு வளர்ந்தா. குழந்தைகளை சுக்ராச்சார்யார் கிட்டே படிக்க அனுப்பினா மதலோலை. இரண்டு பேரையும் சிவனை நோக்கி தபஸ் பண்ணச் சொன்னார் அசுரகுரு அவாளும் கடுமையா தபஸ் பண்ணினா. சிவன் பிரத்யட்சமானார். நிறைய ஆயுள், சுகம் , பலம் எல்லாம் வாங்கிண்டா. கடைசியிலே ஒரு சந்தேகம்.

“எங்களுக்கு யாராலே மரணம் வரும்னு” கேட்டா. “நீங்க ஒற்றுமையா இருக்கிற வரை உங்களுக்கு மரணம் சம்பவிக்காது’’ன்னு சொன்னார் பசுபதீஸ்வரர்.

அவ்வளவு தான். வழக்கம் போல எல்லா உலகத்தையும் ஜெயிச்சா. அஷ்டதிக் பாலர்களை ஓட ஓட விரட்டினா. தங்களை விட யாருமே பலசாலியாகக் கூடாதுன்னு ரிஷிகளை தபஸ் பண்ண விடாம இம்சிச்சா. எல்லாத்தையும் விட அழகான ஸ்த்ரீகளை கவர்ந்துண்டு வந்தது தான் பெரிய பாவமாயிடுத்து.

“இப்படி வரம் கொடுத்துட்டேளே”ன்னு தேவர்கள் ரிஷிகளெல்லாம் கைலாசத்துலே வந்து முறையிட்டா. ஸ்வாமி இடது பக்கம் திரும்பினார்.


சக்திக்கு ஏற்கெனவே கோபம். தன் தமை யனைப் பார்த்தா. சகோதரியோட எண்ணத்தைப் புரிஞ்சுகிட்டு வயோதிக பிராம்மணனாக மாறினார் மகாவிஷ்ணு. அம்பிகை அற்புத ரூபத்தோடு தமைய னோடு நடந்தா.

ரெண்டு பேரும் அம்பரன் அரண்மனைக்குப் போனா. “பெரியவரே! இவ உங்க உங்க குமாரியா?”ன்னு விசாரிச்சான் அம்பரன்.

“அம்பரா! நான் நிறைய சமாசாரத்திலே உனக்கு விட்டுக் கொடுத்திருக்கேன். இந்த அழகி எனக்குத்தான். நீ பேசாம இரு”ன்னான் அம்பன்.



அம்பாள் நினைச்சது நடந்தது. இரண்டு பேருக்கும் தர்க்கம் வலுத்தது. அந்தப் பெண் கிட்டேயே கேட்போமின்னு சொல்லி “சுந்தரி! எங்க ரெண்டு பேரிலே யாரை உனக்குப் பிடிச்சிருக்கு?” ன்னு கேட்டா.

“என் தகப்பனார் சொல்கிறபடி செய்வேன்”னா தேவி.

ஸ்ரீமந்நாராயணன் “ரெண்டு பேர்லே யார் பலசாலியோ அவாளுக்குப் பெண்ணைக் கொடுத்துடறேன்”னார். சிவனோட நிபந்தனையை மறந்து ரெண்டு பேரும் மல்யுத்தம் பண்ணினா. முட்டி மோதிண்டா. கடைசியிலே அம்பன் சதைப் பிண்டமாய் விழுந்தான். அம்பரன் கொக்கரித்தான்.

வைகாசி விசாகம். செவ்வாய்க்கிழமை. கன்னியை அணைக்கக் கையை நீட்டினான் அசுரன். தேவி மண்ணையும், விண்ணையும் நிறைத்தபடி பயங்கர துர்க்கையானாள். அம்பரன் எருமைக் கடாவாகி தன் கூரிய கொம்புகளால் காளிதேவியைக் குத்த வந்தான்.

ஆனா, அம்பரன் காளி தேவியோட வாளால் வெட்டுப்பட்டான். அப்படியும் எழுந்தவனை தரையில் தள்ளி, இடது பாதத்தை அவன் மார்பில் அழுத்தி சூலா யுதத்தாலே அவன் குடலை எடுத்து, மாலையாப்
போட்டுண்டா. இந்த இடத்திலே அம்பிகையோட ரஜோ குணம் வெளிப்பட்டது. பக்தாளோட தேவைதான் அவளோட ஆசை.


திருவாரூருக்குப் பக்கத்திலே தியானபுரம்னு ஒரு சின்ன கிராமம். கலியுகத்திலே இங்கே சிவன் தியானம் பண்றதா சொல்லப்படறது.

வல்லாள மகாராஜா பெரிய சிவபக்தர். பட்ட மகிஷி குழந்தையை சுமந்திண்டிருக்கா. ராணிக்குத் தன் பிள்ளை சிரஞ்சீவியாயிருக்கணுமின்னு ஆசை. அதிலே தப்பில்லே! ஆசை பேராசையானா? அந்தக் காலத்திலே யுத்தத்துக்குப் போகாம இருக்க முடியாது. யுத்தத்திலே தன் பிள்ளை உடம்பிலே
யிருந்து சிந்தற ஒவ்வொரு துளி ரத்தத்திலே யிருந்தும் அவனைப் போலவே ஒரு குமாரன் உண்டாகணு மின்னு சோமவாரம் தோறும் சிவனுக்கு அபிஷேகம் பண்ணி, லட்சார்ச்சனை செய்தா.



இரத்த பீஜன் இப்படித்தான் வரம் வாங்கினான். அழியாம இருந்தானான்னு யோசிக்கலை! விபரீத ஆசை! அத்தனை பிள்ளைகளை பிரசவ சிரமம் இல்லாம பார்க்க நினைச்சா. அத்தனை பேரும் சேர்ந்து உலகத்தையே ஜெயிப்பான்னு கணக்குப் போட்டா.

ராஜாவையும் வற்புறுத்தி காட்டுக்குப் போய் தபஸ் பண்ண வைச்சா. வரம் கெடச்சது. இயற்கையை மாத்த மனுஷாளாலே முடியுமா? தேவர்களெல்லாம் அம்பாள் கிட்டே முறையிட்டா. முளையிலே கிள்ளலேன்னா இன்னொரு இரத்த பீஜனாயிடுவானேன்னு பார்வதியும் யோசிச்சா. வரம் கொடுத்தது புருஷன். முளையிலே கிள்ளாட்டா கோடாலியல்லவா தேடணும்!

ரத்தம் சிந்தினாதானே! அந்தக் குழந்தை பிறந்து நிறையப் பேரைக் கஷ்டப்படுத்தி பாவத்தைச் சேர்க்காம தடுக்க நினைச்சா.

பாண்டிய நாட்டிலேருந்து ஆயிரம் சுகப்பிரசவம் பார்த்த மருத்துவச்சி வர ஏற்பாடு பண்ணியிருந்தார் ராஜா. அடுத்த வாரம்தான் குழந்தை பிறக்கும்னு உள்ளூர் மருத்துவச்சி சொல்லியிருந்தா. ஆனா உமாதேவியோட திருவருளாலே ராணிக்கு இடுப்புவலி தொடங்கிட்டது!

பாண்டி நாட்டு மருத்துவச்சி வடிவத்திலே வந்தா அம்பாள். கையிலே மருந்துப்பெட்டி. பின் கொசுவக்கட்டு. ராஜா நிம்மதியோட அவளை வரவேற்றார்.

அறைக்குள் அறை. கூட இருந்த பெண்களை அடுத்த அறைக்குப் போகும்படியா உத்தரவிட்டா ஈஸ்வரி. அம்பாள் கட்டளையை யாரால் மறுக்க முடியும்? கதவைத் மூடித் தாளிட்டாள். 18 கை காளியாக மாறிய தேவியைப் பார்த்து மூர்ச்சையாகி விட்டா அரசி.

மகாராணியைத் தூக்கி மடியில் போட்டுக் கொண்டா. விநாயகரும், குமரனும் கிடந்த மடியாச்சே! அது சோமவார அபிஷேக பலன்! குழந்தையை அதன் ஒரு சொட்டு உதிரமும் சிந்தாதபடிக்கு எடுத்து இடது கையிலே வைச்சுண்டா.

இதற்குள் அடுத்த அறையிலிருந்த உள்ளூர் மருத்துவச்சிகள் ராஜாகிட்டே போய் நடந்ததைச் சொன்னா. இதென்ன, ஒருத்தி கூட உதவிக்கு வேண்டாமான்னு ராஜா திகைச்சார். ஏதோ விபரீதம்னு புத்தி சொல்லித்து. கதவை உடைச்சு உள்ள போனா, ருத்ர காளியா நின்னா அம்பாள்!

‘தாயே, மன்னிச்சுடு’ன்னு கால்லே விழுந்தார் ராஜா. அவரையும் மிதிச்சு காலடியிலே கிடத்தினா. குழந்தை கத்தியை எடுத்த மாதிரி ராஜா - ராணியோட புத்தி வேலை செஞ்சது. சிவபெருமான் வந்து அம்பாளை சாந்தப்படுத்தி ராஜாவுக்கு உயிர் பிச்சை கொடுத்தார்.

‘பெரிய’ நாயகியான உமாதேவி, ராணியையும் எழுப்பினா. சாதாரண வீரனா குழந்தையை மாத்தி ராஜாகிட்டே ஒப்படைச்சா. பெரிய நாயகி அம்மன் இன்னிக்கும் இடது கையிலே குழந்தை, மடியிலே ஒரு பெண், காலடியில் வல்லாள மகாராஜா என்று தான் காட்சி கொடுக்கறா. இது அம்பிகையோட தாமஸகுண வெளிப்பாடு.


விபரீதமா ஆசைப்படக் கூடாதுங்கறதை உணர்த்தறது அம்பாளோட தர்மஸ வடிவம் தான். காளி, துர்க்கைங்கறதெல்லாம் கௌரியாயிருந்து இரத்த பீஜனை சம்ஹாரம் பண்ண முடியாது.

காய்கறி நறுக்கணுமின்னா அருவாள் மணையோ, கத்தியோ வேணும். தூங்காம இருந்தா தேக ஆரோக்கியம் கெட்டுப்போகும் தூங்கவைக்க நித்திரா தேவியா வரா.

‘ஸகலேஷ்டதாயை என்கிறது அடுத்த ஸ்லோக நாமா. இதற்கு விரும்பியதையெல்லாம் அளிப்பவள் என்கிறது பொருள். அதற்காக தேவியை ஸ்தோத்தரித்து விட்டுப் பேராசைப் படலாம் என்று அர்த்தமில்லை!

தெளிந்த சிந்தையுடையவர் எந்தெந்த உலகத்தை மனதால் சங்கல்பிக்கின்றாரோ, உரிமையுள்ள, போகங்களை விரும்புகின்றாரோ அவற்றை அடைவதில் தடையிருக்காது என்று முண்டோப நிஷதமும் சொல்கிறது.

அதுக்காக குழந்தை கத்தியைக் கேட்டு அடம் பிடிக்கிறதென்று கொடுக்க முடியுமா?

தாக்ஷhயணியோட நாபி விழுந்த இடம் காஞ்சிபுரம், அங்கே ‘ஆகாசபூ பதி’ன்னு ஒரு ராஜா. அவன் குழந்தை பாக்கியம் இல்லாமல் அம்பாளைப் பிரார்த்திச் சான். காமாக்ஷி கிருபையாலே பிள்ளையார் அம்சமா ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு துண்டீ ரன்னு பேர் வைச்சா. பேர் சுட்டற விழாவன்னிக்கு பெரிசா அன்னதானம் நடத்தினார் ராஜா.



மளிகை சாமானெல்லாம் தரமா இருக்கான்னு ராணி சோதிச்சா பயத்தம்பருப்பு மேலாக இரண்டு சாவியா இருந்ததைப் பார்த்துட்டா சாவின்னா விரலாலே நசுக்கினா உடைஞ்சுடும். ஒரு வேளை மொத்தமும் இப்படியிருந்துட்டா என்ன பண்ணற துன்னு அடியிலேயிலே கைவிட்டு ஒரு கை அள்ளிப் பார்த்தா நன்றாகத்தான் இருந்தது என்பதால் திருப்தியாயிட்டா.

ராணி அடியிலே கைவிட்டு அளைஞ்சப்போ மோதிரத்திலுள்ள ஒரு தங்க முத்து பருப்பிலே விழுந்துடுத்து. தங்கத்திலே முத்துக்களைச் செஞ்சு ஸ்வஸ்திக் மோதிரமா போட்டுண்டிருந்தா. ராணியும் விழா மும்முரத்துலே அதை கவனிக்கலே!

பயத்தம் பருப்பை வேகவைத்து வெல்லப் பாகில் போட்டுக் கிளறி கூட, பச்சை கற்பூரம், கிராம்பு, ஏலம், ஜாதிக்காய் எல்லாம் போட்டு பூரணமாக்கி கொழுக்கட்டை பண்றது விசேஷபட்சணம். அருமைப் பிள்ளையோட பேரிட்டுக் கல்யாணமாச்சே! அதைச் செய்யச் சொன்னார் ராஜா. தங்க முத்து வெல்லப்பாகிலே பரிசுத்தமாகி பூரணமாக கரண்டியிலே அடிபடாம வெள்ளை மாவுக்குள்ளே உட்கார்ந்துடுத்து.

அன்னதானத்துலே சாப்பிட அம்பாளும் வந்திருந்தா. அந்த தங்க முத்து இருந்த மோதகம் அம்பாள் இலையிலே விழுந்தது. அம்பிகையும் அதை முழுசா முழுங்கிட்டா. ஒண்ணு கொடுத்தா ஒன்பது தரவளில்லையா? காஞ்சிபுரத்திலே தங்க மழையைப் பொழிய வைச்சா.

துண்டீரன் ஆட்சி பண்ணினதாலே இந்தப் பகுதிக்கு தொண்டை மண்டலமின்னு பேர் வந்தது. காஞ்சிபுரம் போனா துண்டீரர் சன்னதியைப் பார்த் துட்டு வரலாம். துண்டி கணபதி ஐஸ்வர்யத்தைத் தரக்கூடியவர். அம்பாளின் இருபாகடாட்சத்துக்கு இது சின்ன உதாரணம்.

பஞ்சதசாக்ஷரியின் பதின்மூன்றாவது எழுத்தான
கார வடிவினள் என்கிறது அடுத்த நாமாவளி. ‘க’ என்றால் பிரம்மா, ஆ (க+ஆ=கா) என்றால் மகாவிஷ்ணு வையும். ‘ம’ என்கிற எழுத்து மகேஸ்வரனையும் குறிக்கிறது. ‘காம’ என்கிற வார்த்தை மும்மூர்த்தி களையும் குறிக்கிறது. மும்மூர்த்திகளையும் ஆட்சி செய்கிறவள் காமாக்ஷி என்கிற திருநாமத்தைப் பெற்றாள்.



‘கா’ன்னா கலைமகள். ‘மா’ன்னா மகாலக்ஷ்மி. ‘அக்ஷி’ன்னா விழிகளாகக் கொண்டவள்’னு ஒரு அர்த்தம் வரது. சரஸ்வதி, திருமகள் இரண்டு பேரும் காமாட்சியோட இரண்டு கண்களா சொல்லப் படறது. ‘காம’ன்னா ஆசை. அடியார்கள் ஆசைப்படறதை நிறைவேத்தறவள் அம்பாள்.



கல்யாணி, காந்திமதி, கற்பகவல்லி, கமலாம் பிகை, கன்யாகுமாரி, காயத்ரி, கனகவல்லி, இப்படி பெயர்கள் வித்தியாசப்படலாம். ஆனால் அவள் அருளில் எந்த பாரபட்சமுமில்லை.

காவியங்களாய் விளங்குகிறவள் என்கிறது அடுத்த அர்ச்சனை. வால்மீகி, காளிதாசன் போன்றவா காவியம் படைச்சிருக்கா. மனுஷாளையே காரியம் ஆகணுமின்னா இந்திரன் சந்திரன்னு வர்ணிக்கிறோம். அம்பாள் சகல கலாவல்லி!

“மாணிக்க வீணா முபலாலயந்தீம்” என்று தொடங்கும் சியாமளா தண்டகத்தில் கவி, அம்பிகை மடியிலிருக்கிற வீணையில் மாணிக்கம் இழைத்திருக் கிறதா பாடறார். மஹேந்திர பர்வதத்தோட சிகரம் நீலமாயிருக்கும். அதுபோல பிரகாசம், ஆனா மலை போல கடினமாயில்லாம மென்மையான சரீரங்கறார்.

“ஜய லீலா ஸுகப்ரியே”. “விளையாட்டுக்காக இருக்கும் கிளியிடம் பிரியமுள்ளவளே! நீ என்றும் எதிலும் ஜெயிப்பவள்! அமிர்த சாகரத்தின் மத்தி யிலே, மனசைக் கவரக் கூடிய சிந்தாமணித் தீவிலே, செழித்த உயரமான வில்வ வனத்துக்குள்ளே,
கற்பக விருட்சங்களோடு கூடின கதம்பச் சோலையை வாசஸ்தலமாகக் கொண்டிருக் கிறவளே!” என்று எப்படியெல்லாம் வர்ணிச்சி ருக்கார்!

பாதாதி கேசம் ஒண்ணு விடாம வர்ணிச்சு வணக்கம் சொன்னப்பறம்தான் காப்பாத்து
வியான்னு கேட்கறார். இந்த மாதிரியான காவியங் களில் அம்பாள் லயிச்சிருக்கறதா சொல்லப்படறது.

காமேஸ்வரரோட மனசை ஆகர்ஷிக்கறதா அடுத்த நாமா சொல்றது. காமேஸ்வரரோட பிராண நாடியே அம்பிகைதான்! காமேஸ்வரராலே ஆலிங்க னம் செய்யப்பட்டவள் தேவி. தன்னுடைய இடது தொடையிலே தேவியை உட்கார்த்தி வைச்சிண் டிருக்கார் அவர்.

மன்மதனை நெற்றிக் கண்ணாலே எரிச்சவர் சிவன். பிரம்மாவோட தலையை நகத்தாலே கிள்ளின வர்; அந்தகாசுரன், இரண்யாட்சனோட பிள்ளை. அந்தகனை காலின் கீழே போட்டு மிதித்து சூலத்தை அவன் மேலே பாய்ச்சினவர், திரிபுரங்களையும் ஒரு சிரிப்பாலே சாம்பலாக்கின புண்ணிய மூர்த்தி, காலாலே சக்கரம் எழுதி அதை ஏவி ஜலந்திராசுரனை சம்ஹாரம் பண்ணினவர், கஜாசுரனுடைய தோலைக் கிழித்து போர்வையா போர்த்திண்டவர், யமனைக் காலால் உதைச்சு செயலிழக்கச் செய்தவர் சிவபெருமான்.

“காமாரி காமாம் கமலாஸனஸ்தாம்” அப்படின்னு காமாக்ஷி ஸ்தோத்திரத்திலே சொல்லப்படறா தேவி. ‘மாரனை ஜெயிச்ச மஹேஸ்வரனையும் உன் சௌந்தரியம் மயங்கச் செய்கிற
தே’ன்னு கவி சொல்றார்.

“ம்ருஷா க்ருத்வா கோத்ர” என்று தொடங்குகிற சௌந்தர்ய லஹரி ஸ்லோகத்தையும் ஆதிசங்கர பகவத் பாதாள் இதே லயத்தில் தான் எழுதியிருக்கா. இதை தினமும் அரைமணி நேரம் பாராயணம் பண்ணினா சத்ரு பயமே இருக்காது. பேய், பிசாசுகள் அண்டாது.



பிறந்த வீட்டைப் பத்தி கேலி பண்ணினா ஸ்த்ரீ களுக்குக் கோபம் வரும். அம்பிகையும் அதுக்கு விதி விலக்கில்லை. வேடிக்கையா நையாண்டி பண்ணிட்டு காத்யாயனியை சமாதானப் படுத்த சாஷ்டாங்கமா கங்கை தளும்ப, சந்திரன் உரச அம்பிகையோட பாதங் களிலே விழுந்துடறார் சிவன் என்கிறார் குருநாதர்.

‘பர்த்தாவோட நெற்றியிலே உன் பாதம் படறது! “மன்மதனுக்கு அது ரொம்ப சந்தோஷமாயிருக்காம்! “நான் பஸ்பமானாலும் ஆரம்பிச்ச காரியம் சுபமா முடிஞ்சுதே” ன்னு திருப்திப்பட்டுக்கறானாம்! ரகசியத்துலே நடந்தது அவனுக்கெப்படித் தெரிஞ்சதுன்னு கேள்வி வரும்! ஆ, பர்த்தா தன் கால்லே விழறதாவதுன்னு தேவி காலை இழுத்துக்க, சும்மா இருக்க மாட்டாம, சிலம்புகள் ‘கிலி கிலி’ன்னு ஓசை எழுப்பி, அது ‘ஜயகோஷம் இல்லியா’ ன்னு தேவர்களையெல்லாம் கவனிக்க வெச்சதாம்! சௌந்தர்ய லஹரியிலே 86ஆவது ஸ்லோகம் இது.


“67ஆவது ஸ்லோகத்திலே “கிரீ சேனோதஸ்தம் முஹுர தரபானா குலதயா” என்கிற இரண்டாவது வரியிலேயும் நுனிக்கையாலே தேவியுடைய மோவாயைப் பரமேசுவரர் ஆசையோட உயர்த்தறதா ஆசார்யாள் சொல்லியிருக்கா. இதைத்தான் திரிசதியோட 243 ஆவது நாமாவளியிலே நாம பார்க்கறோம்.

“கதாஸ்தே மஞ்சத்வம்” என்கிற 92 ஆவது சௌந்தர்யலஹரி ஸ்லோகத்திலும் நாலாவது வாக்கியமான “சரீரி சிருங்காரோ ரஸ இவ த்ருசாம் தோக்தி குதுகம்” என்கிறதோட அர்த்தம்: சதாசிவன் வெள்ளை நிறம். கட்டிலுக்கு மேல் விரிப்பு போலே இருக்கார். தாயே! உன்னோட சிவப்பு நிறம் அவர் மேலே பிரதிபலிச்சு சிருங்கார ரஸமே வடிவமாய் உன்னோட கண்களுக்கு ஆனந்தத்தைக் கொடுக்கறார்.

காமேஸ்வரருக்கு அம்பிகை சுகத்தைத் தருகிறதாக 247ஆவது அர்ச்சனா நாமாவளி சொல்றது. காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வர லிங்கத்தில் அம்பிகை ஆலிங்கனம் பண்ணின அடையாளமா வளைத் தழும்பை தரிசிக்கலாம். “செம்பொன் மலைவல்லி தழுவக் குழைந்த மேனிப் பெருவாழ்வு”ன்னு இதை சேக்கிழார் பெருமானும் குறிப்பிட்டிருக்கறார்.

கும்பகோணம் பக்கத்துலே இருக்கிற தாரா சுரத்துக்கு ரெண்டு மூணு மைல் தூரத்துக்குள்ள சக்தி முற்றம்னு ஒரு ஸ்தலம். சத்தி முத்தம்னு சொல்லுவா. உமாதேவியார் பகவானை உகந்து ஆலிங்கனம் பண்ணி முத்தமும் கொடுத்த nக்ஷத்திரம் அதுன்னு கர்ண பரம்பரைக் கதை இருக்கு. யோகேஸ்வரரை இந்தப்படி பார்வதிதேவி சந்தோஷப்படுத்தறா. தென்னாற்காடு மாவட்டத்திலே திருக்கோவிலூருக்குப் பக்கத்திலே ‘ரிஷி வந்தியம்’ன்னு ஒரு nக்ஷத்திரம். ஊருக்கு நடுவிலே அர்த்தநாரீஸ்வரர் ஆலயமொண்ணு இருக்கு.

ஒவ்வொரு நாளும் அர்த்த ஜாம பூஜையிலே இங்கே லிங்கத்துக்கு தேன் அபிஷேகம் நடத்தறா. அப்போ அம்பிகையோட வடிவத்தை இதிலே தரிசிக்கலாம். தேன் முழுவதும் வழிஞ்ச பிறகு நிழல் வடிவமா தெரிஞ்ச அம்பிகை மறைந்து லிங்கம் வழவழப்பாயிடும். அம்பாளும் ஸ்வாமியும் இங்கே ஒருத்தரோடொருத்தர் பிணைஞ்சிருக்கா. இந்த லிங்கம் இந்திரன் பிரதிஷ்டை பண்ணி பூஜித்தது. அவனுக்கு அர்த்தநாரீஸ்வர தரிசனம் கிடைச்சது. ஸ்வாமி, அம்பாள் இரண்டு பேருக்குமே தேன் அபிஷேகம், நைவேத்யம் இரண்டுமே ஒசந்ததாச் சொல்லப்படறது.

சென்னை பெசன்ட் நகர் இரத்தினகிரீஸ் வரர் ஆலயத்திலே உமா ஆலிங்கன மூர்த்தியை பிரதோஷ காலத்தில் பார்க்கலாம். சென்னைக்குப் பக்கமா இருக்கிற மண்ணி வாக்கத்துலே ஒருவரை ஒருவர் அணைத்த படியான பரஸ்பர ஆலிங்கன மூர்த்தியை தரிசிக்கலாம்.



சிவப்பிரேமை என்கிற இன்பத்தை அடியார்களுக்குத் கொடுக்கிறவள் அம்பாள். பரதேவதைதான் அகில லோகத்துக்கும், ருத்ரருக்கும் இன்பமளிக்கிற ஒளஷதம் என்கிறது ஸ்ரீருத்ரம்.

தக்ஷிணாமூர்த்தி எல்லா இடத்திலேயும் தனியாகத்தான் இருப்பார். திருப்பதி போறவழியில் ஊத்துக்கோட்டை பக்கம் சுருட்டப்பள்ளின்னு ஒரு nக்ஷத்திரம். அங்கே விஷமுண்ட பரமேஸ்வரர் சயன கோலத்திலே காட்சிதரார். அம்பாள் மடியிலே தலைவைச்சிருக்கார். இதே ஸ்தலத்துலே தேவியை மடியிலே அமர்த்திண்டிருக்கிற தாம்பத்ய தக்ஷிணா மூர்த்தியையும் பார்க்கலாம்.

‘‘அழகிய புன்னகையால் சிறப்புற்ற திருவாயில் திகழும் பச்சைக் கர்ப்பூரத்துடன் கூடிய தாம்பூலத்தைத் தரிக்கின்றவளே! கோவைப்பழம் போன்ற அதரத்தை உடையவளே!” இப்படியெல்லாம் சியாமளையை வர்ணித்த காளிதாசர் “உன்னை நம்பி மோசம் போனேனே! என்னைக் கைவிட்டாயே” என்று நிந்தா ஸ்துதியும் பண்ணியிருக்கறார்.

Thursday, June 29, 2006

Azhagan Aravamuthu Ammaiyarammai

Ellai Theivangal

கிராம தேவதைகள்
அழகன் அரவமுத்து அம்மையரம்மை!
மதுரை வடக்கு மாசி வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தான் அரவமுத்து. பல்லக்கின் திரைச் சீலையை நூலளவு விலக்கி வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்த தாசி லட்சுமி அரவமுத்துவின் தேஜஸைக் கண்டு விதிர் விதிர்த்தாள். பல்லக்கு அரவமுத்துவின் அருகில் சென்றதும் “நில்லுங்கள்” என்று உத்தர விட்டாள் லட்சுமி.




“நிலவொன்று பல்லக்கில் போகிறதோ?” என்று குறும்பாகக் கேட்டான் அரவமுத்து.

“உஷ்! அதிகம் பேச்சு வேண்டாம்! திரைச்சீலையும் அழகேச மன்ன னிடம் உளவு சொல்லும். என் பெயர் லக்ஷ்மி. நான் அழகாபுரி வேந்தனின் உடமை. நீங்கள் என் வீட்டுக்கு வருகிறீர்களா? அல்லது உங்கள் இருப் பிடத்துக்கு நான் வரட்டுமா? இது என் முகவரி” என்று தாசி கிசுகிசுக்க அரவமுத்து வாயடைத்துப் போனான்.

தோகை மயில் குயில் குரலில் பேசுமா? என்று வியந்தான். “ஒத்தைக் காலன் விளையில் பெற்றோர் தவித்திருப்பர். இன்றைக்கு எட்டாம் நாள் சந்திப்போம்” சட்டென்று முடிவெடுத்து அவன் சொன்ன பிறகு “புறப்படுங்கள்” என்று மிழற்றியது லட்சுமிக் கிளி.

மதுரையைச் சுற்றிப் பார்க்காமலே திட்டத்தை மாற்றிக் கொண்டு ஒத்தைக்காலன்விளைக்குச் சென்றான் அரவமுத்து.

“ஆத்தா! அண்ணன் வந்துட்டாக!” தங்கை அம்மையரம்மையின் கூவல் ஊரையே வீட்டில் கூட்டி விட்டது.

மகனுக்கு ஆரத்தி சுற்றி பொட்டு வைத்தாள் சிவகாமி. “ராசா! சந்திரக் குட்டி அண்ணாவி கிட்டேதான் எல்லாம் படிச்சாச்சே! அப்புறம் எங்கபோனே? என்று மகனைத் தடவிக் கொடுத்தபடி கேட்டார் சிற்றரசர் இணை சூரமாயர்.

“மல்யுத்தம், சிலம்பம், குதிரையேற்றம் எல்லாம் படிக்கணுமின்னே திண்டுக் கல்லிலேயிருந்து சுந்தரப் பணிக்கரை வரவழைச் சோம்! இந்தக் கோட்டை யைக் கட்டியாள இவ்வள வும் போதாதுன்னு மலை யாளத் துக்குப் போயி மந்திரஜால மெல்லாம் கத்துக்கிட்டி யாக்கும்” என்று நொடித்தாள் அத்தை.

“அம்மா! உங்களுக்கு தங்கச்சி கிட்டதானே பிரியம் அதிகம்” என்று தாயை வம்புக் கிழுத்தான் அரவமுத்து.




“ஏன் அப்பிடிச் சொல்லுதே? மீனாச்சியும், சொக்கநாதரும் ஆளுறதுக்குப் புள்ளையையும், ஆசைக்குப் பொண்ணையும் தந்திருக் காருன்னு தான் நெனைச்சி ருக்கோம்! அக்கினி நக்ஷத்திரத்திலே பொறந்த வனாச்சே! அதான் நெருப்பா வார்த்தையைக் கக்குறே” என்றாள் சிவகாமி.

“தோ, இதுதான் அண்ணன் எப்பவரும், எப்பவரு மின்னு கேட்டு தொளைச்சிடுச்சு” என்று மகளைச் செல்லமாகத் தலையில் தட்டினார் தந்தை.

ஒரு வாரம் போனதே தெரியவில்லை! எட்டாம் நாள் மீனாட்சியைப் பார்க்க என்று சொல்லிவிட்டுப் புறப் பட்டு விட்டான் அரவமுத்து.

வாசலிலேயே காத்திருந்து வரவேற்றாள் தாசி லக்ஷ்மி. பல்லக்குத் தூக்குபவர்களும் மனிதர்கள் தான் என்பதை லக்ஷ்மி மறந்து போனாள். அவர்களில் ஒருவன் லக்ஷ்மியும் அரவமுத்துவும் பேசியதை அப்படியே கொற்றவனிடம் ஒப்பித்திருந்தான்! அரசனிடம் நல்ல பெயர் வாங்கலாம் என்ற நினைப்பு அவனுக்கு.

அரவமுத்து வீட்டுக்குள் நுழைந்ததுமே அழகேசனுக்குத் தகவல் போய்விட்டது. ருதுவான நாளிலிருந்து காவல்காத்த சொத்தைக் களவு போக விடுவானா வேந்தன்?

லட்சுமியின் அழகு அவளைக் காப்பாற்றியது. அரவமுத்துவின் தலை கொய்யப்படவேண்டும் என்று தலையாரிக்கு ஆணையிட்டான் அழகேசன். அரவ முத்துவின் கைகளில் விலங்கு மாட்டி அழகாபுரிக் கோட்டையைக் கடந்து காட்டு வழி நடத்திச் சென்றான் தலையாரி. அவனுக்கும் இவன் வயதில் ஒரு பிள்ளை உண்டு!



“பொம்பிளைங்க சகவாசம் எங்கே கொண்டு விட்டுச்சு பார்த்தியா? வாலிப வயசு! எதையும் அனுபவிக்காம போறே! ஒன் அழகுக்கு ராசகுமாரியே தேடி வருவா! அவசரப்பட்டுட்டியே! ராசா உத்தரவை நிறைவேத்தலேன்னா என் ஒடம்புலே சிரசு நிக்காது. நீ ஏதோ மந்திரமாயமெல்லாம் கத்து வைச்சிருக் கிறதா பேசிக்கிட்டாங்க! சமயத்துக்கு ஒண்ணும் ஞாபகம் வரலியா?” என்று அனுதாபத்துடன் கேட்டபடி தலையாரி அரிவாளை ஓங்கினான்!

அதுவரை தான் கற்ற மந்திரங்களை மெல்ல முணு முணுத்தபடி நடந்து வந்த அரவமுத்து வல்லூறாகிப் பறந்து போனான். கீழே விழுந்த கைவிலங்குகளை எடுத்துக்கொண்டு தலையாரி நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

பத்திரமாக ஊர் போய்ச் சேர்ந்தான் அரவமுத்து. என்றாலும் அவன் உடல்தான் ஒத்தைக்காலன் விளையில் இருந்தது, மனமெல்லாம் தாசி லட்சுமியையே சுற்றி வந்தது.

மகனுக்குத் திருமணம் செய்து விடலாம் என்று பெற்றோர் ஜாதகம் பார்க்க “பெண் உறவு மரணத்தை ஏற்படுத்தும். 22 வயது முடியட்டும்” என்றார் ஜோதிடர்.

சித்திரைத் திருவிழாவுக்கு மாறு வேடத்தில் மதுரை வந்தான் அரவமுத்து. இப்பொழுது வள்ளி என்ற தாசி அவனைப் பார்த்து அவன் மீது மோகம் கொண்டாள். அவனை நெருங்கி மயக்கு மொழி களால் பேசி அவனை தன்னோடு வருமாறு அழைத்தாள்.

“லட்சுமி பெருமாளுக்கு சொந்தம். இலவாணிச்சி வள்ளி இந்த முருகனுக்கு சொந்தம். ரோசா அழகு தான். அதுக்காக தாமரை அழகில்லேன்னு சொல்ல முடியுமா” என்று தேனாய் கொஞ்சினாள் வள்ளி.

“ஒரேமாவுதான். இட்லியாய் ஊற்றினாலும், தோசையாய் வார்த்தாலும் பசியைத் தீர்க்கிறது” என்று நினைத்து தாசி வள்ளியின் பின் நடந்தான் அரவமுத்து.

திண்டுக்கல் அரசன் அரவ முத்துவின் சாமர்த்தியங்களை அறிந்து “இங்கேயும் அழகிகள் உண்டு. அதோடு என் நண்பனாக சிலகாலம் தங்கியிருக்கலாம்” என்று தூதனுப்பினான். அதே சமயம் மகன் மறுபடியும் ஒரு தாசி வலையில் விழுந்தானே என்று மருகிய பெற்றோர் அவனை மீட்டு அழைத்துப்போக மதுரைக்கே வந்திருந்தனர்.

திண்டுக்கல் அரசருக்கு மறுநாள் வருவதாக தகவல் அனுப்பினான் அரவமுத்து. மறுநாள் தங்க மாங்கனி களை மந்திரத்தால் வரவழைத்து பேழையில் அடுக்கி பெற்றோர் அறியாமல் நண்பனுடன் திண்டுக்கல் சென்றான். அன்று வெள்ளிக்கிழமை.

தங்க மாம்பழங்களைப் பார்த்த அரசன் பிரமித்தான். அரவ முத்துவுக்குத் தடபுடலான விருந்துபசாரம்.

சனிக்கிழமை காலை வழக்கமாக அரசனுக்கு எண்ணெய் தேய்ப்பவன் எண்ணெய்க் கிண்ணத்துடன் வந்தான்.

“மன்னா! என் சினேகிதன் வர்மக்கலை தெரிந்தவன். அவன் எண்ணெய் தேய்த்தால் சுகமாகத் தூக்கம் வரும். இன்று அவனை தேய்த்துவிடச் சொல்லிப் பாருங்கள்” என்றான் அரவமுத்து.

இதைக் கேட்ட எண்ணெய் தேய்ப்பவன் முகம் சுண்டியது. “அடுத்த வாரமோ, அடுத்த மாதமோ எண்ணெய் தேய்க்கும் போதெல்லாம் குத்திப் பேசுவாரே” என்று குமுறினான்.

அரவமுத்து சொன்னதற்கு அரசர் சம்மதிக்க அவனிடமிருந்து வர்மக் கலையைக் கற்றிருந்த தோழன் எண்ணெய் மஸாஜ் செய்தான். அரவமுத்து சொன்னபடி மன்னன் சுகமாக நித்திரை செய்தான்.

அரண்மனை எண்ணெய் தேய்ப்பான் பொறாமை கொண்டான். அரவமுத்துவை விரட்ட சதித்திட்டம் தீட்டினான். எப்பொழுதும் எண்ணெய் தேய்க்கும் போது அரசனின் வைர மோதிரத்தை அவன்தான் கழற்றி வைத்திருந்து அவர் தூங்கி எழுந்ததும் கொடுப்பான்.

அன்று அந்த மோதிரத்தை எடுத்து அரவமுத்து உறங்கும்போது அவனது உடைவாள் உறையில் போட்டு உடைவாளைச் சொருகி வைத்து விட்டான்.

உறங்கி எழுந்த அரசர் ‘‘மோதிரம் எங்கே’’ என்று கேட்க “என்னிடம் தரவில்லை. அரவமுத்துவின் நண்பரிடம் தான் தந்தீர்கள்” என்று சாதித்தான் அரண்மனை எண்ணெய் தேய்ப்பவன்.

அந்த நண்பன் அரவமுத்துவிடம் மோதிரத்தைத் தந்து விட்டு எண்ணெய் தேய்த்ததைத் தான் பார்த்த தாக பொய்ச் சாட்சி சொன்னான் எண்ணெய் தேய்ப்ப வனுக்கு வேண்டிய ஒரு சேவகன்.

அரவமுத்துவும், அவன் தோழனும் தங்களை சோதித்துக் கொள்ளும்படி கூற, சோதனையில் மோதிரம் சிக்குகிறது.

“களவாணி” என்ற பட்டம் சூட்டி அரவமுத்துவை வெள்ளிமலையில் கழுவேற்றும்படி ஆணையிட்டார் அரசர்.

கழுவில் துடித்தான் அரவமுத்து. மோர் விற்கும் ஆயர் குல மங்கையான முத்துமாரி அவன் மீது இரக்கம் கொண்டு மோர் தந்தாள்.

“மாரி! ராசாவுக்குத் தெரிஞ்சா கையைக் காலை வாங்கிப்புடுவாக! ராசத்துரோகிக்கு தண்ணி கொடுத்தாக்கூடத் தண்டனை, தெரியுமா?” என்று அச்சுறுத்தினார்கள் கூட மோர் விற்பவர்கள்.

“திருவிழாவுக்குப் போன வண்டி கொடை சாஞ்சி ராக்காயிக்குக் கையும், காலும் போச்சு. அது மாதிரி நெனைச்சுக்கறேன்” என்று தைரியமாகச் சொல்லி விட்டு தொடர்ந்து தினமும் மோர் கொடுத்தாள் முத்துமாரி. கழு மரத்தில் குற்றுயிரும் குலை உயிருமாக சில நாட்கள் துடித்தான் அரவமுத்து.

அவன் கழுவில் ஏற்றப்பட்ட விஷயம் ஒத்தைக் காலன் விளையில் பரவியது. அம்மையரம்மை கனவில் “தங்கச்சி! நாக்கு மேலண்ணத்தில ஒட்டிக்குது. வெள்ளிமலைக்கு மோர் கொண்டு வாரியா?” என்று கேட்கிறான் அரவமுத்து.

தங்கக் குடத்தில் மோர் கொண்டு கதறி அழுதபடி பெற்றோரோடு வெள்ளி மலைக்கு விரைந்து வந்த தங்கை அண்ணன் நிலைமை கண்டு மனம் உடைந்தாள்.

“சொக்கநாதா! அக்கிரமம் பண்ணினவங்களை நீதான் தண்டிக்கணும்” என்றபடி அங்கேயே தீ வளர்த்து அதில் பாய்ந்தாள். தங்கை தீபாய்ந் ததைக் கண்டு அரவமுத்து மனம் வெதும்பினான். இந்த கோர முடிவைத் தாங்காத பெற்றோர் தாங்களும் தீப்பாய்ந்தனர்.

ஏற்கெனவே நைந்து போன அரவமுத்துவின் ஜீவனும் பிரிந்தது. அண்ணனும் தங்கையும் தெய்வ மானார்கள். முன்பு அரவமுத்துவை சிரச் சேதம் செய்யச் சொன்ன அழகேச மன்னனும், திண்டுக்கல் அரசனும் குடும்பத்தவரும் சொல் லொணாத் துன்பத்தை அனுபவித்தனர்.

திண்டுக்கல், மதுரை, வெள்ளிமலை, ஒத்தைக் காலன் விளை இங்கெல்லாம் பீடம் வைத்து பூஜை செய்து, பலி கொடுத்து அரவமுத்துவையும் அவன் தங்கை அம்மையரம்மையையும் சாந்தப்படுத்தினர் மக்கள். அரவமுத்துவும் அவன் தங்கை அம்மையரம் மையும் காவல் தெய்வங்களாக வழிபடப்படுகின்றனர்.

சில இடங்களில் இக்காவல் தெய்வங்களுக்கு பொங்கல் வைத்துத் திருவிழாவும் நடைபெறுகிறது. அங்கெல்லாம் அரவமுத்துவின் வரலாறு பாட்டாகப் படிக்கப்படுகிறது.

- காயத்ரி

Paramaachaaryaar Paathayile

Kanchi Chandrasekhar Path

ஸ்ரீபரமாச்சார்யாள் பாதையிலே. . .

சென்ற இதழ் தொடர்ச்சி. . .
இரத்தம் சிகப்பு. குங்குமம் சிவப்பு. பதவி வேணுமா? சிவப்பு ஆடை சார்த்தணும். செவ்வாய் தோஷம் போகணுமா பவழமாலை போட்டுக்கணும். கௌரவத் தையும், செல்வாக்கையும் தேடறவா சூரியனை ஆராதிக்கணும். சூரியன் அவளுக்கு வலது கண்ணில்லையோ? ஆதித்ய ஹிருதயத்தைப் பாராயணம் பண்ணித்தான் ஸ்ரீராமபிரான் இரா வணனை ஜெயிச்சாங்கறது இராமாயணம். எதிரிகளை மடக்கணுமின்னா சிவப்பு வஸ்திரத்தாலே தான் அலங்காரம் பண்ணணும்.

பஞ்சதசாக்ஷரி மந்திரத்திலே பத்தாவது எழுத்து“ல.” அந்த ரூபமாயிருக்கிறதா 181ஆவது ஸ்லோக வரி சொல்றது.

கொடியைப் போல மனசிலே இருத்தி ரிஷிகள் அவளை பூஜிச்சிருக்கா. பதிவிரதாஸ்த்ரீகளால் அவ ஆராதிக்கப்பட்டவள். சதி சாவித்திரி, அவளை பூஜித்ததால் தான் எமன் அவளோட கண்களுக்குத் தெரிஞ்சான். அவளும் தன் புருஷனோட உயிரை வாக்கு சாதுரியத்தாலே மீட்டுண்டு வந்தா.
மதயந்தின்னு ஒரு பதிவிரதை. கௌரி பூஜை பண்ணி கணவனோட சாபத்தைப் போக்கி ராஜ்ஜியத்தை மீட்டுக் கொடுத்தா. ருக்மணி சக்தியை பூஜைபண்ணித் தான் ஸ்ரீகிருஷ்ணனைப் பதியா அடைஞ்சா.

பரிக்ஷித்து ராஜா சொர்க்கத்துக்குப் போகலே. அதுக்குக் காரணம் அவனோட பிள்ளை ஜனமே ஜயன் சர்ப்பயாகம் செய்ததுதான்! அந்த சர்ப்ப யாகத்தை ஜரத்காரு ரிஷியோட புத்திரர் அஸ்திகர்தான் நிறுத்தினார். சர்ப்பயாகத்தை நடத்தியது உத்துங்க முனிவர். அம்பாளுக்குக் கோவில் கட்டி வழிபடச் சொன்னார் வேதவியாசர். தேவி பாகவதத்தையும் கூறியருளினார். பரிக்ஷித்து சொர்க்கம் சேர்ந்தான்.

பிருகு மகரிஷி யோட பாரியாள் கியாதி, தேவியை பூஜை பண்ணித்தான் மகாலக்ஷ்மியை மகளா அடைஞ்சா. அப்போ லக்ஷ்மி யோட பேர் பார்க்கவி. அவளோட கூடப் பிறந்தவா தாதா, விதாதான்னு ரெண்டு பேர். எல்லாரும் தேவி உபாஸனை பண்ணி தேஜஸை அடைஞ்சா. விதாதா வோட பிள்ளைதான் மிருகண்டு ரிஷி. இவர் மார்க்கண்டேயரோட தகப்பனார். மார்க்கண்டேய ரோட மைந்தன் வேதசிரன். அவனும் தேவிபக்தன்தான்!

சுத்யும்னன் சிவ சாபத்தால் இளை என்கிற பெண்ணாயிட்டான். இளைன்னா ரொம்ப இளமையுடையவன்னு அர்த்தம். புதபகவான் இளையை விவாகம் செய்துண்டார். அவாளுக்குப் பிறந்தவன் தான் புரூரவன். ரிஷிகளெல்லாம் யாகம் பண்ணி இளையை மறுபடியும் சுத்யும்னனா மாத்திட்டா. எல்லாத்துக்கும் தேவி அருள்தான் காரணம். சூரியனோட பிள்ளை மனு. மனுவோட கடைசிப் பிள்ளை பிருக்ஷத்திரன். அவன் சுத்யும்ன னோட தம்பி. குருவான வசிஷ்டருக்கு நிறையப் பசுக்கள் சொந்தமாயிருந்தது. எல்லாம் தானமாக் கிடைச்சது.

சிஷ்யாள் எல்லா வேலையையும் மறுக்காம செய்யணும். பசுக்கூட்டத்தைக் காவல் காக்கச் சொன்னார் வசிஷ்டர். ராத்திரி ஒரு புலி வந்து பசு நிரையிலே நுழைஞ்சுடுத்து. சட்டுனு அம்பு விட்டான் பிருக்ஷத்திரன். புலி ஓடிடுத்து. ஆனா அம்பு குறி தவறி ஒரு பசுவைக் கொன்னுடுத்து. அதுக்குக் காரணம் அவனுக்கு தேவி உபாசனை இல்லே! வசிஷ்டரோட சாபத்துக்கு ஆளானான்.

அருந்ததி, மானசீக தேவி பூஜை பண்ணியே ஆகாயத்துலே நக்ஷத்திரமானா!

பிரளயத்துக்கும், சிருஷ்டிக்கும், காத்தலுக்கும் தேவிதான் காரணம் அவ அனாதியானவ. பெண்கள் நடனமாடினா அது லாஸ்யம். ஆண்கள் ஆடினா அதுக்குத் தாண்டவம்னு பேரு. நடனம் ஆடறதுக் காகவே அவ அப்ஸரஸ்த்ரீகளைப் படைச்சிருக்கா. நல்ல நடனத்தை அவ ரஸிக்கிறா! தாள லயங்கள் அவளுக்குப் பிடித்தமானது. நர்த்தன மாடறபோது அவாளாவே மாறிடறதா தேவி பாகவத்திலே சொல்லியிருக்கு.

‘மலையாசலத்திலே அவள் பேர் ரம்பை. திலோத் தமையிடம் அவள் அழகாயிருக்கா. ஏம கூடத்திலே மன்மதை.’ இப்படி அவளை வர்ணிக்கிறது தேவி மஹாத்மியம்

அலம்புஸா என்கிற அப்சரஸை திருண பிந்து ராஜா விரும்பி மணந்து கொண்டிருக் கான். அவாளோட பிள்ளை விசாலன் தான் வைசாலி நகரத்தையே ஏற்படுத்தினவன். அந்த வம்சத்திலே வந்த ஸோமதத்தன் பத்து அஸ்வ மேத யாகம் பண்ணினவன். எல்லாம் அம்பாளோட கடாட்சம்!

அம்பாளிடம் இல்லாதது எது? எதையும் அடைய வேண்டும் என்ற அவசியம் அவளுக்கில்லை!

அவளுடைய உத்தரவை யாரும் மீற முடியாது. யாருடைய கட்டளையும் அவளைத் தடுத்து நிறுத்த முடியாது. சிவனோட உத்தரவையும் மீறித்தான் அவ தட்சயாகத்துக்குப் போனா. பெத்தவா தப்பை பிள்ளைகள் பெரிசு படுத்தப்படாது

என்கிறதை லோகத்துக்குப் புரியவைக்க! அவளுக்குத் தெரியாதா தட்சனோட அகம்பாவம்! சிவ பெருமானை அவமரியாதை பண்ணினவன் உலகத்திலே இருக்கப் படாதுன்னு நினைச்சா! பூலோக மனுஷாளுக்கு சக்தி பீடங்களாயிருந்து அருள் புரியணுமின்னு முடிவு கட்டினா. இது அவளோட தீர்மானம்.

அம்பாள் புருவ அசைப்பிலே எல்லாத்தையும் அறிவிக்கிறதா சௌந்தர்ய லஹரியோட 24-ஆவது ஸ்லோகமும் சொல்றது.

ஈடு இணையில்லாத, எதோடவும் ஒப்பிட முடியாத அழகுடையவள் அவ. தேவியோட பாத நகங்கள் கண்ணாடிபோல் பளபளப்பாயிருக்கும். அந்த நகங் களின் நடுவிலேயிருந்து பலகோடி பிரம்மாண்டங் களும், தேவர்களும் அப்சரஸ்களும், கந்தர்வர்களும், மற்ற பேர்களும் வந்ததைப் பார்த்ததா பிரம்மா சொல்றார். அவ அழகோட அமுதசுரபி. அது வற்றாம கொட்டுகிற அருவி.

சுலபமா சித்திகளை வழங்கறவ அம்பிகை. சௌபரின்னு ஒரு ரிஷி. ஒருமாமாங்கம் ஜலத்துக் குள்ளேயே தவம் பண்ணிண்டிருந்தார். அவருக்கு பறவை, மிருகம், ஊர்கிறது எல்லா பாஷையும் தெரியும்.

தண்ணிக்குள்ள சம்மதன்னு ஒரு பெரிய மீன். அதோட உடம்பிலே பேரன், பேத்தின்னு ஏகப்பட்ட மீன்கள் விளையாடறதைப் பார்த்தார். நாமளும் கல்யாணம் பண்ணிண்டு உறவுகளோட ஆனந்த மாயிருக்கணுமின்னு முடிவு பண்ணினார். அம்பாளை வேண்டிண்டு சண்டிகா ஹோமம் பண்ணினார். ‘நீ நினைச்சது சித்திக்கும்’ னு வரம் கொடுத்தா தேவி.

மாந்தாதாவுக்கு ஐம்பது அழகான பெண்கள், மாந்தாதா தேவி உபாசகராச்சே! கேட்கணுமா? மாந்தாதா கிட்டேபோய் “ஐம்பது கன்னிகை வைச்சி ருக்கியே! ஒண்ணை எனக்குக் கன்னிகா தானமாக் கொடு”ன்னு கேட்டார் ரிஷி.

‘தலையெல்லாம் பனி பெஞ்ச மாதிரி இருக்கிற இவரா மாப்பிள்ளை’ன்னு யோசிச்சார் ராஜா. மறுக்க வும் பயம், சபிச்சுடுவாரோன்னு! ராஜா தந்திரமா “நான் தாய் வயிற்றிலே பிறக்காம தகப்பன் வயிற்றிலே பிறந்த வன். ஸ்த்ரீகளுடைய அபிப்ராயத்துக்கு அதிகமா மதிப்புக் கொடுக்கணுமின்னு நெனைக்கிறேன்’’னார்.

“நல்ல சுபாவம் தான்! உன் பெண்களிலே ஒருத்தி ஆசைப்பட்டா உனக்கொண்ணும் ஆட்சேபணை இல்லையே”ன்னு கேட்டார் ரிஷி.

மாந்தாதாவுக்குச் சிரிப்பு வந்தது. அடக்கிண்டார். இந்த தொண்டுகிழத்தை எவ ஆசைப்படப் போறான்னு நினைச்சு அலட்சியமா ஒரு சேவகனைக் கூப்பிட்டு அவரை அந்தப்புரத்துக்கு அழைச்சிண்டுபோகச் சொன்னார்.

அந்தப்புர எல்லை வந்ததும் ‘நான் போயிக்கறேன். நீ இங்கேயே இரு’ன்னு சேவகனைத் தடுத்து நிறுத்திட்டார் ரிஷி.

(தொடரும்)

- ஆர்.பி

Vaikaasi Visaakam; Nammaazhvaar

June Special Days

2006 ஜூன் மாத விசேஷ தினங்கள்


9-6-2006 வைகாசி விசாகம்
வைபோக மாதமான வைகாசியில் விருச்சிகத்தில் சந்திரனும், ரிஷபத்தில் சூரியனும் சஞ்சரிக்கையில் அவதரித்தவர் சுப்ரமண்யர். சரவணப் பொய்கையாய் இருந்த உமாதேவியிடம் அக்னியால் விடப்பட்ட சிவதேஜஸ் ஆறுகுழந்தைகளாய் பிரிந்து கிருத்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்தி கேயனானார். வேலவர் உதித்ததும் சூரபத்மனின் இடது கண்ணும், புஜமும் துடித்ததாம். அது வரப்போகும் ஆபத்தை அறிவுறுத்தி யிருக்கிறது.
ஆறுகுழந்தைகளையும் சேர்த்தணைத்து ஒரு உருவாக்கி னாள் அம்பிகை. முருகனது ஜன்ம தினமான இன்று குமரன் குடிகொண்டிருக்கும் கோயில் களில் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடக்கும். அறுபடை வீடுகளில், கதிர்காமம், குன்றக்குடி போன்ற ஸ்தலங்களில் காவடிகளும், அலகு (சிறுவேல்) குத்திக் கொள்வதுமான பிரார்த்தனைகளை பக்தர்கள் நிறைவேற்றுவார்கள். ஸ்ரீலங்காவில் கண்டி, மலேஷியாவில் பினாங்கு, பத்துமலை, சிங்கப்பூர் போன்ற கடல் கடந்த நாடுகளில் உள்ள முருகன் கோயில்களிலும் காவடி, கரகாட்டம், அலகு குத்தி தேர் இழுப்பது போன்றவற்றுடன் வைகாசி விசாகம் கொண்டாடப் படுகிறது.

திருச்செந்தூருக்குத் தெற்கே எட்டு கி. மீட்டர் தொலைவில் உள்ளது குலசேகரன்பட்டினம். அங்கே சைவ வேளாள மரபில் வந்த முத்தணைந்த பெருமாள் பிள்ளை என்ற செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அந்நாட்டுச் சிற்றரசரின் தலைமை அமைச்சராகப் பணிபுரிந்தவர் இந்த முருகபக்தர். ஞான நூல்களை ஓதுவிக்கும் ஆசானாகவும் இருந்தார். தினமும் இராக்கால வழிபாட்டிற்கு திருச்செந்தூர் போவது இவர் வழக்கம். இவரை ஞானியார் என்றே அனைவரும் அழைத்தனர்.

ஒரு மழைக்கால இருட்டு. வயது முதிர்ந்த பருவம். பலத்த தூறல். திருச்செந்தூர் செல்லும்போது எப்படியோ வழி தவறிவிட்டது. தடுமாறித் திகைத்தபோது முன்னால் ஒரு உருவம் சேகண்டியைத் தட்டிக் கொண்டு, கையில் லாந்தருடன் சென்றது. ‘சண்முக விலாசம்’ வந்ததும் உருவம் மறைந்து விட்டது. பெருமாள் பிள்ளை மெய் சிலிர்த்தபடி போத்திகளிடம் இச்சம்பவத்தை விவரித்தார்.

அன்றிரவு அவர் கனவில் குமரப்பெருமான் தோன்றி, “அன்ப! இனி நீ திருச்செந்தூர் வரவேண்டாம். நாமே நாள் தோறும் இராக்கால தீபாராதனை ஆனதும் உன் படுக்கையறைக்கு வந்து விடுகிறோம்” என்றருளினார்.

அதுபோல் தினமும் அருகில் ஒருவர் படுத்திருப்பதை உணர்ந்திருக்கிறார் ஞானியார். அவர் சாப்பிட்டதும் தாம்பூலம் போடுவது வழக்கம். ஒருநாள் தம்பல எச்சிலோடு உறங்கிவிட்டார். பாதி இரவில் எழுந்து சன்னல் வழியாகத் துப்ப முயற்சிக்க, வேகமாக வழிந்த தம்பலச்சாறு அருகிலிருந்தவர் மேல்பட்டு விட்டது போல் தோன்றியது. மனப் பிரமை என்று விட்டு விட்டார் ஞானியார்.

மறுநாள் காலை போத்திகள் ஆறுமுகப் பெருமானின் ஆடையில் தாம்பூல எச்சில் பட்டிருப்பதைத் தர்மகர்த்தாவிடம் தெரிவித்தனர். தர்ம கர்த்தா “பரிகார ஹோமம் நடத்தி சிறப்பு அபிஷேகம் செய்து வேறு ஆடை சாற்றுங்கள். அதைப் பிறகு விசாரிப்போம்” என்றார். அப்படியே செய்தனர் போத்திகள்.

அன்றிரவு தர்மகர்த்தா கன வில் முருகன் தோன்றி நடந்ததைக் கூறி “யாரும் தாம்பூல எச்சில் உமிழ்ந்து அடாத செயல் புரிய வில்லை” என்று எடுத்துரைத்தார். இப்படி செந்தில் ஆண்டவன் படுத்துறங்கிய இடம் படுக்கைக் கோயில் என்று வழங்கப்பட்டு, ‘சக்தி வேல் ஸ்தானம்’ செய்யப்பட்டு அங்கு இன்றும் தூப, தீப ஆராதனை நடை பெற்றுவருகிறது. ஞானியாரின் சந்ததியார் பூஜை செய்கிறார்கள்.

திருச்செந்தூர் கோயில் அதிகாரிகள் ஒரு குத்து விளக்கை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி என்று பெயர் பொறித்து உபயமாகத் தந்திருக்கிறார்கள்.

திருச்செந்தூர் கோவிலில் உச்சிக்கால பூஜை நடந்து கொண்டிருந்தது. ஞானியார் கருவறைக்குள் நுழைகிறார். போத்திமார்கள் “ஞானியாரே! இப்படிச் செய்யலாமா?” என்று கூற, அடுத்த கணம் ஞானியார் அங்கே இல்லை. அதே நேரம் குலசேகரன் பட்டினத்தில் ஞானியார் தன் பூத உடலை நீத்திருந்தார்.

இப்படிக் கந்த பெருமான் அருள் பெற்ற பக்தர்கள் ஏராளம். நாமும் இன்று, அவர் தாள் பணிந்து நன்மை யெல்லாம் பெறுவோம்!



--------------------------------------------------------------------------------
9-6-2006 திருவாய் மொழிப் பிள்ளை திரு நக்ஷத்திரம்
பாண்டிய நாட்டில் குண்டிகை என்ற ஊரில் பிறந்த இவர் தனது சிற்றன்னையிடம் வளர்ந்தார். தமிழில் நல்ல புலமையுடையவர். சிறந்த பேச்சாளர். பாண்டிய நாட்டு அமைச்சராகப் பணி புரிந்தவர். இவரது குரு, கூர குலோத்தம தாஸர். இவர் திருக்குருகூரில் அடர்ந்த காடுகளை வெட்டி நாடாக்கினார். திருநகரியில் இராமானுஜருக்குத் தனிக்கோயில் கட்டுவித்து கோயிலைச் சுற்றி வீதிகள் அமைத்து ஸ்ரீ வைஷ்ணவர்களை அதில் குடியேற்றினார். அந்த ஊருக்கு இராமானுஜ சதுர்வேதி மங்கலம் என்று பெயர். ஸ்ரீசைலேசர், திருமலை ஆழ்வார் என்ற பெயர்களும் இவருக்கு உண்டு. இவருடைய சீடர்களில் முக்கியமானவர் மணவாள மாமுனிகள். “ஸ்ரீரங்கம் சென்று முப்பத்தாறாயிரப்படி வியாக்கி யானத்தை உபன்யாசம் செய்” என்று அவருக்கு உத்தரவிட்டவர் இவரே. ஸ்ரீரங்கநாதர் ஒரு வருஷ காலம் அதைக் கேட்டுக் கொண் டிருந்தார். அந்த ஒரு வருஷமும் கோயிலில் எந்த உற்சவமும் நடக்கவில்லை!

பிள்ளை லோகாச்சாரியாருக்குப் பிறகு வைஷ்ணவ குருபீடத்தை அலங்கரித்தவர் இவர். இன்று அம்மகானின் அவதார தினம்.


--------------------------------------------------------------------------------

9-6-2006 நம்மாழ்வார் ஜன்மதினம்
தாமிரபணி நதி தீரத்தில், திருக்குருகூரில் காரியாருக்கும், உடைய நங்கையாருக்கும் உதித்தவர் மாறன். தவமிருந்து பெற்ற சிசு அழவுமில்லை! பால் குடிக்கவுமில்லை! மகாவிஷ்ணு வின் கட்டளைப்படி திருக்குறுங்குடி யில் ஆதிசேஷன் ஒரு புளிய மரமாக தோன்றியிருந்தார். அதில் பெரிய பொந்து. அதில் பதினாறு ஆண்டுகள் தவமிருந்தார் மாறன். திருமால் ஆணைப்படி சேனை முதலி பூலோகம் வந்து இவருக்கு உபதேசித்தார்.

வடதிருப்பதிகளில் nக்ஷத் ராடனம் செய்த மதுர
கவியாழ்வார் அயோத்தியில் தரிசனம் முடித்து தென்திசை

நோக்கி கைகூப்ப ஒரு பேரொளி அவரை ஈர்த்தது. ஒளிவந்த வழியே பயணமானார் மதுர கவியார். அந்த ஒளி திருக்குருகூரில் புளிய மரப் பொந்துக்கு அவரை அழைத்து வந்தது. பொந்தினுள்ளே தவம் புரிபவர் மகான் என்றுணர்ந்த மதுரகவியார், தன் கைகளைத் தட்டி “செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” என்று கேட்க “அத்தைத் தின்று அங்கேயே கிடக்கும்” என்று முதல் முறையாக திருவாய் மலர்ந்தருளினார் மாறனார்.

மதுரகவியார் சாஷ்டாங்கமாய் நமஸ்கரித்து “அடியேனை ஆட் கொள்ள வேண்டும்” என்று இறைஞ்சினார். “நாம் பகவானை அடையக் கூடிய பாசுரங்களைப் பாடிக் கொண்டிருக்கிறோம். தாங்கள் அதைப் பட்டோலையில் பதிப்பீராக” என்றார் மாறனார். எல்லோராலும் நேசிக்கப்பட்ட அவர் நம்மாழ்வார் எனப் பெயர் பெற்றார். அவருக்கு எவரும் அறியா வண்ணம் கருடன் மீதமர்ந்து வந்து காட்சி தந்தார் திருமால்.

இவர் திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவிருத்தம், திருவாய் மொழி ஆகியவற்றைப் பாடியிருக்கிறார். வகுளாபரணன் சடகோபன், பராங்குசன், குருகைப் பிரான், திருநாவீறுடைய பிரான் போன்ற பல பட்டப் பெயர்கள் இவருக்கு உண்டு. இராமகாதை இயற்றிய கம்பர் இவரைப் போற்றி சடகோபர் அந்தாதி என்ற பாமாலை புனைந்திருக்கிறார்.

இம்மகான் பிறந்த இப்புனித நாளில் இவரை வேண்டி வித்தை யையும், ஞானத்தையும் ஸ்ரீமந்நாரா யணரின் அருளையும் பெறுவோம்.



--------------------------------------------------------------------------------

10-6-2006 காஞ்சி ஸ்ரீமஹாப் பெரியவாள் ஜெயந்தி
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 68ஆவது பீடாதிபதியாக
12.2.1907 ல் தனது 13ஆவது வயதில் பொறுப் பேற்றார் ஸ்ரீசந்திர சேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள். தனது இளம் வயதிலேயே வேத சாஸ்திர புராணங்கள், உபநிஷத்துக்கள், அத்வைத வேதாந்த சித்தாந்தங்கள் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்த ஞானி இம்மகான். பார்வைக்கு எளியவராய், கருணையே உருவாய் திகழ்ந்த இவர் அனைத்து மக்களாலும் ஸ்ரீபரமாச்சார்யாள் என்று போற்றி வணங்கப்பட்டவர். ஸ்ரீ பரமாச்சார்யாள் வேத சம்மேளனங்கள், வேதாகம சில்பசதஸ் போன்ற மகா நாடுகளை நடத்தி வேத
விற்பன்னர்கள், சிற்பிகள், இசைக் கலைஞர்கள், ஓதுவார்கள் ஆகியோருக்கு விருதுகள் வழங்கிகௌரவித்திருக் கிறார். கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், வில்லுப் பாட்டு போன்ற கிராமியக் கலைகள் புத்துயிர் பெற்று இன்று மக்களால் பாராட்டப்படுவதற்குப் பெரிதும் காரணமாக இருந்தவர் இவர். இந்திய, அயல்நாட்டு மொழிகள் 17-ல் புலமை பெற்றிருந்த இம் மஹாப் பெரியவர் தம்மைத் தரிசிக்க வரும் பக்தர்களிடம் அவரவர் மொழியிலேயே பேசி அவர்களை வியக்க வைத்ததுண்டு. மஹாத்மா காந்தி தனது தென்னிந்திய விஜயத்தின் போது ஸ்ரீபரமாச்சார் யாளை தரிசித்து நெடுநேரம் அளவளாவியிருக்கிறார். சநாதன தர்மமாகிய ஹிந்து மதத்தின் மேன்மையையும் பெருமைகளையும் விளக்கி ஸ்வாமிகள் ஆற்றிய அருளுரைகள் ஏராளம். “ப்ராயா ணோன் முகேமயி அநாதேனூ” என்று ஆதிசங்கரர் இயற்றிய ஸுப்ரமண்ய புஜங்க வாசகத்தை (அனாதையான நான் நெடும்
பயணம் கிளம்பும் போது துணையாக குஹனே! தயாளுவே நீ வர வேண்டும்) சொல்லாமல் அவர் தலை சாய்ப்பதில்லை. அவரே அநாதை என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்? ஒவ்வொரு வரும் கடமையை தன் மனதில் காமம், குரோதம் இல்லாமல் செய்ய வேண்டும் என்ற அவரது ஞான வாக்கியங்களை கடைப்பிடிப்பதே அவருக்குச் செய்யும் பாதாஞ்சலியாகும்.

--------------------------------------------------------------------------------

12-6-2006 திருஞான சம்பந்தர் ஜன்ம நக்ஷத்திரம்
சீர்காழி nக்ஷத்திரத்தில் கவுணியர் குலத்தில் சிவபாத இருதயர்-பகவதி தம்பதியருக்கு சம்பந்தர் உதித்தார். மூன்று வயது நிரம்பியது. ஒருநாள் தந்தை நீராடச் செல்கையில் தாமும் பிடிவாதமாகப் பின் தொடர்ந்தார். பிரம்ம தீர்த்தப் பொய்கையில் தந்தை மூழ்கவும் கரையிலிருந்த சம்பந்தர் தந்தையைக் காணாமல் “அம்மே! அப்பா” என்று அழ, அம்பாள் தோன்றி பொற்கிண்ணத் திலிருந்து ஞானப்பாலை ஊட்டினார். குழந்தையின் வாயிலிருந்து பால் வழிந்தது. அம்பிகையிடம் பால் குடித்ததால்

‘ஞானசம்பந்தர்’ ஆன குழந்தையை, நீரிலிருந்து வெளிப்பட்ட சிவபாத ஹிருதயர் “யார் தந்த பாலை அருந்தினாய்?” என்று கேட்டு மிரட்டினார்.

ஆகாயத்தைச் சுட்டிச் காட்டி தோடுடைய செவியன் என்று பாசுரம் பாடினார் ஆளுடைப் பிள்ளை. திருக்கோலக்காவில் இவருக்கு இவருக்கு பொற்றாளம் அருளினார் ஈசன். திருநெல்வாயில் சந்திரசேகரப் பெருமான் சம்பந்தர் பாதம் நோகுமென்று அமர்ந்து வர முத்துச் சிவிகையும், வெயில், மழை பனியிலிருந்து காக்க முத்து வெண்குடையும், கட்டியம் கூற ஊதும் முத்துச் சின்னமும் கொடுத்தார்.

திருநீலகண்ட யாழ்ப்பாணரும், அவரது மனைவி மதங்க சூளாமணி யாரும் சம்பந்தர் அனுமதியோடு அவர் கூடவே தங்கி அவரது பாடல்களை யாழில் இசைத்தனர். பாணரின் சுற்றத்தவர் “சம்பந்தர் எத்தனை கடுமையான பாடலைப் பாடினாலும் நம்பாணர் அதை யாழில் மீட்டி விடுகிறார்” என்று கர்வமாகப் பேசுவதைக் கேட்டார் பாணர்.

“யாழில் மீட்ட முடியாத ஒரு பாசுரத்தை இயற்ற வேன்டும்” என்று சம்பந்தரிடம் கோரினார் பாணர்.

“மாதர் மடப்பிடி” என்ற பாடலைப் பாடினார் சம்பந்தர். அது யாழ் நரம்பில் அடங்கவில்லை! யாழ்ப்பாணருக்கு நிஜமாகவே பயமாகிவிட்டது. இனிமேல் தன்னால் சம்பந்தரின் பாடல்களை யாழில் இசைக்கவே முடியாதோ என்று எண்ணியவர், வருத்தத்தி னால் யாழை உடைக்க ஓங்கினார். அவரைத் தடுத்த ஆளுடைப் பிள்ளை “சிந்தையிலும் அடங்காத உமாமஹேஸ்வரரின் பெருமைகளை யாழில் அடக்கி விடமுடியுமா? இயன்ற அளவு வாசியும்” என்று கூறி யாழைத் திருப்பிக் கொடுத்தார்.

திருச்சாத்த மங்கையில் திரு நீலநக்க நாயனார் இல்லத்தில் அவர் விருப்பப்படி பாணரோடு தங்கியி ருந்தார். திருப்புகலூரில் புஷ்ப கைங்கரியம் செய்யும் முருக நாயனாரோடு நட்புக் கொண்டார். இந்நால்வரும் ஒரே மாதம் ஒரே நட்சத்திரத்தில் பிறந்தது போல் திருநல்லூரில் சம்பந்தருடைய திருமண நாளன்று தோன்றிய ஜோதியில் ஒரே நேரத்தில் இறைவ னோடு ஐக்கியமானார்கள்.


--------------------------------------------------------------------------------


14-6-2006 ஸ்ரீகுமரகுருபரர் அவதார தினம்
தாமிரபரணி நதிக்கரையில் ஸ்ரீ வைகுண்டம் என்ற ஸ்தலத்தில் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன் வேளாளர் குடியில் சண்முக சிகாமணிக் கவிராயருக்கும், சிவகாம சுந்தரி அம்மையாருக்கும் புத்திரனாக உதித்தவர் இவர். ஐந்து வயதாகியும் குழந்தை பேசவில்லை. திருச்செந்தூர் முருகன் கோயிலுக் குச் சென்று சன்னதி முன் மைந் தனைக் கிடத்தி “சண்முகா! ஒரு மண்டலம் விரதமிருக்கிறோம். குழந்தைக்குப் பேசும் சக்தியைக் கொடு” என்று பிரார்த்தனை செய்தனர் பெற்றோர். தினமும் அதிகாலை எழுந்து கடலிலும்,
நாழிக் கிணற்றிலும் ஸ்நானம் செய்து திருநீறு தரித்து செந்தி லாண்டவன் மேல் பாமாலை தொடுப்பார்கள். கோயில் சார்த்திய பின் பிரசாதத்தை உண்டு “ஓம் சரவண பவாய நம.” என தியானித் திருப்பார்கள். 48-ஆவது நாள் நான்காம் ஜாமத்தில் குமர குருபரரின் கனவில் அர்ச்சகர் வடிவில் ஆறுமுகன் பிரத்யட்சமாகி அவரைத் தட்டி எழுப்பி நாக்கை நீட்டச் சொல்லி சடாக்ஷரத்தை எழுதினார். பிறகு “விரைந்து விஸ்வ ரூப தரிசனத்துக்கு வருக” என்றருளி மறைந்தார்.

குமரகுருபரர் எழுந்து “அம்மா! அப்பா, எழுந்திருங்கள்” என்று பெற்றோரை உலுக்கி நடந்ததைச் சொல்ல அவர்கள் ஆனந்தத்தில் மிதந்தனர். “கந்தர் கலி வெண்பா” பாடினார் குமர குருபரர். இவரது “மீனாக்ஷியம்மை பிள்ளைத் தமிழ்” திருமலை நாயக்கர் முன் அரங்கேறிய சமயம் அம்பிகை நாயக்கர் மடியில் சிறு பெண்ணாக வந்து அமர்ந்து ரசித்ததுடன் ‘காலத்தோடு கற்பனை கடந்து’ என்ற பாடலுக்கு இவர் விளக்கம் அளிக்கையில் ஒரு முத்துமாலை யைப் பரிசாகவும் அளித்து மறைந்தாள். இன்று இவர் பாடல்களைப்பாடி அம்பிகை, கந்தன் இருவரின் அருளையும் பெறுவோம்.


--------------------------------------------------------------------------------


22-6-2006 கூர்ம ஜெயந்தி
“வீரியத்தையும் ஆயுளையும் தரக்கூடிய அமிர்தத்தை அருந்த பாற்கடலைக் கடைய வேண்டும். அது தேவர்களால் மட்டும் முடியாது. அசுரர்களிடம் நயமாகப் பேசி அவர்கள் உதவியையும் பெற வேண்டும்” என்று தேவேந்திர னுக்கு யோஜனை சொன்னார் மகாவிஷ்ணு. அதன்படி தானவர் களிடம் சென்று “வாருங்கள் பாற்கடலைக் கடைந்து அமிர் தத்தை எடுத்து ஆளுக்குப் பாதியாகப் பங்கிட்டுக் கொள்ள லாம்” என்று அழைத்தான் இந்திரன்.
அசுரர்கள் தேவர்களை ஏமாற்றி அமிர்தத்தைப் பறித்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்து மந்தர மலையைத் தூக்கி வந்து கடலில் நிறுத்தினர். வாசுகி என்ற நாகத்தை வேண்ட அது கயிறாக சம்மதித்தது. அசுரர்களைத் தலைப்பக்கம் பிடிக்கும்படி செய்தார் திருமால். ஓஷதிகளைப் போட்டு பாற்கடலைக் கடையத் தொடங் கினர். மந்தரகிரி அமிழ ஸ்ரீமந்நாரா யணர் பிரம்மாண்டமான ஆமை யாகி தன் முதுகால் முட்டுக் கொடுத்து நெம்பினார். மலைமேலெழுந்து சுழன்ற. பகவான் கூர்மமாக அவதரித்த நன்னாள் இது. ஜயவந்தர் என்ற ஹரி பக்தர் சாக்குப்பையில் கட்டி சமுத்திரத்தில் வீசப்பட்டார். பரந்தாமன் ஆமை வடிவாகி சாக்குப்பை கடலில் மூழ்காதபடி செய்து அவரைக் கரைசேர்த்தார். ஒரு முறை பண்டரிபுரம் போக முடியாமல் பக்தர்கள் தவித்தபோது நதியில் பாலமாக அமைந்து அவர்கள் பயணம் செய்ய உதவி யிருக்கிறார் பகவான். இந்நன் நாளில் பெருமாளை வழிபட்டால் சம்சார சாகரத்திலிருந்து அவர் நம்மை கரைசேர்க்க அருள் புரிவார் என்பது திண்ணம்.


- ஆர். பி

Maatheswaran Malai Sri Maatheswarar

Grama Thevathaigal

கிராம தேவதைகள்
மாதேஸ்வரன் மலை ஸ்ரீமாதேஸ்வரர்
“என்ன! பூஜைக்குப் பூப்பறிச்சுட்டீங்களா?” என்று இரைக்க இரைக்க ஓடி வந்த சீடர்களைப் பார்த்துக் கேட்டார் சுத்தூர் வீர சிம்மாசன மடத்து குருவான சித்த நஞ்சதேசிகர்.

ஒரு சிறுவன் சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டு சொன்னான். “மாதேஸ்வரன் ‘வா’ன்னதும் ஒரு புலி வந்தது”






அவனைத் தொடர்ந்து அடுத்தவன் “அவன் அது மேலே ஏறி வரான்” என்றான்.

இன்னொருவன் “அவன் பூவா பறிச்சான்? தவளை, பல்லி, ஓணான் எல்லாத்தையும் பையிலே பிடிச்சுப்போட்டுண்டி ருக்கான்” என்று சொல்ல, மற்றொருவன் “அதோடு நின்னாப்பரவாயில் லையே! பாம்பையும்னா பிடிச்சுப்போட்டுண்டிருக்கான்!” என்று நடுங்கினான்.

அவர்களோடு சென்ற மாதேஸ்வரன் புலியைப் ‘போ’ என்று சைகை காட்டியதும் அது மறைந்து விட்டது. மாதேஸ்வரன் நகைத்தபடி தவளையும் பாம்பும்... இருந்த பையை தடாக நீரில் அமிழ்த்தி எடுத்து வந்து குருநாதர் முன் கொட்டினான். எல்லாம் வாசனை வீசும் மலர்களாக மாறியிருந்தன!

குருதேவர் “நீ சித்தனப்பா” என்றார்.



அன்றிலிருந்து மற்ற பிள்ளைகள் மாதேஸ்வரனிடம் பயபக்தியோடு நடந்து கொண்டனர். அவனோடு விளையாடுவதையும் தவிர்த்தனர். இது நடந்தது 14-ஆம் நூற்றாண்டு என்று கல் வெட்டுகள் கூறுகின்றன. மாதேஸ்வரனை, ‘மும்மூர்த்திகளும் சிருஷ்டித்த தேவன்’ என்று அனைவரும் போற்றினர்.

மடத்தின் வழக்கப்படி கேழ்வரகு அரைக்கும் பணி மாதேஸ்வரனுக்குக் கொடுக்கப்பட்டது. அவன் திருகைக் குச்சியைத் தொட்டதும் கல் தானாகவே சுழன்றது. கூட இருந்த சிறுவன் திகைத்தான். விரைந்து சென்று குருநாதரை அழைத்து வந்தான்.

“மாதினை மேனியில் கொண்ட ஈஸ்வரனே நீ! உனக்குக் கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது? காவிரி உற்பத்தியாகும் குடகுமலைக்கு அருகேயுள்ள பிரபு லிங்க மலைக்குச் சென்று, பிரபுலிங்க மடத்துக் குருவான ஸ்ரீ ஆதிகணேஸ்வரரின் ஆசி பெற்று உன் யோகத்தைப் பூர்த்தியாக்கிக் கொள்” என்று பிரபு லிங்க மடத்துக்கு மாதேஸ்வரனை அனுப்பிவிட்டார் குரு.




சுத்தூர் மடத்தில் மாதேஸ்வரன் கைபட்ட கல் ‘மகிமைக்கல்”என்று இன்று வரை பூஜிக்கப்படுகிறது.

அவன் பூச்சிகளை பூக்களாக மாற்றிய பையும் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

மாதேஸ்வரன் ஸ்ரீ ஆதி கணேஸ்வரரை முழந்தாளிட்டு வணங்கினான். அவனுடைய முழந்தாள் பதிந்த இடத்தை இன்றைக்கும் பிரபுலிங்க மலையில் காணலாம்.

ஒருநாள் பூஜைக்கு பூவே கிடைக்கவில்லை. மாதேஸ்வரன் ஒவ்வொரு பருக்கைக் கற்களாக எடுத்துக் குடலையில் போட்டான். அவை சண்பகம், ரோஜா, மனோரஞ்சிதம் என்று விதவிதமான மலர் களாக மாறுவதைப் பார்த்து குரு ஆச்சரியப்பட்டார்.

இன்னொரு நாள் கன்று போடாத பசுக்களை ஒருவர் மடத்துக்குத் தானமாகக் கொடுத்தார். மாதேஸ் வரன் போய் பால் காம்பைத் தடவ, மடி கட்டிக் கொண்டு மாடுகள் பாலைப் பொழிந்தன.

மருத்துவர்களால் கைவிடப்பட்ட பல நோயாளிகளைக் காப்பாற்றினான் மாதேஸ்வரன். கிராமத்து மக்கள் அவனைத் தெய்வமாகவே கொண்டாடினர்.

கட்டு விரியன், கண்ணாடி விரியன், நாகப்பாம்பு ஆகியவை அவனோடு விளையாடும். மேனியில் சுற்றிக் கொள்ளும்.

“நீ சிவ பெருமானின் அம்சம். உனக்கு குருவாயிருக்க எவராலும் ஆகாது” என்று அவனுக்கு விடை கொடுத்தார் ஸ்ரீ ஆதி கணேஸ்வர்.

மாதேஸ்வரன், மாதேஸ்வரர் ஆகி சுற்றிலும் குன்றுகளாக இருந்த மலைப் பகுதிக்கு வந்தார். அவரது வலது கால் பட்டதும் அந்த இடத்துப் பாறைகள் பொடிப் பொடியாகி சமதளமானது. அங்கேயே தியானத்தில் அமர்ந்தார் மாதேஸ்வரர். அவரைச் சுற்றி புற்று மூடிக் கொண்டது. இவரைப் பிரிந்திருக்க இயலாமல் மாடுகளும், பாம்புகளும் இவரைத் தேடி வந்தன.

மாடுகள் வந்த வழி பசவன் வழி; அது பாதயாத்தி ரைக்கு எளிதானது. சர்ப்பங்கள் வந்த வழி சர்ப்ப வழி. இது கடினமாயிருக்கும்.

ஒரு மாமாங்கம் தவம் செய்து லிங்க வடிவானார் மாதேஸ்வரர். அவர் தவம் செய்கையில் ஒரு பசு கூட்டத்திலிருந்து பிரிந்து வந்து புற்றுவாயில் பால் சொரியும். அதன் உரிமையாளரான சூஜ்ஜே கௌடர் ஆலம்பாடி கிராமத்தில் வசித்து வந்தார். மேய்ச்சலி ருந்து திரும்பி வந்த பசு பால் சுரக்காமலிருப்பதை கவனித்து வந்த கௌடர், மாடு மேய்க்கும் இடையனைக் கூப்பிட்டு விசாரித்தார். அவனுக்கு எதுவும் தெரிய வில்லை. இது தொடர்ந்தது.

அவனறியாமல் தானே ஒருநாள் அந்தப் பசுவை பின் தொடர்ந்த கௌடர், புற்றுவாயில் பசுபால் சொரி வதைக் கண்டார். பசு நகர்ந்த பின் புற்றினுள் கூர்ந்து பார்த்தார். சிவலிங்கமும் ஒரு யோகியும் மாறி மாறிக் காட்சியளித்தனர். அது முதல் அந்தப் புற்று இருந்த இடம் கௌடர் குடும்பத்தின் வழிபாட்டுத் தலமாயிற்று.

இன்றைக்கு இருக்கும் ஸ்ரீமாதேஸ்வரர் ஆலயம் அவரது இனத்தவர்கள் கட்டியதுதான். மேட்டூரிலி ருந்த 55 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது மாதேஸ்வரன்மலை. ஸ்ரீமாதேஸ்வரர் தவம் செய்த குகைகளில் இப்போதும் தினமும் பூஜைகள் செய்யப் படுகின்றன.

அக்கம் பக்க கிராம வாசிகள் கால் நடைகளுக்கு நோய் கண்டால், பசு பிரசவிக்க சிரமப்பட்டால் மாதேஸ்வரருக்கு கன்றுக் குட்டியைக் காணிக்கை விடுவதாக வேண்டிக் கொள்கின்றனர்.

நூறு ஆண்டுகளுக்கு முன் கோயில் கமிட்டிடியினர் பத்து அடி உயர நந்தியை நிறுவி ஆலம்பாடி மஹா பசவேஸ்வரர் என மண்டபமும் கட்டினர். கர்ப்பக்கிருஹத்தை நோக்கியபடி தெற்கு நோக்கி அமைத்த நந்தி சிலை, ஒருவாரத்திற்குள் ஆலம் பாடியை நோக்கி வடமேற்கு திசையாய் திரும்பி விட்டது. மறுபடியும் கமிட்டியினர் மாதேஸ்வரரை நோக்கி அதை திருப்பி வைக்க சில நாட்களில் நந்தி பழையபடி திரும்பிக் கொண்டது. இந்த நந்திக்கு பால் அல்லது நெய் கொண்டு அபிஷேகம் செய்தால் குறை நீங்கும் என்று சொல்கிறார்கள்.

மாதேஸ்வரர் பயன்படுத்திய பை, பாதுகைகள், சங்கு எல்லாவற்றையும் பக்தர்கள் தரிசிக்கலாம்.

கஷ்டங்கள் தீர ரிஷபவாகனம் அல்லது புலிவாகனத்தைத் தேரில் ஏற்றி சுற்றி வருவதாக நேர்ந்து கொள்கிறார்கள். மாதேஸ்வரர், குடும்பங் களில் ஏற்படும் சிக்கல்களை அவிழ்ப்பதாக மக்கள் நம்புகிறார்கள். மாதேஸ்வரர் கதை கேட்டால் புண்ணிய தீர்த்தங்களில் ஆயிரம் முறை நீராடிய பலன் என்கிறார்கள். அங்கிருந்து ஐந்து மணி நேர நடைப் பயணத்தில் நாகமலை வருகிறது. அங்கே லிங்க வடிவில் ஒரு கல்லும், நாகப் பாம்பு உருவில் ஒரு கல்லும் இருக்கிறது. அது நாளுக்கு நாள் வளர்வ தாகச் சொல்கின்றனர்.

அமாவாசை, பௌர்ணமி, நவராத்திரி, சிவராத்திரி, தீபாவளி, யுகாதி ஆகிய நாட்களில் அங்கே விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. மாதேஸ்வரரை தரிசிக்க கிளம்பி விட்டீர்களா?

- காயத்ரி

On the footsteps of Paramacharya

ஆர் பொன்னம்மாள்

ஸ்ரீபரமாச்சார்யாள் பாதையிலே. . .

சென்ற இதழ் தொடர்ச்சி. . .
‘ஹாஹா, ஹுஹு’ முதலான கந்தர்வர்களால் துதிக்கப்பட்டவள் அம்பாள். இவா ஆனி, ஆடி மாசத்துலே கிரிஷ்மருது காலத்துலே சூரியனோட தேரிலே இனிமையாப் பாடி சந்தோஷப்படுத்தறா. ‘கந்த’ன்னா வாசனை. காதுக்கு, மனசுக்கு வாசனையில் பாடறதாலே அவாளுக்குக் கந்தர்வான்னு பேரு. நாரதர், தும்புரு, விசுவாவசு, ஊர்ணாயு, சூர்ய வர்ச்சசு, சித்திர சேனன், உக்கிர சேனன், வசுருசி, சித்ராங்கதன், திருதராஷ்டிரன் இவா பத்து பேரும் மீதி பத்து மாசங்களும் சூரியனோட ரதத்துலே பாடுகிற கந்தர்வா.

இதிலே வருகிற சித்திரசேனன் தான் துரியோதனனைக் கட்டி இழுத்துண்டு போனான். தருமபுத்திரர் சொன்னபடி பீமனும், அர்ச்சுனனும் தான் துரியோதனனைக் காப்பாத்தினா.

‘ஹா ஹா ஹுஹு’வுக்கு அப்படி யென்ன விசேஷம்னு கேட்டா அவா உத்தராயணம் கடைசியிலும், தக்ஷிணா யணம் முதலிலேயும் சூர்யத் தேர் திரும்பறப்போ ரதத்துலே பாடறா. நன்னாப் பாடறவாளை, ‘ஆஹா’ன்னு பாராட்டறப்போ நீ, ‘ஹாஹா’ மாதிரிப் பாடறேன்னு சொல்ற மாதிரிதான்!

சந்திரனை இடது கண்ணா வைச்சுண்டாலும் அவளுக்குத் தேய்தலும் வளர்தலும் கிடையாது. அதனால்தான் அம்பிகை நித்யா என்று அழைக்கப்படறா. (வயோ ளு வஸ்த்தா-வி வர்ஜிதா) வயதால் நிலை மாறாதவள் பரதேவதை.

வெண்ணெயைப் போன்ற இதயமுடையவள் அவள் வெண்ணையைப் போல் தூய்மையான உள்ளத்திலே வாழுகின்றவள், அம்பிகை.

மகிஷாசுரனை சம்ஹாரம் பண்ணினப்போ அவனோட அறுபட்ட கழுத்திலே ஒரு சிவலிங்கம் இருந்தது. அதை துhக்காதேவி கொண்டு வந்து காமாட்சியம்மன் கிட்டே கொடுத்தா. ஆனா அது பார்வதி கையிலேயே ஒட்டிண்டுடுத்து. கௌதம ரிஷி பக்கத்திலே இருந்தார். “ஏன் இப்படியாச்சுன்னு கேட்டா அம்பிகை.

அகஸ்தியர் தலைமையிலே ஐம்பது ரிஷிகள் nக்ஷத்ராடனம் புறப்பட்டா. வழியிலே, வர முனிவரோட ஆஸ்ரமம் இருந்தது. எல்லாரும் உள்ளே நுழைஞ்சா. வர ரிஷி தியானத்திலே இருந்தார். கூப்பிட்டுப் பார்த்தா. எழுந்திருக்கலே. ஆத்திரம் அறிவை மறைக்கும். ‘எருமை மாடாப்போ’ன்னு சபிச்சுட்டா. வரமுனிக்குத் தவம் கலைஞ்சுடுத்து. கால்லே விழுந்து மன்னிப்பும் கேட்டுட்டார். ஆனா அவா கோபம் அடங்கலே. “சபிச்சது சபிச்சதுதான். அம்பாள் கையாலே மோட்சம் கிடைக்கும்” னுட்டா.

மன்னத ரிஷி கையிலே சிவலிங்கத்தோடதான் தபஸ் பண்ணுவார். ஒருநாள் மகிஷாசுரன் அவரை லிங்கத்தோட கபளம் பண்ணிட்டான். லிங்கம் தொண்டையிலே சிக்கிண்டுடுத்து. அதுதான் இது. லிங்கம் கழுத்திலே இருக்கும் போது அழிச்சதாலே கையிலே ஒட்டிண்டுடுத்து’ அப்படின்னார் கௌதமர்.

“சரி. இதை எங்கே எப்படி ஸ்தாபிக்கறது”ன்னு கேட்டா காமேஸ்வரி. “நவதீர்த்தங்களிலே ஸ்நானம் பண்ணனும். இந்த லிங்கம் விடுபடும். விடுபட்ட இடத்திலே ஸ்தாபிதம் பண்ணு’’ன்னார் முனிவர்.

அம்பாளுக்கு நினைச்ச மாத்திரத்திலே நவதீர்த்தங்களும் வந்தது. கத்தியாலே பூமியைக் கீறினா. கட்கம்னா வாள். அந்த தீர்த்தம் கட்க தீர்த்தமாச்சு. அதிலே நீராடினா தேவி. லிங்கத்தைக் கரையிலே பிரதிஷ்டை பண்ணி பூஜிச்சா. அந்த ஸ்வாமி பேர் பாப விநாசகலிங் கம். எல்லாம் லோகபாவனை. அம்பாளுக்குத் தெரியாம கௌதமரைக் கேட்டாளா? இல்லே. அகலிகை புருஷனுக்கு மகத்துவம் சேர்த்தா! கௌதமர் அம்பிகையை பூஜை செய்யாத நாள் ஏது?

51 அட்சரங் களாக இருக் கிறவ தேவி. திருவாரூரிலே அட்சர பீடம்னே இருக்கு. கமலாம்பா சன்னதிக்கு தென் மேற்கு மூலையிலே இதை தரிசிக்கலாம்.

இந்திர கோபம்னு ஒரு பூச்சி இருக்கு. அது சிவப்பாயிருக்கிறதாலே அந்தப் பேரை வைச்சிருக்கணும். மாணிக்கம் போலேன்னு கூட சொல்லியிருக்கலாம். ஆனா அப்படிச் சொல்லாம இந்திர கோபப் பூச்சியைப் போல் சிகப்பா வஸ்திரம் உடுத்திண்டிருக்கிறதா சொல்லப்பட்டிருக்கு. இந்த சிகப்புக்கு சில குணங்கள் உண்டு.

(தொடரும்)

- ஆர்.பி

May Special Days for Hindus

Kamagoti

2006 மே மாத விசேஷ தினங்கள்


02-5-2006 ஸ்ரீ ஆதிசங்கரர் ஜெயந்தி
தத்துவ ஞான பூமியாகிய பரத கண்டம் காலப் போக்கில் தடம் புரண்டு தடுமாறி, பலநூறு சமயப் பிரிவுகளில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் இருள் நீக்கும் கதிரவன் போல் கேரள நாட்டில் காலடியில் அவதரித்தவர் ஸ்ரீ ஆதிசங்கரர். தாயுடன் நீராடச் சென்ற போது முதலை காலைக் கவ்விக் கொள்கிறது. “சன்யாசம் கொள் என்று உத்தரவு கொடுத்தால் அது காலை விட்டுவிடும்” என்று பகவத் பாதாள் அன்னையிடம் கூற “மகனே நீ உயிரோடிருந்தால் போதும்” என்று அவரது துறவுக்கு சம்மதித்தாள் அன்னை.
ஸ்ரீ ஆதிசங்கரர் எட்டு வயதில் துறவு பூண்டு சகல சாஸ்திரங் களையும் கற்றுத் தேர்ந்து வல்லவராகி புண்ணிய பரதகண்டம் எங்கும் விஜய யாத்திரை சென்று பாதை மாறியவர்களோடு வாதிட்டு வென்று அத்வைத சித்தாந்
தத்தை, வைதீக சனாதன தர்மத்தை நிலை நாட்டினார். சிதறிக் கிடந்த சமயப் பிரிவுகளை ஷண்மதங்களாய் தொகுத்துச் சீரமைத்தார். இமயம் முதல் குமரிவரை நடைப் பயணமாகவே சென்று பரத கண்டத்தின் நான்கு திசைகளிலும் ஸ்ரீமடங்களை நிறுவி நாட்டில் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தினார். இன்று அவரை வழிபட்டு பயன் பெறுவோம்.


--------------------------------------------------------------------------------

02-5-2006 ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி
ஸ்ரீபெரும்புதூரில் ஆசூரி கேசவ சோமயாஜிக்கும்-காந்திமதி அம்மையாருக்கும் பிறந்தவர் இவர். ஸ்ரீ சைல பூரணர் எனப்படும் திருமலை நம்பி இவரது தாய் மாமன். தந்தையே முதல் குருவாக இருந்தார். இவரது இல்லாளின் பெயர் தஞ்சம்மா. திருப்புட்குழியில் யாதவப் பிரகாசர் என்ற பண்டிதரிடம் சாஸ்திரங்களைக் கற்றார். அதே யாதவப் பிரகாசர் இராமனுஜர் வைணவ மடாதிபதியானதும் “கோவிந்த ஜீயர்” என்ற தீட்சா நாமத்தோடு அவருக்கு சீடரானார். அஷ்டாட்சர மந்திரத்தை இவருக்கு உபதேசித்த திருக்கோஷ்டியூர்
நம்பி, அதை ஸ்ரீராமானுஜர் உலகுக்கெல்லாம் உரைத்த காரணத்தைக் கேட்டு “எம்பெருமானார்” என்ற நாமத்தை அவருக்குச் சூட்டி கட்டியணைத்துக் கொண்டார். யக்ஞமூர்த்தி என்கிற மகா பண்டிதரோடு 18 நாட்கள் வாதிட்டு வென்றார். ‘தேவராஜ முனி’ என்ற தீட்சா நாமத்தோடு அவர் இராமானுஜரின் சீடரானார். கலைவாணியே இவரை ஆசீர்வதித்து “பாஷ்யக்காரர்” என்று பட்டம் சூட்டியிருக்கின்றாள்.

தொண்டனூரை ஆண்ட பித்திதேவன் மகளைப் பேய் பிடித்திருந்தது. அதை ராமானுஜர் குணமாக்கியதால் அவரிடம் பக்திகொண்ட அந்த ஜைன அரசன் விஷ்ணு வர்த்தனன் என்ற நாமத்தோடு வைணவத்தைத் தழுவினான். இதனால் ஜைன குருமார்கள் இவரை வாதத்துக்கு அழைக்க, நடுவில் திரை போடச் சொல்லி ஆதிசேஷனாக மாறி அவர்கள் வினாக்களுக்கு விரைந்து பதிலளித்தார். ஜைனர்கள் வெல வெலத்துத் தோல்வியை ஒப்புக் கொண்டனர்.

விஷ்ணு வர்த்தனன் உதவியோடு திருநாராயண புரத்தில், மேல்கோட்டையில் பெருமாள் கோயில் கட்டினார். இவர் டெல்லிக்குச் சென்று பாதுஷா வசமிருந்த உற்சவ விக்ரகமான ‘இராமப் பிரியா’ வை ‘வா’ என்றழைக்க அது நடந்து வந்தது.

பத்மகிரியில் பௌத்தர்களோடு வாதிட்டு ஜெயித்தார். தம் சிஷ்யர் களுள் 74 பேர்களைத் தேர்ந் தெடுத்து சிம்மாசனாபதிகள் என்று பெயர் சூட்டி விசிஷ்டாத் வைதத்தைப் பரப்பக் கட்டளை யிட்டார். ஸ்ரீரங்கம், காஞ்சி, தோத்தாத்ரி, அஹோபிலம், வானமாமலை ஆகிய மடங்கள் அவர் நிறுவியதில் விசேஷமானவை. தனது 120ஆவது வயதில் அவர் இறைவனடி சேர்ந்தார். இன்று இவரது மலரடி போற்றுவோம்.


--------------------------------------------------------------------------------

04-5-2006 அக்னி நக்ஷத்திர ஆரம்பம்
இன்று ஆரம்பிக்கும் அக்னி நக்ஷத்திரம் முடியும் வரை சுப காரியங்களைத் தள்ளிப் போட வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. கடும் வெய்யிலில் அலைவது உடல் நலத்தை பாதிக்கும். தலைசுற்றல் வரும் என்பதாலும் இந்த நியதி கடைப் பிடிக்கப்பட்டிருக்கலாம். இந்தக் காலத்தில் சில சமயம் மழையும் பெய்யும். இதற்கு முன்பத்து, பின்பத்து நாட்கள் சூரியன் சுட்டெரிப்பான். ஆதித்ய ஹிருதயம் படித்தாலோ வருண ஜபம் செய்தாலோ உஷ்ணத்தின் உக்கிரம் குறையும்.


--------------------------------------------------------------------------------

09-5-2006 ஸ்ரீ மீனாக்ஷி-சோமசுந்தரர் திருக்கல்யாணம்
மதுரையை ஆண்ட மலையத்து வஜன் செய்த யாகத்தில் தோன்றி, காஞ்சன மாலை முற்பிறவியில் செய்த புண்ணிய பலனால் அவர்கள் புதல்வியாக வளர்ந்து, திக் விஜயம் செய்து கைலாயத்தில் சிவபெருமானை சந்திக்கிறாள். மீனாக்ஷியம்மை. பிறக்கும் போதே அவளுடன் தோன்றியிருந்த மூன்றாவது ஸ்தனம் மறைந்தது. “எட்டாவது நாள் சோம வாரத்தன்று உனக்கு மாலை யிடுகிறேன்” என்றார் கைலாய நாதர். வாக்குப்படி அவர் வந்து மீனாக்ஷியை மணமுடித்த திருநாள் இது. இந்தத் தெய்வத் திருமணத்தை தரிசித்தால்
கன்னியரும், வாலிபரும் விவாக பந்தத்துள் புகுவர். இன்று மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலில் நடக்கும் திருக்கல்யாணத்தில் முன்பே வந்து இடம் பிடித்து அமர்ந்தவர்களுக்கு தாலிச்சரடும், கருகமணியும் கிடைக்கும்.

--------------------------------------------------------------------------------


10-5-2006 உமாபதி சிவாசாரியார் ஜன்மதினம்.ன
சைவ சமய வளர்ச்சிக்கு சந்தான குரவர்களான மெய் கண்ட சிவாசாரியார், அருள் நந்தி சிவாசாரியார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவாசாரியார் ஆகிய நால்வரும் பெரிதும் காரணமானவர்கள். பசு+பதி+ பாசம் என்பது சைவ சித்தாந் தத்தின் அடிப்படைக் கொள்கை. பக்தர்களைப் பசுவாகவும், பரம சிவனைப் பதியாகவும், இருவரை யும் பிணைக்கும் கயிறை பாச மாகவும் விவரிக்கும் இந்தத் தத்துவத்துக்கு விளக்கம் அளித்தவர்களுள் உமாபதி சிவாசாரியார்
முக்கியமானவர். இன்று அவர் அவதரித்த தினம். பல சிவாலயங்களில் சந்தான குரவர் சிலைகளைக் காணலாம் சிவனருளால் பல அற்புதங்கள் புரிந்து நாடாளும் மன்னரால் போற்றப்பட்ட இவரை இந்நன் னாளில் சிவன் கோயில் சென்று வழிபடுவது சிறப்பாகும்.

ஒருமுறை துறையிலிருந்து திரும்பி வந்த கழுதையை இவர் வணங்க, வண்ணான் பதறினான் “என்ன சாமி இது?” என்று! “இது என் குரு அப்பா! காலையில் அழுக்குத் துணிகளைச் சுமந்து செல்லும் போது இதன் முகம் கடுக்கவில்லை. இப்போது வெளுத்த துணிகளைச் சுமந்து செல்லும்போதும் ஆனந்த பரவச மாய் இல்லை! மனிதன்தான் துன்பத்தில் அழுகிறான். இன்பத் தில் சிரிக்கிறான். அப்போது இது என்னைவிட உயர்ந்ததல்லவா?” என்று பதிலளித்தார்.

இவர் சிதம்பரத்தில் தில்லை வாழ் அந்தணர் குடும்பத்தில் பிறந்தவர். மறைஞான சம்பந்தர் இவரது குரு. ஜாதி வேறுபாடு சிறிதும் கருதாதவர். சிவப்பிரகாசம், வினா வெண்பா, நெஞ்சு விடு தூது, திருப்பதிக் கோவை போன்ற பதினான்கு நூல்களை எழுதியவர் இவர்.


--------------------------------------------------------------------------------


11 /12-5-2006 ஸ்ரீநரசிம்ஹ ஜெயந்தி
வினோதமான வரத்தைப் பெற்றவன் இரண்ய கசிபு. அதனால் வினோதமான வடிவத்துடன், பக்தனான பிரகலா தன் வாக்கை மெய்ப்பிக்கதூணிலிருந்து நரசிம்மமாக வெளிப்பட்டு நிலைப்படியில் அமர்ந்து மாலையும் இரவும் கூடும் சந்தியா நேரத்தில் ஒரு துளி உதிரமும் கீழே சிந்தாதபடி இரணியன் மார்பைப் பிளந்து குடலை உருவி மாலையாகப் போட்டுக் கொண்டார் பகவான். நரசிம்மாவதாரத்தைப் பாராயணம் செய்தால் எதிரிகள் தொல்லை இருக்காது. நோய் குணமாகும். கடன் தீரும்.
படிக்கும் நாட்களில் பானகம் நிவேதனம் பண்ண வேண்டும். ஆதிசங்கரரைப் பலியிட முனைந்த காபாலிகனை அவரது சீடரான பத்மபாதர் மேல் ஆரோகணித்து வதம் பண்ணினவர் ‘நரசிம்ஹ மூர்த்தி. “நரர்கள் மிருகமாகும் போது நான் மிருகமாய் வந்து அழிப்பேன்” என்று உணர்த்த திருமால் எடுத்த அவதாரம் இது.

--------------------------------------------------------------------------------

12 /13-5-2006 சித்ர குப்த பூஜை
சித்திரை மாதம் சித்திரை நக்ஷத்திரத்தில் உதித்தவர் சித்ரகுப்தர். சிவனும், உமையும் “சித்திரத்துப் புத்திரனே வா” என்றழைக்க சித்திரத்திலிருந்து இவர் வெளிப்பட்டதாகப் புராணம் கூறுகிறது. இந்திராணி வளர்த்த பசுவின் வயிற்றில் ஏடும் எழுத்தாணியும் கை பிடித்து இவர் அவதரித்ததாகவும் ஒரு சரித்திரம் இருக்கிறது. சித்ரகுப்தன் பிறந்தவுடன் பசு மாண்டு போனதால் சித்ர புத்ர நோன்பு நோற்பவர்கள் பசுவின் பாலும், அந்தப் பாலிலிருந்து பெறப்படும் உணவு வகைகளையும் சேர்க்கக்கூடா தென்பது ஐதீகம். அதோடு

அன்று உப்பில்லாத உணவுகளையே (கனிகள்) உண்ண வேண்டும். அரிசிமாவால் சித்ர குப்தன் படம் போட்டு கையில் ஏடும் எழுத்தாணியும், விரல்களில் மோதிரங்களும், காதில் குண்டலங்களும் வரைய வேண்டும். குப்தன் என்றால் கணக்கன் என்று பொருள்.

சித்ரா பௌர்ணமி தோறும் இந்திரன் காஞ்சிபுரம் வந்து சித்ரபுத்ரனை பூஜிப்பதாக வரலாறு. சித்ரபுத்ரனின் மனைவி பெயர் காணாம்பிணிதேவி. காஞ்சியில் சித்ரகுப்தன் ஆலயத்தில் காலையில் மகா அபிஷேகமும், மாலையில் திருக்கல்யாணமும் நடை பெறுகிறது.

இன்று தலை வாழையிலையில் பட்சணங்கள், பாயசம், அன்னம், கிண்ணங்களில் பால், தயிர், நெய், தேன், உப்பு, மோர்க்குழம்பு. எல்லாக் காய்கறிகளும் போட்ட கூட்டு எல்லாம் நிவேதிக்க வேண்டும். பூஜையைத் தானே செய்தால்கூட ஒரு சாஸ்திரிகளுக்கு ஒரு புது முறத்தில் நவதானியங்கள் உப்பு, கற்பூரம், பருத்தி, பேனா அல்லது பென்சில், நோட்டு இவற்றை தானமாக அளிக்க வேண்டும்.

அமராவதி என்ற தேவருலகப் பெண் எல்லா பூஜைகளும் முடித்தும் சித்ரகுப்த பூஜை முடிக்காததால் பூவுலகுக்குத் திரும்பி அனுப்பப் பட்டாள் என்று வரலாறு சொல்கிறது.


--------------------------------------------------------------------------------

12 /13-5-2006 சித்ரா பௌர்ணமி
சித்திரை மாதத்து நிலவு பளிச் சென்று தெரியும். இந்திரன் பிரம்மஹத்தி நீங்கியதற்காக ஆண்டுதோறும் சித்ராபௌர்ணமி யன்று மதுரைக்கு வந்து சோம சுந்தரரை வழிபடுகிறான். இது இள வேனிற் காலமானதால் சந்திரன் அமுததாரைகளை அதிகம் பொழிவான். நிலாவில் உலாவினால் தோல் வியாதிகள் வராது. சரீரத்தின் உஷ்ணம் தணியும். சித்ரா பௌர்ணமியன்று பல ஸ்தலங்களிலும் இறைவன் வீதி உலாவருவது நம் முன்னோர்கள் செய்த ஏற்பாடு. பகவானை தரிசிக்க பக்தர்கள் நிலாவில் உலா வரத்தானே வேண்டும். சித்ரா பௌர்ணமியன்று எதைத் தானம் செய்தாலும், கிரிவலம் வந்தாலும் புண்ணியம் பல மடங்காகப் பெருகும். திருக்குற்றாலத்து சித்ரா நதியில் சித்ரா பௌர்ணமியன்று நீராடுவது விசேஷம். திருவாரூர், கொரடாச்சேரி, வெண்ணைவாசல், ஸ்ரீமகாமேருபீடம் பௌர்ணமி பூஜை சிறப்பானது.


--------------------------------------------------------------------------------

13-5-2006 ஸ்ரீகள்ளழகர் வைகையாற்றில் இறங்குதல்
திருமாலிருஞ்சோலை கள்ளழகர், தங்கையான தடாதகைப் பிராட்டியின் திருமணத்திற்காக சீர் எடுத்துக் கொண்டு ஆயிரம் பொன் சப்பரத்தில் மதுரை வருகிறார். தங்கக் குதிரை மேல் அமர்ந்து வைகை நதியில் இறங்கும்போது மாலை மாற்றி பச்சைப் பட்டு உடுத்தி லட்சக்கணக்கான பக்தர்களுக்குத் தரிசனம் தருகிறார். அப்போது பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துவதும், அர்ச்சனை செய்வதும் வழக்கம். கூட்ட நெரிசலில் எள் விழுந்தால் எண்ணையாகி விடும். முதல் நாளே மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்து விட்டதை அறிந்து கரை ஏறாமல் திரும்புகிறார் அழகர். இரவு வண்டியூரில் சைத்யோப சாரம் நடக்கும். மறுநாள் அழகர் என்கிற சுந்தரராஜப் பெருமாள் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளி கருட வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு முக்தி அருள்கிறார்; இரவு இராமராயர், ராஜா ஸ்ரீசேது பதி மண்டபம் வரை ஸ்ரீ அனந்த ராயர் ராஜாங்க தரிசனம். திங்களன்று காலையில் மோஹினி அவதாரம். செவ்வாயன்று அதிகாலையில் அழகர் மலைக்குத் திரும்புவார். சித்திரைத்திருவிழாவின் ஒரு பகுதியே அழகர் ஆற்றில் இறங்கும் விழா.


--------------------------------------------------------------------------------

18-5-2006 பாம்பன் சுவாமிகள் குருபூஜை
பாம்பன் சுவாமிகள் பஞ்சாமிர்த வண்ணம், சண்முகக்கவசம் போன்றவைகளை இயற்றியவர். 27-12-1923-ல் சென்னை, தம்புச் செட்டித் தெரு வழியாகப் போகும்போது ஒரு குதிரைவண்டி அவர் மீது மோதியதால் கீழே விழுந்தார். இடது காலில் ஒரு பக்கச் சக்கரம் ஏறிவிட்டது. தெருவில் போய்க் கொண்டிருந்த பலரும் அவரை வண்டியில் ஏற்றி ஜெனரல் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது ஸ்வாமிகளின் வயது 73. உப்பு, புளி நீக்கி குறைவாக போஜனம் செய்வார். வயதாகி உடலில் சத்துக் குறைந்திருப்பதால் எலும்புகள் கூடுவது அசாத்தியம் என்று சொல்லி விட்டார் டாக்டர். சுப்ரமண்ய தாசர் என்ற அவரது சீடர், அடிபட்ட நாள்முதல் அவர் கட்டிலடியில் அமர்ந்து சண்முகக் கவசத்தை, சாப்பிடும் நேரம் இரவு தூங்கும் நேரம் தவிர பாராயணம் செய்தபடி இருந்தார்.

11ஆம் நாள் இரவு ஸ்வாமிகளுக்கு ஒரு கனவு. முறிந்த கால் மீது எவரோ வேல் வைத்து இணைப்பது போலிருந்தது. எவரென்று தெரியவில்லை! மறுநாள் கட்டைப் பிரித்து சோதித்த மருத்துவர் பிரமித்தார். எலும்புகள் முறிந்தது தெரியாமல் கூடியிருந்தன. ஸ்வாமிகள் அதன் பிறகு நன்றாக நடந்தார் சென்னை திருவான் மியூரில் இந்த அருளா ளரின் சமாதி இருக்கிறது. இன்று அவரது குருபூஜை.


--------------------------------------------------------------------------------


22-5-2006 ஸ்ரீதத்தாத்ரேய ஜெயந்தி
மும்மூர்த்திகள் அம்சமாக மூன்று முகங்கள், ஆறு கரங்க ளோடு அத்திரி முனிவருக்கும், அனுசூயா தேவிக்கும் பிறந்தவர் தத்தாத்ரேயர். இவர் ஆத்ரேய கோத்திர சந்ததி. சுசீந்திரம் தாணு மாலயன் கோவிலில் மும்மூர்த்தி களும் உள்ளனர். சுசீந்திரம் ஆலயத்தில் இரண்டு வேளைதான் பூஜை; அர்த்த ஜாம பூஜையை இரவு இந்திரன் செய்வதாக ஐதீகம். மும்மூர்த்திகளின் அம்ச மான தத்தாத்ரேயரை பூஜிப்பதால் மலட்டுத் தனம் நீங்கும். கையும் காலுமின்றிப் பிறந்த கார்த்தவீர் யார்ஜுனனுக்குக் கணபதி மந்திரத்தை உபதேசித்தவர்
தத்தாத்ரேயர். பன்னிரண்டு ஆண்டுகள் தவம் செய்து இரண்டு கால்களும், ஆயிரம் கைகளும் பெற்றான் கார்த்த வீரியன். திருமாலின் அவதாரமான பரசுராமர் பெற்றோரின் ஈமக் கிரியை களை தத்தாத்ரேய ரைக் கொண்டு தான் முடித்தார். இவரது ஆறு கரங்களில் ஒன்று அருள் பாலிக்கிறது-இரண்டு மேற்கரங்களில் சங்கு, சக்கரம் திகழ்கிறது. நடுவிலுள்ள இரு கரங்களில் சூலமும் உடுக்கையும், ஆறாவது கரத்தில் பிரம்ம கமண்டலமும் உள்ளன.

நான்கு வேதங்களும் நாய் களாகச் சூழ்ந்திருக்க, பின்னால் காமதேனு நிற்க, எப்போது தேவைப்பட்டாலும் எடுத்து உப யோகிக்கும்படி தொடைமேல் கதாயுதத்தோடு காட்சியளிக் கிறார். உலக nக்ஷமத்துக்காக பல யாகங்கள் நடத்திய இவரை இன்று வழிபடுவதால் ஊனங்களும், குறைகளும் நீங்கும்.

--------------------------------------------------------------------------------


30-5-2006 நம்பியாண்டார் நம்பி பிறந்த தினம்
இவர் திருநாரையூரில் பிறந்தவர். ஒருசமயம் தந்தை அவசர வேலையாக வெளியூர் சென்று விட அவர் பணியான பொள்ளாப் பிள்ளையாருக்கு பூஜை, நிவேதனம் செய்யும் பொறுப்பு சிறுவனான இவரிடம் ஒப்படைக்கப் பட்டது. விநாயகர் நிஜமாகவே சாப்பிடுவார் என்று நினைத்திருந்த குழந்தை நம்பி பலமுறை கெஞ்சி அழைத்தார். கணேசர் அசையவில்லை. “தான் செய்த பூஜை சரியில்லை. நைவேத் யம் எடுத்து வருகையில் விளை யாட்டில் கவனமாக இருந்து விட்டோம்” என்றெல்லாம் எண்ணி மனம் கலங்கிய நம்பி
கோயில் சுவரில் தலையை முட்டிக் கொண்டு அழுதார். அதைக் கண்டு மனம் பொறாத விக்னேஸ்வரர் நம்பியைத் தடுத்து நிவேதனத்தைச் சாப்பிட்ட ருளினார். திரும்பி வந்த தந்தை யிடம் நம்பி நடந்ததைச் சொல்ல, தந்தை “பிள்ளையாராவது, நைவேத்யத்தை நேரில் உண்பதா வது! பொய் சொல்கிறாய்” என்று மிரட்ட, தந்தை காண மீண்டும் கணபதியை அழைத்து உண்ணச் செய்தார் நம்பி. பொளியாப் பிள்ளையாரே (உளியால் பொளியப் படாமல் சுயம்புவாகத் தோன்றியவர்) மக்கள் வாக்கில் மருவி பொல்லாப் பிள்ளையாராகிவிட்டார்.கணபதியே ஆசிரியராகி இவருக்கு தமிழ் கற்பித்தார். இச்செய்தி நாடெங்கும் பரவியது. மன்னன் இராஜராஜன் விநாயகருக்கு உகந்த பழங்கள், கரும்பு, தேன், அவல், பொரி, எள்ளுருண்டை, அப்பம் ஆகியவற்றை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு திருநாரையூர் வந்தான். நம்பியிடம் அவற்றை எல்லாம் விநாயகரை சாப்பிட வைக்கும்படி வேண்டினான்.

நம்பியும் அபிஷேக ஆராதனைகள் நடத்தி கணேசரைப் பிரார்த்திக்க அவரும் அவர் விருப்பத்தை பூர்த்தி செய்தார்.“தேவாரத் திருமுறை களும், திருத்தொண்டர் வரலாறும் தமிழ் மக்களுக்குத் கிடைக்க வேண்டும்” என்று மன்னன் பிரார்த்திக்க “தில்லையில் மூவர் கை முத்திரையுடன் ஒரு அறையில் தேவாரச் சுவடிகள் உள்ளன” என்றுரைத்த கணபதி திருத் தொண்டர் வரலாற்றை நம்பிக்கு போதித்தார். நம்பிகளுடன் சிதம்பரம் சென்றான் சோழன். தேவார மூவர்களுக்கும் பூஜை செய்து ஏடுகள் இருக்கும் அறையின் முன் நிறுத்தி, தில்லைவாழ் அந்தணர்களைக் கொண்டு கதவைத் திறக்கச் செய்தான். ஓலைச் சுவடிகளைக் கரையான் புற்று மூடியிருந்தது. . குடம் குடமாய் எண்ணையைச் சொரிந்து புற்றை அகற்றினான் கொற்றவன்.

“மன்னா! வருந்தாதே! இக்காலத்துக்கு ஏற்புடையவை அரிக்கப்படவில்லை” என்று அசரீரி ஒலித்தது. அந்த ஏடுகளைச் சிதையாமல் எடுத்துத் தொகுத்துத் தரும் பணியையும் நம்பிகளிடமே ஒப்படைத்தான் வேந்தன்.

11ஆம் திருமுறையில் தாம் இயற்றிய பத்து பிரபந்தங்களையும் இணைத்து வகைப்படுத்திய பெருமையும் நம்பிக்கு உண்டு. நம்பி பாடியவை திரு இரட்டை மணிமாலை, கோயில் திருபண்ணியர் விருத்தம், திருத்தொண்டர் திரு அந்தாதி, ஆளுடைப் பிள்ளையார் திருவந்தாதி, திரு சண்பை விருத்தம், திருமும்மணிக்கோவை, திரு உலாமாலை, திருக்கலம்பகம், திருத்தொகை, திருநாவுக்கரசர் திரு ஏகாதச மாலை ஆகியன வாகும்.


--------------------------------------------------------------------------------


31-5-2006 சேக்கிழார் ஜன்மதினம்
தொண்டை நாட்டில் குன்றத்தூரில் வேளாளர் குடியில் பிறந்தவர் சேக்கிழார். பெற்றோர் சூட்டிய பெயர் அருண் மொழி இராமதேவர். அநபாய குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக இருந்த இவர் உத்தம சோழ பல்லவர் என்ற பட்டத்தையும் பெற்றார். சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய திருத் தொண்டத் தொகையை வழி நூலாகக் கொண்டு பெரிய புராணத்தை இயற்றிய இவர் அதற்காக சம்பவங்கள் நடந்த ஊர்களுக்கே சென்று வரலாற்றுக் குறிப்புகளை சேகரித்தார். சிற்பங்களை, ஓவியங்களை கூர்ந்து நோக்கி கருத்துக்களைத்
தொகுத்துக் கொண்டார். இசை, மருத்துவம், வானவியல், பூமியியல், உடலியல், அரசியல், நீதி முறைகள், சமயதத்துவம், தமிழ் இலக்கியம் ஆகியவற்றைத் தெளிவு படுத்திக் கொண்டார். தில்லையில் அம்பலவாணர் ‘உலகெலாம்’ என்று அடியெடுத்துக் கொடுக்க ‘திருத் தொண்டர் புராணம்’ என்ற காவியத்தைப் படைத்தார். சேக்கிழாரையே அதைப் பாடச் சொல்லி அசரீரி ஒலித்ததோடு சிலம்பொலியும் கேட்டது. நாடெங்கும் தூதனுப்பி, முரசறைந்து திருத்தொண்டர் புராணத்தை அரங்கேற்றினான் அரசன்.

சித்திரை மாதம் திருவாதிரை தொடங்கி மறு ஆண்டு சித்திரைத் திருவாதிரையில் பெரிய புராண அரங்கேற்றம் பூர்த்தியாயிற்று. பசும் பட்டினால் ஏட்டுச் சுவடியைப் போர்த்து பொற்தட்டில் வைத்து, பட்டத்து யானைமேல் ஏற்றி, கூடவே சேக்கிழாரையும் அமர்த்தி, அவருக்குப் பின்னால் தானே உட்கார்ந்து வெண்சாமரம் வீசி, நகர் வலம் வந்து பொன்னம் பலத்தில் “தொண்டர் சீர் பரவுவார்” என்ற விருதினை அளித்து இவரை கௌரவித்தான் மன்னன்.


- ஆர். பி.

Thiruvairaani kulam Ambikai

R Ponnammal

கிராம தேவதைகள்
திருவைராணிக்குளம் அம்பிகை
“சாத்தானே! மூழ்கும் கல்லைத் தோணியாக்கி மூழ்காமல் என்னைத் தினமும் ஐராணிக்குளம் கொண்டு வந்து விடுபவனே! எனக்காக இனி நீ படகோடு காத்திருக்க வேண்டி வராது. இன்றுதான் எனது கடைசி தரிசனம்! பகவானை விட்டுப் பிரியவே மனசில்லை! தூணைக் கட்டிப் பிடித்துக் கொண்டேயி ருந்தேன்” என்றார் நம்பூதிரி.



“சாமி! நினைவு தெரிஞ்சதி
லேயிருந்து தினமும் மகாதேவரைக் கும்பிடறீங்க! குடும்பம் வெள்ளாரப்பள்ளிக்கு மாறின பிறகும் நீங்க உங்க வழக்கத்தை விடலே! இப்போ தள்ளாமை ஆயிடுச்சு. உங்க நிலை சாமிக்குத் தெரியாதா! மனசைப் போட்டு குழப்பிக்காம இருங்க” என்று ஆறுதல் சொன்ன சாத்தான், மெதுவாகக் கையைப் பிடித்து அவரைக் கீழே இறக்கி விட்டான்.

“ரொம்பக் களைப்பாயிருக்கு. இந்தக் குடைகூட கனமாயிட்ட மாதிரி இருக்கு. தோள் வலிக்குது. இங்கே கொஞ்சம் ஓய்வெடுக்கறேன்” என்ற நம்பூதிரி தோளில் சாய்ந்திருந்த தாழங் குடையை பக்கத்தில் இருந்த பாறை மீது சாய்த்து வைத்தார்.

“வெய்யில் ஏறுதுடா. போவோம்” என்று எழுந்தவர் “சாத்தான்! குடை காத்து மாதிரி லேசா இருக்குடா. கனக்கவேயில்லே” என்று சொல்லி ஆச்சரியப்பட்டார். சாத்தான் வீடுவரை துணையாக வந்தான்.

மறுநாள். ஆற்றங்கரை அருகே ஒரு பெண்
புல் வெட்டிக் கொண்டிருந்தாள். அரிவாள் நழுவி நம்பூதிரி குடையை வைத்திருந்த பாறையில் விழ அதிலிருந்து உதிரம் பீய்ச்சி அடித்தது.



புல் வெட்டிய பெண் அரண்டு தலை தெறிக்க ஊரை நோக்கி ஓடிவரும்போது மூச்சிறைக்க மயங்கி விழுந்தாள். அங்கே இருந்தவர்கள் முதலுதவி செய்தும் பயனின்றி மோட்ச மடைந்தாள்.

“சாத்தான்! ஆத்தங்கரையிலே என்னடா கூட்டம்?” நம்பூதிரி கேட்கிறார்.

“சாமி! பகவானுக்கும் உங்களை விட்டுப் பிரிய மனசில்லே! படிகளை யெல்லாம் தொட்டுத் தொட்டு கண்ணீராலே கழுவினீங்களே! உங்க குடையோட அவர் வந்துட்டார். பாறையிலே குடையை வச்சதும் பகவான் அங்கே ஆவிர்ப்பிச்சுட்டார். அதான் குடை லேசாயிடுச்சு. புல்வெட்டற பொண்ணு மூலமா தான் கல்லிலே இறங்கி இருக்கிறதை அறிவிச்சிருக்கார். ஐராணிக்குளத்தை விட்டு திருவைராணிக் குளத்துக்கு பகவான் வந்திருக்கார்” என்று ஞான திருஷ்டியில் பார்த்துச் சொன்னான் சாத்தான்!



அந்த இடத்தில் ஈஸ்வரனுக்கு கோயில் கட்டப்பட்டது. புல்வெட்டும் பெண்ணின் பெயர் இரக்கி. அவள் ஓடிவந்த தூரம் மூன்று கிலோ மீட்டர். இரக்கி விழுந்த இடம் வார நாட்டு மடம். அங்கே இரக்கி பூஜை நடத்தப்படுகிறது. நிவேதனமாக படைக்கப்படுவது பொரி. அதை உண்டால் வியாதி குணமாகும் என்பது மக்களின் நம்பிக்கை. இரக்கி ஓடி வந்த தூரம் கோவிலுக்கு மானியமாக வழங்கப்பட்டது. சாத்தானுடைய கல்தோணியையும் அங்கே காணலாம்.

கேரளாவில் ஆல்வாய்-காலடி செல்லும் வழியில் ஸ்ரீமூலநகரம் என்னும் இடத்தில் பெரியாறு நதிக்கு அருகில் இந்த திருவைராணிக்குளம் கோயில் அமைந்துள்ளது. இரிஞால குடாவுக்கு அருகே உள்ளது ஐராணிக்குளம். திருவைராணிக்குளம் ஆலயம்த்தில் சிவபெருமான் சன்னிதி வாசல் கிழக்கிலும், அம்பாளின் சன்னிதி வாசல் மேற்கிலும் எப்போதும் திறந்திருந்ததாம். அந்தக்காலத்தில் அரிசி, வெல்லம், நெய் போன்றவற்றை நடையின் முன் வைத்து விட்டு நம்பூதிரி கதவை சார்த்திவிட்டு பூஜையில் ஈடுபடுவது வழக்கம். பூஜை முடிந்து கத வைத் திறந்தால் பாயசம் தயாராய் இருக்கும். இது அம்பிகை சமைத்த நிவேதனம். நம்பூதிரியின் உதவிக்கு இருந்த ஆள் ‘இதை யார் சமைக் கிறார்கள்’ என்று அறியும் ஆவலில் ஜன்னலின் ஓட்டை வழியாகப் பார்த்தான்.

“ஆ! பார்வதி தேவியே நைவேத் யம் பண்றாங்க” என்று கூச்ச லிட்டான். தேவி அந்தர்தியான மாகிவிட்டாள்.

“இனி இந்த நடையைத் திறக்கக் கூடாது” என்று அசரீரி ஒலித்தது.

பக்தர்கள் கதறினர். “தாயே! பார்வதி! சக்தி இல்லாமல் எது நடக்கும்? அறியாமல் செய்துவிட்ட குற்றத்தை அன்னை பொருட்படுத்தலாமா? மன்னிக்கக் கூடாதா? அபயம் அம்மா” என்று பிரார்த்தித்தனர்.

“அடியார்களே! இனி நம்பூதிரி மட்டும் நடையைத் திறந்து பூஜை செய்த பின் அதை மூடிவிட வேண்டும். மாதத்திற்கு ஒரு நாளாக பன்னிரண்டு நாட்கள் உங்களுக்கு அருளுவேன். மார்கழி மாதம் திருவா திரை அன்று சன்னிதானக் கதவைத் திறக்கலாம். அன்று முதல் பன்னிரண்டு தினங்கள் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்” என்று கூறி அருளினாள் உமாதேவி.

ஆருத்ரா அன்று இந்த ‘நடைத்திறப்பு மஹா உற் சவம்’ நடைபெறும்.

பிரம்மணி என்ற அம்மையார் அம்பிகையை மனமுருகப்பாடி வேண்டியதால் அவர்களின் வழிவந்தவர்கள் வந்து பாடிய பிறகே நடை திறப்பு நடைபெறுகிறது.

இந்தப் பன்னிரண்டு நாட்களில் ஒருநாள் அம்பிகையை தரிசித்தால் கன்னிப் பெண்களுக்குத் திருமணம் கைகூடும். பன்னிரண்டு நாழி (பந்தீர் அழ்) பாயசம் நிவேதித்தால் ஒரு மண்டலத்தில் திருமணம் நிச்சயமாகும் என்கிறார்கள்.

சிவராத்திரி, திருவாதிரை, பௌர்ணமி போன்ற விசேஷ தினங்களில் சிவலிங்கத்துக்கு 101 இளநீர் அபிஷேகமும், மிருத்யுஞ்ஜய ஹோமமும் நடக்கிறது. இந்தப் பன்னிரண்டு நாட்களிலும் கோயிலில் கூட்டம் அலைமோதும்.
- H காயத்ரி

Akshaya Thrithiyay, Vya New Year

Giri Trading

2006 ஏப்ரல் மாத விசேஷ தினங்கள்

1-4-2006 ஸ்ரீவேதவியாசர் திருநக்ஷத்திரம்
பதினெட்டு புராணங்களை யும் இயற்றியவர் ஸ்ரீவேத வியாசர். இவர் மகாபாரதத்தை எழுத ஆள் தேடிய போது அதற்கு கணபதி முன்வந்தார். அனால் ஒரு நிபந்தனை விதித்தார். “நான் ஓலையில் எழுத்தாணி பதித்தால் நிறுத்தாமல் வாசகம் வரவேண் டும்” என்பதே அது. “சரி. ஆனால் அர்த்தம் புரிந்து கொண்டுதான் எழுத வேண்டும்” என்று மேல் நிபந்தனையிட்டார் வியாசர். கணேசர் ஒப்புக் கொண்டார். கடினமான பதங்களைச் சொல்லி விட்டு யோசிப்பார் வியாசர். நிதானமாய் யோசித்தபடி
எழுதுவார் மூஷிகவாகனர்.
இப்படி விக்னேஸ்வரருக்கு ஈடு கொடுத் தவர் வியாசர். சுக மகரிஷியின் தந்தை இவர். தனக்குள்ள கடமை முடிந்து வானுலகம் செல்ல விரும்பி காசிக்குப் போய் கங்கை யில் மூழ்கினார். “அபராத க்ஷமாயாசனம்” சொன்னார். (தன்னை அறியாமல் ஏற்பட்ட தவறுக்கு மன்னிப்புக் கேட்பது) “கீதையின் நாயகனே நீயே விஸ்வ ரூபி. என்னைக் கடைத் தேற்று” என்று உரக்கக் கூறினார்.

அப்போது அங்கே வந்த நந்திதேவர் சினம் கொண்டு “வியாசரே! இது காசி. இங்கே விஸ்வநாதருக்கே முதலிடம். பிரம்மாண்ட புராணத்தில் ‘அனைத்து சக்திகளும் ஒன்றே’ என்று கூறிவிட்டு இப்படி திருமாலை விஸ்வரூபி என் கிறீரே? உமது தூக்கிய கைகளும், மூழ்கிய கால்களும் வெட்டப் படட்டும்” என்று சபித்துவிட்டார்.

“உடலை விடப்போகும் இந்த சமயத்தில் உன் சாபம் என்னை என்ன செய்யும்? என்று வியாசர் சிரிக்க,“மறுபிறவியில் பலிக்கும்” என்றார் நந்தி. அதன்படி ஜயதே வராய் பிறந்து கைகால் வெட் டுண்டு ‘கீதகோவிந்தம்’ பாடி இறைவனருளால் கை, கால் வளரப் பெற்றார். அஷ்டபதியில் திருப்தி அடையாமல் மறுபடி வேண்டி தீர்த்த நாராயணராகப் பிறந்து ‘லீலா தரங்கிணி’யைப் பாடிய மகான் இவர்.



--------------------------------------------------------------------------------

5-4-2006 நந்திதேவர் ஜனன உற்சவம்
சிவபக்தரான சிலாத முனிவர் சொர்க்கம் செல்லும் வழியில் தனது பிதுர்க்கள் நரகத்தில் அல்லலுறுவதைக் கண்டு வருந்தி பூவுலகம் திரும்பி தவமிருந்தார். பிரத்யட்சமான ஈசனிடம் “உம்மைப் போலவே ஒரு பிள்ளை வேண்டும்” என்று வரம் கேட்டார். “புத்திர காமேஷ்டியாகம் செய்” என்று அருளினார் கைலாஸபதி. யாகத்துக்காக சிலாத முனிவர் நிலத்தை உழுதபோது ஒரு பெட்டி கிடைத்தது. திறந்து பார்த்தால் நான்கு கைகள், மூன்று கண்கள், தலையில் பிறைச்சந்திரனோடு தேஜஸான ஒரு குழந்தை! அரக்க மாயையோ என்று முனிவர் பயந்து பெட்டியை மூடிவிட்டார்.

“அஞ்சாதே! பிதுர்க்களைக் கரையேற்ற நந்தி பிறந்திருக் கிறான்; மீண்டும் திறந்து பார்” என்று அசரீரி ஒலித்தது. மறுபடி திறந்து பார்த்தார் சிலாதர். சாதாரணக் குழந்தை காட்சி யளித்தது. குழந்தையை வாரி யணைத்து அன்போடு வளர்த்தார் சிலாதர். இளம் வயதிலேயே வேத, ஆகம, சாஸ்திரங்களைக் கற்றறிந் தான் நந்தி.

ஒருநாள் மித்ரா, வருணன் என்ற இரு தேவர்கள் ரிஷி வடிவில் சிலாதரின் பர்ண சாலைக்கு வந்தனர். நந்தி அவர்களை நமஸ்கரிக்க, “நந்தியின் ஆயுள் எட்டு” எனக் கூறினர் இருவரும்.

சிலாதர் வேதனைப்பட, நந்தி மிருத்யுஞ்ஜய மந்திரம் ஜபித்து சிரஞ்சீவியாகும் பாக்கியமும், ஈசனை சுமக்கும் பேறும், கையில் பொற்பிரம்பும் வாளும் ஏந்தி கயிலையில் வாயில் காப்போனா கும் வைபவமும் பெற்றார்.

பாற்கடலில் அமிர்தம் தோன்றிய நாள் துவாதசி காலை. அமிர்தம் உண்ட தேவர்கள் மகிழ்ச் சியில், விஷம் அருந்திக் காத்த ஈசனை மறக்க, திரயோதசியன்று சூரிய அஸ்தமனத்துக்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன் தன்முன் இருந்த நந்தியின் கொம்புகளின் நடுவே மானும், மழுவும், சூலமும் குலுங்க, தண்டையும், சிலம்பும் ஒலிக்க, கங்கை தளும்ப நடனமாடினார் சிவபிரான். சரஸ்வதி உடனே வீணையை மீட்டினாள். இந்திரன் புல்லாங்குழல் ஊத, பிரம்மன் தாளம் தட்ட, திருமால் மிருதங்கம் வாசிக்க திருமகள் கீதமிசைத் தாள். அதுவே பிரதோஷம் எனப் படும் ரஜனீ முகவேளை. ரஜனீ முகம் என்றால் சாயங்காலம். அந்த நேரம் எல்லா உயிர்களும் ஈசனுக் குள் ஒடுங்கி விடுவதாக ஐதீகம். பிரதோஷ காலத்தில் ஈசனோடு நந்தியையும் வழிபட்டால் ஆயிரம் அஸ்வமேத யாகப் பலன் என்று சிவபுராணம் சொல்கிறது.

கைலாயத்தில் நவரத்தினங் கள் பதித்த மரகத ஊஞ்சலில் பார்வதி-பரமேஸ்வரன் வீற்றிருக்க எதிரேயுள்ள நந்திதேவர் விடும் மூச்சுக் காற்றில் அந்த தெய்வீக ஊஞ்சல் ஆடுகிறதாம்! அதனால் சிவலிங்கத்துக்கும், நந்திக்கு மிடையே நமஸ்காரம் செய்யக் கூடாது.

“தத்புருஷாய வித்மஹே சக்ர துண்டாய தீமஹி

தந்நோ நந்தி: ப்ரசோதயாத்” என்பது சாண்டில்ய முனிவர் அருளிய ஸ்ரீ நந்திகேஸ்வரகாயத்ரி யாகும்.


--------------------------------------------------------------------------------

6-4-2006 ஸ்ரீராம நவமி
வேய் புனர்பூசமும், விண்ணு ளோர்களும், தூயகற்கடகமும் எழுந்து துள்ளப் பிறந்தவர் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி. பத்ராசலத் தில் இன்று திருக்கல்யாண விழா நடக்கும். ஸ்ரீராமர் சித்திரை மாதம், நவமி திதியில், பூனர் பூசம் 4-ஆம் பாதத்தில் அவதரித்தார். சூரியன், சனி, குரு, குஜன், சுக்ரன் ஆகிய ஐந்து கிரகங்கள் உச்சம். சந்திரன் ஆட்சியிலிருக்கும்போது உதித்த வர் ரகுநாதன். இராமாவதாரம் நடுப்பகலில் அரண்மனையில் நடந்ததென்பதால் கிருஷ்ணா வதாரத்தை நள்ளிரவில்
சிறையில் அமைத்துக் கொண்டார் பகவான். அவருக்கு அரண்மனையும், ஆரண்யமும், சிறையும் சமமே! ஸ்ரீ ராமபிரானின் அவதார தினத் தைக் கொண்டாடுவது ஜன்மோத் ஸவம். பிரதமை முதல் நவமிவரை இராமாயணத்தைப் பாராயணம் செய்து தசமியன்று பட்டாபிஷே கத்தை முடிப்பது ஒருவகை. நவமி முதல் பத்து தினங்கள் பாராயணம் செய்வோரும் உண்டு. பட்டாபிஷே கத்தன்று, ஸ்ரீராம நவமியன்று பானகம், நீர்மோர்,வடைபருப்பு, விசிறி என்று தானம் செய்வார் கள். விஸ்வாமித்திரரின் பின் சென்ற போதும், பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்த போதும் ராமபிரான் வெய்யிலில் அலைந்தார். அவர் ஜனித்தது கோடை காலத்தில். அதனால் இந்த தானங்களும், நிவேதனங் களும் வகுக்கப்பட்டிருக்கின்றன. அஷ்டமியும், நவமியும் மகா
விஷ்ணுவிடம் சென்று “ஜனங்கள் எங்களைப் புறக்கணிக்கின்ற னரே” என்று வருந்த “இரு திதிகளிலும் நான் அவதரித்து உங்களைக் கொண்டாடச் செய்கிறேன்” என்று வாக்களித் தாராம்! அதன்படி ஸ்ரீராம நவமி யும், கோகுலாஷ்டமியும் பக்தர் களால் கொண்டாடப்படுகின்றன. வேடனான குகனையும், வானர னான சுக்ரீவனையும், அரக்க னான விபீஷணனையும் உடன் பிறந்தவர்களாக ஏற்றவர் ரகு நந்தனர். ஒரே பாணம், ஒரேசொல், ஒரே பத்தினி, என வாழ்ந்த அவரது மலரடியை இந்நன்னாளில் வணங்கி வழிபடுவோம். திருநெல்வேலி பஞ்சாங்கப்படி 7-4-2006-ல் வைஷ்ணவ ஸ்ரீராமநவமி கொண்டாடப்படுகிறது.



--------------------------------------------------------------------------------

11-4-2006 பங்குனி உத்திரம்
இன்று ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீரங்க நாச்சியார் திரு அவதார தினம். குரு வீடான மீனத்தில் சூரியனும், புதனின் உச்சவீடான கன்னியில் சந்திரனும் ஏழாம் பார்வையாகப் பார்த்துக் கொள்ளும் நாளே பங்குனி உத்திரம். முருகன்-ஸ்ரீவள்ளியையும், ஸ்ரீராமபிரான் - சீதாபிராட்டியாரையும், பார்வதி பரமேஸ்வரரையும் விவாகம் செய்து கொண்ட மங்கல நாள் இதுவே. காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், வரதர் கோயில்கள்; செஞ்சி, தேவதானம் பேட்டை, திருவண்ணாமலை, ஸ்ரீகள்ளழகர் கோயில்கள்; ஸ்ரீ வில்லிப்புத்தூர், மதுரை ஸ்ரீகூட லழகர் கோயில்; திருமோகூர் ஆகிய ஸ்தலங்களில் திருக்கல் யாண வைபவம் நடைபெறும்.

குடந்தை ஸ்ரீ ஆதிகும்பேஸ் வரர் மகாமகக் குளத்தில் தெப்பத்தில் வலம் வருவார். கும்பகோணம் ஸ்ரீசாரங்க பாணி வெள்ளி தேரில் பவனி, மயிலம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி அக்னி தீர்த்தம்; இரவு தெப்பத்தில் உலா. காஞ்சி ஸ்ரீ ஏகாம்பரநாதர் காலையில் கம்பா நதியில் ருத்ர பாத தீர்த்தம்; இரவு தங்க ரிஷபம், மேலக் கோட்டை திருநாராயணபுரம் ரதோற்சவம். திருவாரூர் ருத்ரபாத தரிசனம். தில்லை ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாள் கருட சேவை, திருப்பா திரிப்புலியூர், மதுரை, திருவேடகம், பழனி, விரிஞ்சிபுரம் தீர்த்தவாரி ஆகியவை இத்திருநாளில் நடக்கும்

--------------------------------------------------------------------------------


14-4-2006 “விய” தமிழ் வருடப் பிறப்பு விஷு புண்ணிய காலம்
இன்று முதல் ‘விய’ஆண்டு தொடங்குகிறது. வீட்டின் பூஜை அறையில் முகம் பார்க்கும் கண்ணாடி முன் ஒருதட்டை வைத்து அதை நகைகள், மலர்களால் அலங் கரித்து இருபுறமும் பளபளக்கும் குத்து விளக்கை ஏற்றி, படி நிறைய நெல் அல்லது அரிசிக் கிண்ணங்களில் பருப்பு வகைகள், புஷ்டியான வாழைக்குலை, பலாப்பழம், மாம் பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள் கொத்து, பூசணிக் காய், வெள்ளரிக்காய், சேனை, தென்னம்பூ, கொன்றைப்பூங் கொத்து, முழுவெள்ளி
ரூபாய் இவற்றை வைத்து, இவற்றில் கண்விழித்து, நமஸ்கரித்து ஆசி பெறுவதே விஷுக்கனி காணல். குருவாயூரில் துண்டுகளையும், சேலை முந்தானையையும் விரித்துப் படுத்து காத்திருந்து விஷு தரிசனம் காண்போர் ஏராளம். இப்படிச் செய் தால் ஆண்டு முழுவதும் நல்லதே நடக்கும் என்பது ஆன்றோர் காட்டிய வழி.

நாரதர் பெண்ணாக மாறிய போது பெற்ற இருபதாவது குழந்தை ‘விய’. ‘விய’ என்றால் செலவு. ஜாதகத்தில் லக்னத்திலிருந்து பன்னிரண்டாவது இடத்துக்கு ‘விய’ ஸ்தானம் என்று பெயர். அதே இடத்தை அயன, சயன, போகஸ் தானம் என்றும் சொல்வார்கள். ஏன் நாரதர்(தி) அப்படிப் பெயர் வைத்தார்?

‘இந்திரியத்தை விரயம் பண்ணாதே’ என்று எச்சரிக்கிறார். அதே சமயம் பணத்தைப் பெட்டியில் அடுக்கிப் பார்ப்பதில் எந்தப் பெருமையும் இல்லை. அதை அன்னதானம், வஸ்திரதானம் கோயில் திருப்பணி என்று செல விட்டால் புகழும், புண்ணியமும் கிடைக்கும். சக்தியை செலவிட்டு தான் சம்பாதிக்கிறோம். செலவு சிறப்படைய வேண்டும். கடந்த பார்த்திப ஆண்டு ‘அரசன்’. அரசன் வரிப் பணத்தை விரயம் செய்தால் கொடுங்கோலாட்சி. மக்களுக்கு நாட்டுக்கு நற்பணி செய்தால் சுப ஆட்சி. அடுத்துவரும் ஆண்டு ‘சர்வ ஜித்து’ சகலத்தையும் ஜெயித்தவன். பார்த்திப-சர்வஜித்து இரண்டுக் கும் நடுவிலிருப்பது ‘விய.’ தலை வன் விரயம் பண்ணாவிட்டால் சகலத்திலும் வெற்றி கிடைக்கும். செலவு நன்மை தருவதாக, நியாய மாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே இப்பெயரை வைத் தார். ‘விய’வோடு‘ ன்’ சேர்த்தால் பெருமை. ‘த்’ சேர்ந்தால் ஆகாயம். நம் செலவு பெருமைப்படுவதாக இருந்தால் ஆகாயம்போல் உயரலாம்.

நாராயணீயத்தில் குசேல சரித்திரத்தில் “க்ருதம் க்ருதம் நன் ‘விய’ தேதி ஸ்ம்பரமாத்” என்று ஒரு வாக்கியம் வருகிறது. ‘குருவாயூர் கிருஷ்ணன்’ தலையசைத்து ஒப்புக் கொண்ட ஸ்லோகமான இதன் அர்த்தம் “போதும் போதும் என்று ருக்மணி தேவி தடுக்கின்ற வைபவம்” இது.“ இரண்டாவது பிடி அவலை ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா சாப்பிட்டிருந்தால் துவாரகையே கை நழுவி விடும்” என்று எச்சரிக்கிறாள்.

பணம், சொத்து வாங்க, கன்யாதானம் பண்ண விரயமாக லாம். தீய போகங்களுக்கு விரய மாகக் கூடாது என்பதை இந்த ஆண்டின் பெயர் உணர்த்து கின்றது. கிளர்ச்சி என்ற பெயரில் பொது சொத்துக்களை அழிக்காம லிருப்போம். உலகமெல்லாம் சுபீட்சம் பெருக, ஊரில், இல்லத்தில் சுற்றத்தில் சந்தோஷம் ததும்ப, தொழிலில் முன்னேற இந்நன் நாளில் நாமும் ஆண்டவனைப் பிரார்த்திப்போம்.


--------------------------------------------------------------------------------


18-4-2006 வராஹ ஜெயந்தி
வைகுண்டத்தின் வாயில் காப்போராகிய ஜய- விஜயர்கள் சனகாதியரின் சாபத்தால் கஸ்யபர்-திதியின் மைந்தர்களாகப் பிறந்தனர். அவர்களே இரண் யகசிபு-இரண்யாட்சன். இவர்கள் பிறந்தபோது பூமி அதிர்ந்தது. ஆந்தைகள் அலறின. நரிகள் ஊளையிட்டன. சூறாவளி வீசியது. பிரம்மாவைக் குறித்து தவமிருந்த இரண்யாட்சன் பன்றியைக் கேவல மாக நினைத்ததால் அதை நீக்கி மற்ற எவராலும் மரணம் வரக் கூடாது என்று வரம் பெற்றான். நான்முகன் யோக நிஷ்டையில் ஆழ்ந்தார். அவரது நாசித் துவாரத்திலிருந்து கட்டை
விரலளவு வெளிப்பட்ட வராகம் நொடிக்கு நொடி வளர்ந்து மலை போலானது. அதன் உறுமல் பதினான்கு லோகங்களிலும் ஒலித்தது. பூமாதேவியை அபகரித்து கடலுக்கடியில் ஒளித்து வைத்த இரண்யாட்சன், வருணனை யுத்தத்திற்கு அழைத்தான். வருணன் வராஹ மூர்த்தியைக் காண்பித்து “அவரே உனக்கு சமமான வலிமையுடையவர். அவரிடம் போய் மோது” என்றான். வராஹப் பெருமாளோடு போரிட்டான் அரக்கன். அவனை சம்ஹரித்து பூமியை மீட்டு நிலை நிறுத்தினார் பூவராஹர்.

ஆனந்தத்தினால் வராகர் புன்னகைக்க அவரது கண்களிலி ருந்து விழுந்த கண்ணீரிலிருந்து அரசமரமும், திருத்துழாயும் தோன்றின. வராக மூர்த்தியின் மேனியிலிருந்து பெருகிய வியர்வை வெள்ளம் ஸ்ரீமுஷ்ணம் என்ற ஸ்தலத்தில் நித்ய புஷ்கரிணியாக விளங்குகிறது. சித்ரா பௌர்ணமி யன்று ஸ்ரீவராக மூர்த்தி பூமாதேவி யுடன் ஒரு முகூர்த்தகாலம் அதில் ஜலக்கிரீடை செய்வதாய் ஐதீகம்-இன்று இதில் ஸ்நானம் செய்வது மிகவும் விசேஷமானது.


--------------------------------------------------------------------------------

23-4-2006 திருப்பைஞ்ஞீலியில் அப்பருக்கு கட்டமுது கொடுத்த வைபவம்
காவிரியைக் கடந்து திருப் பைஞ்ஞீலியை நோக்கி நடந்த நாவுக்கரசர் பசியாலும், தாகத் தாலும் மெய் வருந்தினார். சிவ பெருமான் ஒரு சோலையையும், குளத்தையும் உண்டாக்கி அந்தணர் ரூபத்தில் வந்து அப்பரை அழைத்து “என்னிடம் கட்டு சோறு உள்ளது. உண்டு பசியாறி செல்ல லாம்” என்றார். சாப்பிட்டு
பொய்கையில் நீர் அருந்தி இருவரும் நடந்தனர். கோயிலுக் குள் சென்றதும் அந்தணராக வந்த சிவன் அந்தர் தியானமானார். “என் பசியும், தாகமும் தீர்க்க வந்தனையே” என்று அப்பர் பெருமான் மெய்யுருகிப் பதிகம் பாடிய நாள் இது. ஞீலி என்றால் ஒருவகை வாழை. திருப்பைஞ்ஞீலியில் ஸ்தல விருட்சம் “ஞீலி வாழை.” இந்நன்னாளில் சிவனை வழிபட்டால் அன்ன தோஷங்கள் விலகும். வயிற்று நோய்கள் குணமாகும்.


--------------------------------------------------------------------------------

25-4-2006 ஸ்ரீரமணமகரிஷி 56-ஆவது ஆண்டு ஆராதனை
விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி என்னும் ஊரில் அவதரித் தவர் ஸ்ரீரமணர். சுந்தரம் ஐயர்-அழகம்மை தம்பதிகளுக்கு 30-12-1879-ல் பிறந்த இவருக்கு பெற்றோர் சூட்டிய நாமம் வேங்கடராமன். உடன் பிறந்தவர் தமையனார் நாகசாமி; தம்பி நாக சுந்தரம்; தங்கை அலமேலு. 1892-ல் தகப்பனார் இறைவனடி சேர்ந்தார். வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது. உடல்வேறு, உயிர்வேறு என்ற எண்ணங்கள் அவர் உள்ளத்தில் பதிந்தன. சித்தப்பா சுப்பையர் நாகசாமியையும், வேங்கட ராமனையும் மதுரையின் படிக்க வைத்தார். படிப்பில் அக்கறை காட்டாத தம்பியை தமையன் கண்டித்தார். பெரியபுராணம் வேங்கடராமன் மனதை ஈர்த்தது.


திருவண்ணாமலையில் பெருமையை உறவினர்கள் சொல்லக் கேட்டு அங்கு போகும் ஆர்வம் நாளுக்கு நாள் வலுத்தது. அருணாசலம் என்ற சொல் அவர் செவிகளில் எதிரொலித்தது.
1896-ல் மாடியில் தனி அறையில் அவர் மரண அனுபவத்தை உணர்ந்தார்.அதிலிருந்து மதுரை மீனாக்ஷி ஆலயத்திலேயே அவர் பொழுது கழிந்தது. தன்னைத் தேட வேண்டாம் என்று எழுதிவைத்து விட்டு மூன்று ரூபாய்களோடு புறப்பட்டார். திண்டிவனம் வழியாக மாம்பழப்பட்டு வருவதற்குள் மூன்று ரூபாயும் செலவாகி விட்டது. நடந்தே திருவண்ணாமலை வந்தார். மொட்டையடித்துக் கொண்டார். ஒரு கோவணத்துக் கான துணியை வைத்துக் கொண்டு மீதியைக் குளத்தில் வீசி எறிந்தார். அண்ணாமலையார் ஆலயத்துக்குள்ளிருந்த பாதாள லிங்கக் குகையில் நிஷ்டையில் அமர்ந்தார். ஒரே இடத்தில் நெடுங்காலம் இருந்ததால். சரீரத் தில் புண்கள் தோன்றி சீழும், இரத்தமும் வெளிப்பட்டன. இவரது மஹிமையை உலகத்துக்கு அறிவித் தவர் சேஷாத்திரி சுவாமிகள். சுற்றத்தார் வந்து வருந்தி அழைத்தும் இவர் திரும்பிப் போகவில்லை. ரமணாஸ்ரமம் ஏற்பட்ட பிறகு அன்னையார் இவ ரோடு வந்து தங்கினார். வந்த இரண்டு ஆண்டுகளில் தாயார் கைலாய பதவி அடைந்தார். அன்னை சமாதி அருகில் மாத்ரூபூதேஸ்வரர் ஆலயம் அமைத்தார் ரமணர். 14-4-1950 அன்று இரவு மணி 8-47க்கு ரமண மகிரிஷி ஜோதியானார்.


--------------------------------------------------------------------------------


25-4-2006 மத்ஸிய ஜெயந்தி
வேதங்களைக் கடலில் ஒளித்த சோமுகாசுரனை எட்டு லட்சம் மைல் நீளமுள்ள மச்சமாகி, அழித்து வேதங்களை மீட்ட திருமாலின் மத்ஸியாவதார தினம் இது. ஊழிக் காலத்தில் இந்த பிரம்மாண்டமான மீனின் ஒரு கொம்பில்தான் ஒளஷதிகளும், சப்தரிஷிகளும் “வைவஸ்வதமனு” என்ற ராஜரி ஷியும் இருந்த ஓடம் கட்டப்பட்டி ருந்தது. பிரளயம் நின்றதும் தன் கொம்பால்

ஹயக்கிரீவாசுரனின் மார்பைப் பிளந்த மச்சஹரி, ஹயக் கிரீவர் என்ற நாமத்தையும் பெற்றார். சம்சாரக் கடலில் நற்குணங்களை நம்மிடம் தங்க வைத்துக் கொள்ள மச்சாவதாரம் எடுத்த மகா விஷ்ணுவை வழி படுவோம்.

--------------------------------------------------------------------------------


29-4-2006 சியாமா சாஸ்திரிகள் ஜனனதினம்
இன்று சங்கீத மும்மூர்த்தி களில் ஒருவரான சியாமா சாஸ்திரிகள் ஜனன தினம். இவரை உலகுக்கு அளித்துப் பெருமை பெற்ற ஸ்தலம் திருவாரூர். மனம் உருகி இவர் பாடிய போது அம்பிகை தாம்பூலத் தட்டுடன் வந்து சேவை செய்ததாகக் கூறப்படுகிறது. இவருடைய கிருதிகளில் ஸம்ஸ்கிருதத்தின் கம்பீரத்தையும், தெலுங்கு மொழியின் நயத்தையும் காணலாம். அவரது இல்லம் ஆலயத்துக்கு அருகில் இருந்தது.


கர்நாடக யுத்தங்கள் நடந்து கொண்டிருந்த காலம் அது. பராசக்தியின் நெற்றிக் கண்ணி லிருந்து தோன்றிய பங்காரு காமாக்ஷியை ஸ்ரீகாஞ்சி ஸ்ரீமடத் தின் 62ஆவது பீடாதிபதியான ஸ்ரீசந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் படுக்கையில் வைத் துக் கட்டிக் கொண்டு செஞ்சியில் சில நாட்கள் தங்கி உடையார் பாளையம் ஜமீன் சென்றார். அங்கு அம்மன் பூஜை, திருவிழா இல்லாமல் ஐம்பது ஆண்டுகள் தங்கியிருந்தார்.

தஞ்சை அரசர் பிரதாபசிம்மர் ஆச்சாரியரை தம் நகருக்கு அழைத்தார். ஆச்சாரியாள் சந்திரமௌலீஸ்வரர், பங்காரு (ஸ்வர்ண) காமாட்சியுடன் ஆனக்குடி, நாகூர், சிக்கல், விஜயபுரம் வழியாக தஞ்சையை அடைந்தார். அவரோடு வந்தவர் களில் இளைஞர் சியாமா சாஸ்திரிகளும், அவரது தந்தை யாரும் முக்கியமானவர்கள். முதலில் கொங்கணேஸ்வரர் ஆலயத்தில் அம்மனைத் தங்க வைத்துப் பின்னர் தனிக் கோயில் கட்டித் தந்தார் மன்னர். நினைவு தெரிந்ததிலிருந்து அம்மனை பக்தி யுடன் பூஜித்தவர் சியாமா சாஸ் திரிகள். அம்மன் அருள் சியாமா சாஸ்திரிகளை பெரிய வித்வா னாக்கியது. காஞ்சியைப் போலவே தஞ்சையிலும் பங்காரு காமாட்சிக்குப் பூஜைகள் நடத்தப் படுகிறது. சரபோஜி மகாராஜா காலத்தில் தஞ்சை காமாட்சி கோயில் மீண்டும் புதுப்பிக்கப் பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.


--------------------------------------------------------------------------------

29-4-2006 உய்யக் கொண்டார் திருநக்ஷத்திரம்
வைணவ குரு பீடத்தை அலங்கரித்த இவர் நாதமுனி களின் சீடர். திருவெள்ளறையில் பிறந்தவர். மணக்கால் நம்பிகளின் ஆசான். உய்யக்கொண்டாரின் இல்லாள் பெயர் ஆண்டாள். சோழிய வம்சத்தில் பிறந்த உய்யக் கொண்டார் திவ்யப் பிரபந்தங் களை உபதேசம் பெற்று அறிந்த வர். நாதமுனிகள் தனது அந்திம காலத்தில் யோக ரஹஸ்யத்தை அறிந்து கொள்ளும்படி இவரை வேண்ட “வீட்டில் பிணம் கிடக்க மணம் புரிவதா? ஊர் மக்களெல் லாம் சவம்போல் பக்தியற்றவர் களாயிருக்க நான் மட்டும் இறைவ னோடு இன்புறுவதா?”என மறுத்து திவ்யப்பிரபந்தத்தை முடிந்தவரை நாடு முழுவதும் பரப்பினார்.


--------------------------------------------------------------------------------

30-4-2006 அக்ஷய திருதியை
‘அக்ஷயம்’ என்றால் வளர்வது. ‘அட்சய வடம்’ என்று ஆலமரத்துக் கொரு மாற்றுப் பெயருண்டு. விழுதுகளுக்கு வடம் என்று பெயர் சிறிய விதையிலிருந்து வரும் ஆலமரம் பிரம்மாண்டமாகக் கிளைகள் விட்டுப் பெருகுவதா லேயே அதை அக்ஷயம் என் றார்கள். பஞ்சகாலத்தில் தஞ்சை மன்னனிடம் பூஜ்யஸ்ரீ ராகவேந்திரர் தானியக்குதிர் களில் ‘அக்ஷய’ என்று எழுதச் சொன்னார். அப்படிச் செய்தபின் மழை பெய்து, பூமி நனைந்து விளைச்சல் அமோகமாகி குதிர்கள் நிரம்பின. இன்று சிலர் பவுன், காசு, நகை, வெள்ளி என்று வாங்குவர். எது செய்தாலும் விருத்தியாகும். அள்ள அள்ளக் குறையாத அக்ஷய பாத்திரத்தை சூரியபகவான் தருமபுத்திரருக்கு வழங்கினார். மணிமேகலை அட்சய பாத்திரத்தால் ஏழை எளியோரின் பசி தீர்த்திருக்கிறாள். தமிழ் ஆண்டுகளின் கடைசிப் பெயர் ‘அக்ஷய’. ஏன் அப்படி வைத்தார் கள்? இது முடிவல்ல! மறுபடி வளரும் என்பதே இதன் பொருள். இன்று இறைவனை தரிசிப்பதும், ஹோமங்கள், மந்திரங்கள் நடத்துவதும் புண்ணியத்தைப் பெருக்கும்.

--------------------------------------------------------------------------------


30-4-2006 பலராம ஜெயந்தி
இராமாவதார முடிவில் லக்ஷ்மணர் தமையனிடம் “இப் பிறவியில் இளவலாகப் பிறந்து எதிலும் சுயமாக முடி வெடுக்க முடியவில்லை. அடுத்த அவதாரத் தில் மூத்தவனாகப் பிறக்க வேண்டும்”என்று கோரினார். ராமர் புன்னகையோடு சம்மதித் தார். அதனால் கிருஷ்ணா வதாரத்தில் ஆதிசேஷன் அம்சமான பலராமர் முதலில் பிறந்தார். குழந்தையாகப் பிறந்ததும் கிருஷ்ணர் நந்த கோபன் இல்லத்துக்கு மாற்றப் பட்டார் என்றால் பலராமர் கருவி லேயே மாற்றப்பட்டு தேவகி, ரோகிணி இரு தாயார்களிடமும் கர்ப்பவாசம் செய்தார்.
சாதாரண ராமரா! பலம் நிறைந்த பலராமர்! தமையன் விருப்பப்படி நடப்பதாக பாவனை செய்தபடியே தன் எண்ணங்களைப் பூர்த்தி செய்து கொண்டார் கண்ணன். சுபத்திரை, வத்ஸலை இருவர் திருமணமும் வாசுதேவன் கருத்துப்படிதான் நடந்தது. பலராமருக்கு சங்கர்ஷணன் என்ற பெயரும் உண்டு. தேனுகா சுரனையும், பிரலம்பா சுரனையும் ருக்மியையும் வதைத்தவர் பலராமர். துரியோதனனுக்குக் கதாயுத்தப் பயிற்சி அளித்த ஆசான். தன் கலப்பை நுனியால் அஸ்தினாபுரத் தையே அசைத்து கிருஷ்ணரின் மகனான சாம்பனை சிறை மீட்டு திருமண மேடையில் அமர்த்தியவர். இன்று இவரை வணங்குவதால் பலமும், புலமையும் பெருகும்.

- ஆர். பி