Tuesday, April 05, 2005

கிராம தேவதைகள்

இல்லாத புதையலுக்கு பொல்லாத பலி :


“அட, புரிஞ்சுக்கிட்டியா! இதுவும் இருக்கட்டும். தங்கக் கட்டிப் பொதையல் எடுக்க ஒரு நிறை சூலி பலி கொடுக்க ணுமாம்; முரண்டு பண்ணாம வா” அவளை நெட்டித் தள்ளி னான் ஒருவன். அம்மா கண்ட விடிகாலை கனவு பலித்து விட்டதே! குறத்தி சொன்னபடி வருணனும், வாயுவும் வந்து விட்டார்கள்! காலனும் வந்து விடுவானோ? ஆசைக் கணவனின் முகமும், அன்பு சகோதரர்கள் முகமும் நினைவுக்கு வந்தது!

“இதோ, பாருங்க! நான் தளவாய் நாயக்கர் மருமக! என் மாமாவுக்கு சமாசாரம் தெரிஞ்சா உங்க தலையை சீவிடு வாங்க! நான் செத்துப்போனா உங்களை சும்மா விடுவேனா? பழையனூர் நீலி மாதிரி உங்க அறுபத்தோரு சாதியையும் சீரழிப்பேன்” என்று மிரட்டிப் பார்த்தாள். இதற்கெல்லாம் மசிகிற வர்களா அவர்கள்!

“அட, பயமுறுத்துறியா! இம்புட்டுச் தெரிஞ்ச எங்களுக்கு பேயைக் கட்டத் தெரியாதா?” ஒருவன் சிரித்தான். அவளைக் கட்டி வைத்து, பன்னீரில் நீராட்டி இருவாட்சி மாலை போட்டனர். அதற்கு முதல் நாள், மதுரையில் துர்சகுனங்கள் கண்ட தளவாய் நாயக்கர் மருமகளின் nக்ஷமத்தை அறிந்து வர மகனை அனுப்பினார்.

வீட்டுக்கு வந்த மருமகனை வரவேற்று உபசரித்த பொன்னி யின் பெற்றோர் “உடம்பெல்லாம்! கசகசன்னு இருக்குன்னு சுனைக்கு சினேகிதிகளோட போனா! வந்துருவா” என்றார். தோழிகள் ஒவ்வொருவராய் வந்து விட்டனர். ஆனால் பொன்னி யைக் காணோம். காற்றும், மழையும் அவர்களைக் கலங்க வைத்தன. லாந்தர் விளக்கு களுடன் ஏழு சகோதரர்களும், இணை சூரனும், அனஞ்ச பெருமாளும், உறவினர் பட்டாளமும் அரிவாள், வேல் கம்புகளுடன் பொன்னியைத் தேடிப் புறப்பட்டனர். எதிரே வந்த காட்டாளம்மன் கோயில் பூசாரி “ஐயா! அவுங்க அறுவத்தோரு பேர். கையிலே வீச்சரிவா! நான் ஒத்தை
ஆள், எதிர்க்க முடியுமா? பொன்னிறத்தாளைப் பலி கொடுக்க அழைச்சிட்டுப போறதைப் பார்த்தேன்! அதுதான் விபரம் சொல்ல ஓடி வந்தேன்” என்று சொல்லி முந்திக் கொண்டான்.

கோயில் முன்னால் தலை வாழை இலையில் இறந்த குழந்தையைப் பார்த்ததுமே பாதி செத்துவிட்ட இணைசூரன் பொன்னியின் சடலம் கண்டு சூலத்தை நெஞ்சில் பாய்ச்சிக் கொண்டான். ஏழு சகோதரர்களும் ஒரு தங்கையைக் காப் பாற்ற வக்கற்றுப் போனோமே என்று உயிரை மாய்த்துக் கொள்ள, பெற்றோர் அதிர்ச்சியில் மடிந்தனர்.

ஆயுதங்களுடன் ஆவேசமாக வரும் கூட்டத்தைக் கண்டதுமே கள்வர்களும், மாந்திரீகனும் அடர்ந்த கருவேலங் காட்டுக்குள் ஓடி மறைந்தனர். ஆக புதையல் எதுவும் எடுக்கப் படவில்லை! ஆனால் கள்வர்கள் அத்தனை பேரையும், மாந்திரீக னையும் பொன்னியின் ஆவி பழி வாங்கியது. நோய் கண்டு ரத்தம் கக்கி அத்தனை பேரும் இறந்தனர். காட்டிக் கொடுத்த பூசாரியையும் விடவில்லை!

உடல் உபாதையால் அவன் துடிதுடித்தான். அவன் மனைவி “தாயே! உங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை மிகப் பெரியது தான்! சாந்தி கொள்ளுங்கள். தெய்வமாகி எங்களைக் காப் பாற்றி எங்கள் பூசையை ஏற்றுக் கொள்ளுங்கள்! எனக் கதற, பொன்னிறத்தாள் அமைதியுள்ளாள்.

“குமரி மாவட்டத்தில் முத்தாரம்மான் கோயிலிலே என்னை பிரதிஷ்டை பண்ணி கொடை விழா நடத்துங்க. நான் குளிர்ந்து போவேன்” என்று கோடாங்கிக்காரன் மேல் அருள் வந்து வாக்குச் சொல்ல அப்படியே செய்தனர். காக்கும் தெய்வ மானாள் பொன்னி.