ஆர். பி.
10.1.2005 அமா சோமவார விரதம் (அரச பிரதட்சணம்)
எந்த மாதத்தில் திங்கட்கிழமையும், அமாவாசையும் சேர்ந்து வருகிறதோ அன்று இந்த விரதம் வரும். இதை அஸ்வத்த நாராயண பூஜை என்றும் கூறுவர். அரசமரத்தை ஏழு முறையிலிருந்து 108 தடவை வரை அவரவர் தேக வலி மைக் கும், நேரம் இருப்ப தற்கும் தகுந்தபடி பிரதட்சணம் செய்ய லாம். ஒரு பாத்திரத்தில் எள்ளைப் போட்டுக் கொண்டே போய் பிறகு அதை ஒரு வேதியருக்குத் தானம் செய்வதால் ஆயுள் கூடும். வயிற்று ரோகங்கள் நீங்கும். வயிறு மரத்தின் மேல்படும்படி ஆலிங்கனம் செய்து கொண்டால் சந்தான பாக்கியம் ஏற் படும். கர்ப்ப தோஷங்கள் அகலும். பிர தட்சணத்தின் போது பக்ஷணம் போட லாம். முடியாதவர்கள் பூவை, வெல்லத் தை போடலாம். வாழைப்பழம் போடுவது சிலாக்கியம். மற்ற பழங்களும் போட லாம். பிறகு அவற்றை முடிந்தவரை விநி யோகித்து விடவும். யுதிஷ்டிரருக்கு பீஷ்மர் உபதேசித்த விரதம் இது. இது தேஜஸ், புத்தி எல்லாம் கொடுக்கக் கூடிய நோன்பு.
“மூலதோ ப்ரஹ்ம ரூபாய
மத்யதோ விஷ்ணு ரூபிணேஞு
அக்ரத: ஸிவ ரூபாய
வ்ருக்ஷ ராஜாயதே நம:ஞுஞு
என்று சொல்லிக் கொண்டே வலம் வருவது விசேஷம். அரசமரத்தை காலையில்தான் சுற்ற வேண்டும். இதனால் கை நடுக்கம், நேத்ரரோகம் எல் லாம் நீங்கி பூரண ஆரோக்கியம் கிட் டும். அரசமரத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வசிக்கின்றனர். அரசமரத்தைத் தொட்டாலே பாபங்கள் விலகுவ தாகப் புராணங்கள் சொல்கின்றன. ஒவ்வொரு பிரதட்சணம் முடிந்ததும் நமஸ்கரிப்பது சிறப்பானது.
--------------------------------------------------------------------------------
10.1.2005 ஹனுமத் ஜெயந்தி
சூரியனும், சந்திரனும் தனுர் ராசியில் இருக்கும்போது மேஷ லக்னம், வளர்பிறையில் அவதரித்தவர் ஆஞ்சனேயர். அஞ்சனைக்கும் வாயு தேவனுக் கும் பிறந்தவர். அனுமன் பிறந்தவுடன் சூரியனை சிவப்பான கனி என்று பறிக்க ஆகாயத்தில் தாவினார். அப் போது கிரகணம் பிடிக்கும் நேரம். ராகு கதிரவனைப் பற்ற வந்து கொண்டிருந் தான். அனுமன் அதற்குக் குறுக்காக வர அவன் இந்திரனிடம் முறையிட்டான். இந்திரன் அனுமனைத் தடுப்பதற்காக வஜ்ராயுதத்தை வீச அது மாருதியின் முகத்தைத் தாக்கியது. அனுமன் மூர்ச்
சித்து விழுந்தான்.
வஜ்ரா யுத அடியால் முகவாய் வீங்க அனுமன் என்று பெயர் வந்தது. (அனு- முக வாய்) வாயு தன் குமாரனைத் தூக்கிக் கொண்டு ஒரு குகைக்குள் ஓட அகில உலகமும் மூச்சு விட முடியாதபடி திண றியது. பிரம்மன், இந்திரன் முதலான எல்லா தேவர்களும் குகைக்கு வந்து வாயுவை சமாதானப்படுத்தினர். பிரம்மா கமண்டல நீரைத் தெளித்து அனுமனை உயிர்ப்பித்தார். அதோடு அனுமன் விரும்பியபடி சிறிய, பிரம்மாண்டமான வடிவெடுத்து எங்கேயும், எவர் பார்வை யிலும் படாமல் சஞ்சரிக்கலாம் என்ற வரத்தையும் அளித்தார். பிரம்மாஸ்தி ரத்தால் ஆபத்து வராது என்று வரம் கொடுத்தார் சிவன். நீரால் ஆபத்து வராது’ என்று வருணனும். ‘நெருப்பால் அழிவில்லை’ என்று அக்னியும் வரமளித்தனர். சூரியன் உரிய பருவத்தில் சகல சாஸ்திரங்களையும் கற்பித்து பண்டிதனாக்குவதாக வாக்க ளித்தார். அதன்படி மாருதி சூரிய னைப் பார்த்தபடி பின்னோக்கி நகர்ந்து கொண்டே வேத, சாஸ்திரங்களைக் கற்றுக் கொண்டார். அப்பேர்ப்பட்ட ஆஞ்சனேயரை இன்று வணங்கி வழிபடுவதால் சனிப்பீடை விலகுவதோடு வித்தைகள் சுலபமாக வரும். காரியத்தடைகள் நீங்கும். இன்று சுந்தரகாண்டம் படிப்பதும் விசேஷம்.
--------------------------------------------------------------------------------
11.1.2005 கூடாரவல்லி
“கூடாரை வெல்லும்” என்ற திருப்பாவையின் 27-ஆவது பாடலுக்கு கண்ணன் வரமளித்ததாகப் புராணம் சொல்கிறது. ஆனாலும் ஆண்டாள் முப்பது பாடல்களையும் பாடி முடித்தாள் “முழங்கை வழி நெய்” ஒழுகும்படி இன்று விஷ்ணு ஆலயங்களில் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு விநியோகிப்பர். வைஷ்ணவர்கள் இல்லத்திலும் நிவேதனம் செய்வர். இதனால் திருமணமாகாத மங்கையருக்கு விவாகம் கைகூடும்.
--------------------------------------------------------------------------------
13.1.2005 போகிப்பண்டிகை
மழையைக் கொடுத்து தாவரங்களை செழிக்க வைத்த இந்திரனை வழிபடும் நாளாக இந்த நாள் முன்னர் கொண்டாடப்பட்டு வந்தது. போகங்களை அனுபவிக்கும் இந்திரன் போகி என்று அழைக்கப்பட்டான். இந்திரனை வரவேற்க வீட்டுக்கு வெள்ளையடித்து சுத்தம் செய்தனர். சிலப்பதிகாரமும் காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரவிழா கொண்டாடப்பட்டதாகச் சொல்கிறது. கிருஷ்ண பரமாத்மா இந்திரவிழாவைத் தடுத்து மழையைத் தரும் கோவர்த்தன கிரிக்கு பூஜை நடத்தியதாகவும் அத னால் சினமுற்ற இந்திரன் ஏழு நாட்கள் அடைமழை கொட்டச் செய்ததாகவும், கண்ணன் கோவர்த்தன கிரியைக்
குடையாகப் பிடித்து ஆநிரைகளையும், ஆயர்களையும் காத்ததாகவும் பாகவ தம் கூறுகின்றது. இது தக்ஷிணாயணத் தின் கடைசி நாள். அமர லோகத்தில் பொழுது புலரும் வேளை; இன்று அழுக் கடைந்த, நைந்த பொருட்களை எரிப்பர். அது மட்டும் போதாது. மனதிலுள்ள அழுக்கான எண்ணங்களையும் பொசுக்க வேண் டும். திருப்பாவை பாடி முப்பது நாட்க ளும் நெய்யும், பாலும் ஒதுக்கி வெறும் தரையில் படுத்து நோன்பு காத்த கோதையை முத்துப் பல்லக்கில் ஸ்ரீரங்கம் அழைத்து வர உத்தரவிட்டு ஸ்ரீரங்கநாதன் ஆட் கொண்ட திருநாளும் இதுவே.
--------------------------------------------------------------------------------
14.1.2005 மகர சங்கராந்தி பொங்கல் பண்டிகை
சூரியனின் தேர் தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்குள் பிரவேசிக்கும் தினம் இது. இன்றிலிருந்து ஆறுமாதங் கள் தேவலோகத்தில் பகல் நேரம். பயிர்கள் செழுமையாக வளர நீர் நிலை களிலுள்ள நீரை மேகங்களுக்கு எடுத் துச் செல்ல சூரியக் கதிர்கள் உதவுகின் றன. அவன் உபகாரத்தால் வளர்ந்த கரும்பு, நெல், மஞ்சள், இஞ்சிக் குலை கள் இவற்றை வைத்து பொங்கல் பண்டி கையைக் கொண்டாடுகின்றோம். பெண்கள் சூரியன் உதிக்கு முன் எழுந்து வாசலில் நீர் தெளித்து மங்க லக்கோலமிட்டு, காவி பூசுவர். அரக்கு நிறம் துர்க்கைக்குரியது. துக்கம் வராமலிருக்க கஷ்டங்கள் தொலைய, மங்கல வாழ்வு நிலைக்க செம்மண் பூசப்படுகிறது. இன்று ஆதித்ய இருதயம், சூரிய ஸ்லோகம் படிப்பது நல்லது.
14ஆம் தேதி காலை 7.48க்கு சூரியன் மகரலக்னத்தில் பிரவேசிக்கிறார். காலை 7-8 மணிக்குள் புதஹோரை யில் பொங்கல் பாத்திரத்தில் மஞ்சள் குங்குமமிட்டு, பசு மஞ்சளைப் பிணைத்த கயிறைக் கங்கணமாகக் கட்டி அவரவர் சம்பிரதாயப்படி பொங்கல் வைக்க வேண்டும். தீபாராதனை காட்டும் போது குல தெய்வத்தையும் மூதாதையைரையும் பிரார்த்தனை செய்தால் நல்லதே நடக்கும். இந்த வருஷம் சித்த யோகத் தில் ஸ்ரீ சூரிய பகவான் பிரவே சிப்பதால் மகர சங்கராந்தி புருஷ னுக்கு எவ்வித தோஷ மும் இல்லை! இன்றிலிருந்து உத்தராயண புண்ய காலம் ஆரம்பம். பொங்கல் பால் மேற்கே பொங்கும். காலை 10 - 10.30 மணிக்கும் பொங்கல் வைக்கலாம்.
--------------------------------------------------------------------------------
15.1.2005 மாட்டுப்பொங்கல்
வயலை உழும் காளைகளுக்கும், பால் தரும் பசுக்களுக்கும் நன்றி கூறும் திருநாள் இது. இன்று காலை 7-8 மணிக்கு மகரலக்னத்தில், குரு ஹோரையில் மாடுகளுக்கு ஜலத்தில் வில் வம், வெட்டி வேர், சிவப்பு பூசணிப்பூ, புஷ்பம், முதல் நாள் சூரிய பூஜை நடத்திய நிர்மால்யம் இவைகளைப் போட்டு, பன்னீர்த் துளிகள் கலந்து மாடுகளைக் குளிப்பாட்டி, மாட்டுக் கொட்டகையைக் கழுவி கோலமிட்டு காவி பூசி, மாட்டுக்கு அலங்காரம் செய்வித்து காலை 8.9 மணிக்குள் பொங்கல் வைத்து, பூஜை செய்து, நைவேத்தியம் காட்டி, மாடுகளை நமஸ்கரித்து, அட்சதை போட வேண்டும். பூசணியின் இலையில் சர்க்கரைப் பொங்கலைச் சாப்பிடக் கொடுக்க
வேண்டும். முன்னதாகவே மாட்டுக் கொம்பு களுக்கு வர்ணம் தீட்டி கால்களுக்குச் சலங்கை அணிவிக் கலாம். பூ, கரும்புத் துண்டு, வேப்பிலை, மா விலை, பிரண்டை, மஞ்சள் கொத்து, பழ வகைகள், வடை, முறுக்கு ஆகிய ஒன்பது தினுசுகளை வைத்து மாலை யாக்கி மாட்டின் கழுத்தில் கட்ட வேண் டும். பூமாலை போட்டு மாலையில் 5-6 மணிக்கு கடக லக்னம், சுக்கிர ஹோரையில் மங்கல வாத்தியத்துடன் வீதி வலம் வந்து, கோவிலில் பூஜை செய்து தீபாராதனை காண்பித்து நண்பர்கள், வாடிக்கையாளர்கள் இல்லங்களுக்குச் சென்று (காலை பூஜையின் போதே கோடி வஸ்திரம் அணி வித்திருக்க வேண்டும்) அவர்கள் தரும் பழம், பட்சணங்களை மாடுகளை சாப்பிட வைத்து வஸ்திர மரியாதை களை ஏற்றுக் கொண்டு, கொட்டகைக்குள் நுழையு முன் திருஷ்டி சுற்றி, சூரைத் தேங்காய் உடைத்து, ஆரத்தி எடுத்து மாட்டின் வலது காலை முதலில் வைக்கும் படி செய்து உள்ளே அழைத்துச் செல்வது சிலாக்கியம். அந்த நேரத்தில் மாடு சாணி போட்டால், கோமயம் விட்டால் மிகவும் அதிர்ஷ்டம். தோஷ சாந்தி, ஐஸ்வர்ய பாக்கியம் கிட்டும். அலங்கரித்த மாலை களைக் கழுத்திலிருந்து எடுத்து தெரு வாயில் படிக்கு மேல் கட்டிய பிறகு, பொங்கலன்று பசும் சாணியில் செய்து வைத்த பிள்ளையார் சாணியை எடுத்து நிலை வாயிற்படியின் இரு புறமும் நாமமாகவோ ஸ்வஸ் திக்காகவோ தீற்ற வேண்டும். மிகுதி சாணியை புஷ்பத்தோடு நீர் நிலைகளில் போடுவதால் தனலக்ஷ்மி கிருபையை அடையலாம். இன்றும், இதைத் தொடர்ந்தும் கிராமங்களில் ஜல்லிக் கட்டு நடக்கும்.
--------------------------------------------------------------------------------
15.1.2005 கனுப்பிடி வைத்தல்
இன்று காலை வாசலில் செம்மண் இட்டு கோலமிட்ட பிறகு வெட்ட வெளி யில் பெருக்கி, நீர் தெளித்து கோல மிடுவர். மஞ்சள் குலையிலுள்ள இலை, அல்லது வாழை இலையை விரித்துத் தண்ணீரால் துடைத்து இலை நுனியில் வெற்றிலை, பாக்கு, பழத்துண்டு, கரும்புத்துண்டுகள் எல்லாம் வைப்பர். முந்திய தினம் செய்த சர்க்கரைப் பொங்கலையும், வெள்ளை சாதத்தைத் தயிர் விட்டுப் பிசைந்தும் எடுத்து வந்து வெள்ளை சாதத்தைத் மூன்றாகப் பிரித்து ஒருபங்கில் குங்குமத்தையும், இரண்டாவது பங்கில் மஞ்சள் பொடி யையும் கலந்து வைத்துக் கொள்ள
வேண்டும். வீட்டிலுள்ள சுமங்கலி, கன்னிப் பெண்க ளுக்கேற்ப அளவு இருக்கலாம் .“காக்கா பிடிவைத் தேன், கனுப் பிடி வைத்தேன், காக்கா கூட்டம் போல எங்கள் கூட்டமும் ஒற்றுமையாக இருக்கணும் என்று பாடியபடி முதலில் சர்க்கரைப் பொங்கல் உருண்டைகளையும் (நெல்லிக்காய் அளவு 5,7,9, என்ற ஒற்றைப் படை எண் ணிக்கையில்) அடுத்து மஞ்சள், குங்குமசாதங்களையும், கடைசியில் தயிர் சாத உருண்டைகளையும் வைக்க வேண் டும். பிறகு கையை சுத்தப்படுத்திக் கொண்டு நீரைச் சுற்றி பட்சி, தேவதைகளுக்கு நிவேதித்து நமஸ்கரிக்க வேண்டும். மூதாதையர்களை, குல தெய்வத்தை மானசீகமாக நினைத்துக் கொள்ள வேண்டும். கனுப்பிடி வைக் கும் போது சகோதரர்கள் கூடவே இருப்பது நன்மை தரும். அன்று காலை குக்கர், அல்லது பொங்கல் பானையில் கட்டியிருக்கும் மஞ்சளை சுத்தப்படுத்தி சுமங்கலிகள் கையால் நெற்றியில் தீற்றிக் கொள்வார்கள். இதுவும் ஒற் றைப்படைதான். ஒரு ஆள் குறைந்தால் தீற்றிக் கொண்டவரிடமே மறுபடி தீற்றிக் கொள்ளலாம். இப்படி தீற்றிக் கொள்வதால் மாங்கல்ய பாக்கியமும், தீர்க்காயுளும் கிட்டும் என்பது வழிவழி வந்த நம்பிக்கை. இதன் பின்னரே கனுப்பிடிவைப்பர். ‘மூதாதையர்களுக்கு குளிக்காமல் சிலர் வைப்பதா என்று ஸ்நானம் செய்து விட்டு பிறகு வைப்பார்கள். சிலர் தீட்டுப்போகும் என்று கனுப்பிடி வைத்த பின் நீராடுவர். குளித் தபின் சித்ரான்னங்களைக் கலந்து பயிருக்கு வளம் தந்த நதி தேவதைக்கு அல்லது வருணனுக்கு நிவேதித்த பின் சகோதரர்களுடன் சாப்பிடுவார்கள். சகோதரர் நலம் வேண்டி செய்யப்படும் சடங்கானதால் சகோதரர்கள் சகோதரியருக்குப் பரிசளிப்பர்.
--------------------------------------------------------------------------------
16.1.2005 காணும் பொங்கல்
“ஆடிப்பட்டம் தேடிவிதை” என்ற முதுமொழிக்கேற்ப உழுது பயிரிட்டு, களையெடுத்து, நீர்பாய்ச்சி, காவலி ருந்து அறுவடை செய்து, இப்படி நெல் மூட்டைகள் இல்லம் வந்து சேரும்வரை விவசாயிக்கு ஓயாத வேலை. இதனால் அவன் குடும்பத்தை சந்தோஷப்படுத்த, தங்கை, மகள் என்று நங்கையருக்கு விவாகம் நடத்த முயற்சிக்க, உறவு களைப் புதுப்பிக்க ஏற்படுத்தப்பட்ட நாளே இத்திருநாள். இன்று பொழுது போக்கு இடங்களில், கூட்டம் அதிக மாக இருக்கும். ஒருவரை ஒருவர் கண்டு மகிழும் நாள் காணும் பொங்கலாகியது.
--------------------------------------------------------------------------------
19.1.2005 தை கிருத்திகை
உத்தராயணத்தில் வரும் முதல் கிருத்திகை இது. சரவவணப் பொய்கையில் கார்த்திகைப் பெண்கள் அறுவ ரால் சீராட்டி பாலூட்டி வளர்க்கப்பட்ட கார்த்திகேயனின் திருநாள் இது. அறுபடை வீடுகளில் மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான nக்ஷத்திரங்களில் ஆயிரக்கணக்கான அற்புதங்களைச் செய்து கொண்டு அருள்பாலிக்கிறார் கார்த்திகேயன். இன்றையதினம் முரு கன் அருள்பாலிக்கும் தலங்களுக்கும், உள்ளூர் சிவன் கோவில்களில் உள்ள முருகன் சந்நதிகளுக்கும் சென்று வழிபடுவது புண்ணியம் தரும்.
--------------------------------------------------------------------------------
25.1.2005 தைப்பூசம்
மகரத்தில் சூரியனும், கடகத்தின் நடு நக்ஷத்திரமான பூசமும் ஒன்றை ஒன்று சந்திக்கும் தினமே தைப்பூசம். இந்த நாளில் பல ஸ்தலங்களில் தெப்பத் திருவிழா நடக்கும். வடலூரில் ஸ்ரீஇராமலிங்க ஸ்வாமிகள் நிறுவிய சத்திய ஞான சபை ஆலயத்தில் இன்று அருட் பெருஞ் ஜோதி தரிசனம் காண ஆயி ரக்கணக்கான மக்கள் கூடுவர். இராமையாபிள்ளை- சின்னம்மையின் புதல்வர் இராமலிங்கம். சிதம்பரம் நட ராஜ பெருமான் சந்நதியில் கற்பூர ஹாரத்தி காண்பித்து எடுத்து வந்த அப்பைய தீக்ஷிதர் “பிற்காலத்தில் இவன் ஒரு மகானாக வருவான்” என ஆசிர்வதித்தார் சிறுவன் ராமலிங் கத்தை. பெற்றோரை இழந்தபின் தமை யன் சபாபதி - அண்ணி பாப்பாத்தி அம்மாளால் வளர்க்கப்பட்டார் இராம லிங்கம். அவர் தங்கியிருந்த மாடி அறையில் ஒரு பெரிய கண்ணாடி உண்டு. அதன் எதிரே கொழுந்தனின் வேண்டுகோள்படி ஒரு தீபத்தை ஏற்றி வைப்பார் அண்ணி. கதவைத் தாளிட் டுக் கொண்டு விளக்கொளியைக் கண்ணாடியில் கண்டபடி தியானத்தில் ஆழ்ந்து விடுவார் அவர். தணிகை முருகன் தரிசனத்தை இராமலிங்கம் கண்ணாடியில் கண்டு, “வண்மைத் தணிகாசலமும் என் கண்ணுற்றதே” என்று பாடினார். அன்று முதல் அருட்பா அருவியெனக் கொட்டியது. ஒரு நாள் வள்ளலார் கடலூரிலிருந்து மேற்கு நோக்கிப் புறப்பட்டார். அன்பர் கள் பின் தொடர்ந்தனர். ஒரு இடத் தைக் காட்டி இதுவே தகுந்த இடம்’ என்றார். அந்த இடம் சிதம்பரத்துக்கு வடக்கே தென்பெண்ணை, கெடிலம், வெள்ளாறு, மணிமுத்தாறு ஆகிய நதிகள் சூழ இருந்த வடலூர் ஆகும். அந்த சித்திபுரத்தில் காணி நிலம் தானமாகக் கிடைத்தது. எண்கோண மாய் தாமரை வடிவில் வரைந்து காட்டி னார் வள்ளலார். அங்கே கட்டடம் கட்டி ஐந்து அடி உயர நிலைக் கண் ணாடிகளை பதித்து நடுவில் தீபத்தை ஏற்றி வைத்தனர். அந்த நாள் தைப் பூசம். அந்த மாளிகையே சத்தியஞான சபை. கண்ணாடித் திருவிளக்கின் முன் வண்ணத் திரைகளை அமைத் தார் அருட்பெருஞ்ஜோதி அடிகள். கறுப்பு, நீலம், பச்சை, சிவப்பு, வெள்ளை, கடைசியாக ஆறு நிறங்களின் கலப்பு. திரைகள் விலகி பல்லாயிரம் மக்கள் தரிசனம் பெற்றனர். அந்த வைபவம் ஒவ்வொரு ஆண்டு தைப்பூசத்தன்றும் வடலூரில் நடைபெறுகிறது.
--------------------------------------------------------------------------------
30.1.2005 தியாக பிரம்மத்தின் 158-வது ஆண்டு ஆராதனை
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரே சத்குரு தியாகராஜர். ராம பக்தரான இவர் பூஜித்த ராம விக்ர கத்தை இவரது தமையனார் குளத்தில் எறிய, இவர் அன்ன ஆகாரமின்றித் தவித்தார். “இன்ன இடத்தில் இருக் கிறேன்-வந்து மீட்டுக்கொள்” என்று ஸ்ரீராமபிரான் அவர் கனவில் வந்து கூற மீட்டு வந்து பூஜித்தார் தியாக ராஜர். திருவாரூரில் பிறந்து திருவை யாற்றில் சமாதியானவர் இவர். 96 கோடி தாரக நாமத்தை சிவாலயத்தில் ஜபித்தவர். சென்னை அருகிலுள்ள கோவூருக்கு ஒரு அன்பரின் அழைப் பின் போரில் விஜயம் செய்து அங்கு அருள் புரியும் ஸ்ரீ சௌந்தர்யநாயகி
சமேத சுந்த ரேஸ்வரர் மீது ஐந்து கீர்த்தனைகள் பாடினார். இவை கோவூர் பஞ்சரத்னம் என்று வழங்கப்படுகிறது. அதில் சிவ பூஜையின் மகிமைகளையும், சிவாலய வழிபாட்டின் சிறப்பையும் வெளிப்படுத் தியுள்ளார். இவர் திருவையாற்றில் வாழ்ந்த காலத் தில் ஒரு நாள் கூட பஞ்ச நதீஸ்வர தைத் தரிசிக்காமல் இருந்ததில்லை. திருவையாற்றில் நடை பெறும் தியாகப் பிரம்ம ஆராதனை சம யம் பஞ்சரத்னக் கீர்த்தனைகள் இசைத்தல், மகா அபி ஷேகம் ஆகியவற்றில் கலந்து கொள்ள கர்நாடக இசைக் கலைஞர்கள் ஏராளமாக வருவார்கள். இவரது சமாதியில் பாடுவதால் இசை விருத்தியாகும் என்பது கலைஞர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.