ஆர். பி.
5.2.2005 சேங்காலிபுரம் ஸ்ரீ முத்தண்ணாவாள் 111-ஆவது ஆண்டு ஆராதனை
ஸ்ரீஅனந்தராம தீக்ஷிதர் - நாக லக்ஷ்மி அம்மாளுக்கு மகனாகப் பிறந்தவர் இந்த அக்னி ஹோத்ரி. பெற்றோரிட்ட பெயர் வைத்தியநாதன். கூப்பிடும் பெயர் முத்தண்ணா. மூன்றாவது வயதில் அட்சராப் பியாசம் தொடங்கியது. ஐந்தா வது வயதில் உபநயனம் நடந்தது. பன்னிரண்டு வயதிற்குள் பிதாவிடமிருந்து வேதம், காவ்யம், ச்ரௌதம், ஆபஸ்தம்பக்ருஹ்ய சூத்ரம், தர்ம சூத்திரம் ஆகியவற்றை நன்கு கற்றறிந் தார். இஞ்சிக் கொல்லை ஸ்ரீசாமா சாஸ்திரி களிடம் நடந்து சென்று இரவில் தர்க்க சாஸ்திரம் படித்தார். பதினாறாவது வயதில் ஸோம யாகம் செய்தார். கஞ்சனூர் நாராய ணேந்திராள் என்னும் சன்னியாசியிடம் வேதாந்த வித்தையைக் கற்றார். ஸ்ரீ முத் தண்ணாவாளுக்கு ஆயிரக்கணக்கான சிஷ்யர்கள் உண்டு. பருத்தியூரிலிருந்து ஸ்ரீகிருஷ்ண சாஸ்திரிகள் என்கிற ஏழு வயதுச் சிறுவன் இவரிடம் காவியம் கற்க வந்தான். அப்போது முத்தண்ணாவாள் “ரகு என்ற மன்னன் ‘விஸ்வஜித்’ என்ற யாகத்தில் தனது எல்லா சொத்துக்களை யும் தானமாகக் கொடுத்தான்” என்று ஸ்லோகத்துக்கான அர்த்தத்தை கூற, கிருஷ்ண சாஸ்திரிகள் புறப்பட்டார். “ஏன் போகிறாய்?” என்று கேட்டார் குருநாதர். “குருநாதா! நான் மிகவும் ஏழை. காவியம் படித்து பிரவசனம் செய்து பொருள் தேடலா மென்று வந்தேன். இங்கே ராஜாவே ஏழை யான ஸ்லோகம் சொல்லிக் கொண்டிருக்கி றீர்கள்! சகுனம் சரியில்லை” என்றார் சீடர். “ஏன்! நீயும் ராஜாவைப் போல் யாகம் செய்து தானம் செய்யுமளவு சம்பாதிப்பாய் என்று எடுத்துக் கொள் ளக் கூடாது?” என்று கேட்டார் ஸ்ரீமுத்தண்ணாவாள். அப்படியே பாடம் கேட்க உட்கார்ந்து விட்டார் சிஷ்யர். குரு நாதர் வாக்கு பலித்தது. பின்னாளில் அவர் பெரும் செல்வந்தராகி ஏராளமாய் தான தருமம் செய்தார். இப்புண்ணிய நாளில் அம்மகானை வணங்கி கல்விச்செல் வத்தையும், ஞானத்தையும் பெறுவோம்.
--------------------------------------------------------------------------------
8.2.2005 ஸ்ரீ புரந்தரதாஸர் திருநக்ஷத்திரம்
இவரை நாரத முனிவரின் அவதாரம் என்கிறது புராணம். வேமன்னபுரியில் மாதவராவ் - ரத்னாபாய் தம்பதிகளுக்குப் பிறந்தவர் இந்தக் கர்நாடக இசைக் கலைஞர். பெற்றோரிட்ட பெயர் ரகுநாதன். மனைவியின் பெயர் லக்ஷ்மி பாய். திருப்பதிப் பெருமாளின் கட்டளைப்படி புரந்தரி என்ற பெண்ணிடம் ஞானோப தேசம் பெற்றதால் புரந்தர தாஸர் என்ற பெயர் வந்தது. இவரது மகள் திரு மணத்தை ஜகன்னாதனே மாறுவேடத்தில் வந்து நடத்தி வைத்தார். தாஸருக்கு அப்பண்ணா என்று ஒரு சீடன். அவனை சர்க்கரைப் பொங்கலுக்கு நெய் வாங்கிவர அனுப்பி னார் தாஸர். அவன் செல்லும் வழியில் அரசனின் வைரப் பதக்கத்தைக் காணோமென்று சோதனை போட்டுக் கொண்டிருந்தனர். காவலாளி அப் பண்ணாவைப் பிடித்து சோதனை யிடும் வரிசையில் நிறுத்தினான். சோதனை முடிந்து அப்பண்ணா நெய்யோடு வரும் போது பூஜையை முடித்திருந்தார் தாஸர். அப்பண்ணா பயத்தோடு நெய் குடத்தை குருநாதர் முன்வைக்க “மறுபடி எதுக்கு நெய் வாங்கி வந்தாய்?” என்று கேட்டார் தாஸர். அப்பண்ணா “இப்போதானே வாங்கிக் கொண்டு வருகி றேன்”என்று நடந்ததைச் சொன்னான். “அப்போ யார் நெய் வாங்கி வந்தது?” என்று புரியாமல் புரந்தரர் விழிக்க, பிறகு அப்பண்ணா அடி வாங்காமலிருக்க ஸ்ரீஹரியே முதலில் நெய்யுடன் வந்திருக்கிறார் என்று புரிந்து கொண்டு உருகினார். ஒரு சமயம் தாமதமாக தண்ணீர் கொண்டு வந்ததற் காக அப்பண்ணா தலையில் கெண்டியா லேயே அடித்திருக்கிறார் தாஸர். நெற்றி புடைத்து இரத்தம் வந்தது. அப்போதும் அப்பண்ணா தூங்கிக் கொண்டிருந்தான் அவன் வடிவில் பகவானே வந்திருந்தார். மறுநாள் காலை கோயிலில் பெருமாளின் சிலா வடிவத்திலிருந்து உதிரம் வழிவது கண்டு அர்ச்சகர் பயந்து அரசருக்குச் சொல்லி அனுப்பினார். தாஸர் வந்து மன நெகிழ்ச்சியோடு பாட காயம் மறைந்து உதிரம் நின்றது! ‘தாஸர்வாள்பதம்’ உலகம் போற்றும் அற்புதக் கவிதைகள். புரந்தர தாஸரின் வாழ்க்கை வரலாறு கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட்டின் வெளி யீடான பாண்டு ரங்க மஹிமையில் விரி வாக வந்துள்ளது.
--------------------------------------------------------------------------------
8.2.2005 தை அமாவாஸ்யை
வேதாரண்யம், இராமேஸ்வரம், காவிரிப்பூம்பட்டினம், சங்கமுகம்
(திருப்பாப்புலியூர்) சமுத்திரங்களில் ஸ்நானம் செய்வதும், இயன்ற அளவு தானம் செய்வதும் விசே ஷம். புண்ணிய நதிகளில் நீராடுவதும் சிறப்பானதே! உத்தராயணத்தில் வரும் முதல் அமாவாசை இது. திருக்கடையூரில் ஸ்ரீ அபிராமிபட்டர் கண்மூடி அன்னை அபிராமியை ஜோதி சொரூபமாக தரிசித்து மெய் மறந்திருந்தார்.
சரபோஜி மன்னர் தரிசனத்திற்காக வந்து கொண்டிருந்தார். காவலாளிகள் ‘பராக்’ சொன்னது அவர் புத்தியில் பதியவில்லை! “இன்று என்ன திதி?” என்று வேந்தர் கேட்க வாய் ‘பௌர் ணமி’ என்று உச்சரித்தது. மன்னர் ‘இன்று நிலவு உதிக்கிறதா காட்டு’ என்று கட்டளை யிட்டார். அவர் உத்தரவுப்படி, கீழே அக்னி எரிய மேலே கயிற்று உறியிலிருந்தபடி அந்தாதி பாடுகிறார் பக்தர். அம்பிகை அபிராமி தன் காதணியாகிய தாடங்கத்தை கழற்றி வீச அது வானில் நிலவினும் பிர காசமாக ஒளிர்ந்தது. பட்ட ருடைய பக்தி யின் மகிமையைக் கண்ட அனைவரும் அவரைப் பணிந்தனர். இன்று ஆலயம் சென்று பௌர்ணமியாய் பிரகா சிக்கும் தேவியை தரிசித்து அருள் பெறுவோம். பிதுர்க்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டிய தினம் இது.
--------------------------------------------------------------------------------
13.2.2005 கஞ்சனூர் ஹரதத்த சிவாச்சாரியார் ஆராதனை
ஒன்பதாம் நூற்றாண்டில் தஞ்சை மாவட்டம் கஞ்சனூரில் இவர் பிறந்தார். இவர் சிறந்த சிவபக்தர். சைவ சித்தாந் தத்தைப் பரப்பியதில் பெரும்பங்கு இவருக்குண்டு. இவர் “ஸ்ருதி ஸுக்தி மாலா” மற்றும் நான்கு கிரந்தங்களை இயற்றியிருக்கிறார்.
--------------------------------------------------------------------------------
15.2.2005 ரதஸப்தமி
அருணன் ரத சாரதியாக வீற்றிருக்க சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வடதிசை நோக்கித் திரும்பும் நாள் இது. சூரியனுக்குப் பிடித்தது எருக்கு இலை. இன்று அதிகாலையில் ஏழு அல்லது இரண்டு எருக்கிலைகளை சிரஸின் மேல் வைத்துக் கொண்டு கிழக்கு நோக்கி தலைக்கு ஸ்நானம் செய்ய வேண்டும். கன்னி கைகள், சுமங்கலிகள் எருக்கிலை மேல் மஞ்சளையும், ஆடவர்கள் விபூதியை யும் வைத்துக் கொண்டு குளிக்க வேண் டும். அப்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
ஸப்த ஸப்தி ப்ரியே தேவி
ஸப்தலோக ப்ரதீபகே !
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம்
ஹரஸப்தமி ஸத்வரம் !!
இதனால் பாபங்கள் நசித்துவிடும்.
--------------------------------------------------------------------------------
16.2.2005 பீஷ்மாஷ்டமி
பீஷ்மப் பிதாமகர் தன் விருப்பப்படி மரணமடையும் வரத்தைப் பெற்றவர். குருnக்ஷத்திரப் போர்க்களத்தில் உடல் முழுவதும் காயங்கள் அடைந்த அவர் உத்தராயண புண்ணிய காலத்தில் உயிர்விடத் தீர்மானித்து அம்புப்படுக்கை யில் சயனித்திருந்தார். பாண்டவர்களும் கௌரவர்களும் அவர் பக்கம் தொழுது நிற்கின்றனர். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அவருக்கு மகாவிஷ்ணுவாக தரிசனம் தரு கிறார். அப்பொழுது சொல்லப்பட்டதே ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம். ரத சப்தமி வரை காத்திருந்து மறுநாள் அஷ்டமியன்று உயிர் துறந்தார் பிதாமகர். அதனால் அது பீஷ்மாஷ் டமி என்று அழைக்கப்படுகிறது. பீஷ்மாஷ்டமியன்று தர்ப்பணம் செய்தால் சந்ததி செழிக்கும். கங்கையின் அருளும் கிடைக்கும்.
--------------------------------------------------------------------------------
16.2.2005 ஸ்ரீ நாராயண தீர்த்த ஸ்வாமிகள் ஆராதனை
வேத வியாசரின் மூன்றாவது பிறப்பு. ஜய தேவரின் மறுபிறவி என இவரைப் போற்றுகின்றனர். ஒருசமயம் கடுமையான வயிற்று வலியால் தாக்கப் பட்டார். உணவும், உறக்கமும் இன்றி திருமால் சந்நிதியில் புலம்பினார். அன்றிரவு அவர் கனவில் பெருமாள் தோன்றி “அன்ப! நாளைக் காலையில் உன் பார்வையில்படும் முதல் உருவத்தைத் தொடர்ந்து போ. உன்நோய் குணமாகும் என்றருளினார் பெருமாள். அதன்பிறகு தூக்கமே இல்லை. பஜனை செய்து கொண்டிருந்தார். அதி காலை நீராடி பரபரப்புடன் காத்திருக்க அவர்
கண்ணில் பட்டது ஒரு பன்றி. அதைத் தொடர்ந்து போனார். பூபதி ராஜபுரம் என்ற கிராமத்திலுள்ள வெங்கடாஜலபதி கோவிலுக்குள் சென்று அது மறைந்து விட்டது. ஆலயத்தை மூன்று முறை சுற்றி வந்து தேடினார். பன்றி அவர் வயிற்று வலியைத் தூக்கிக் கொண்டு போய்விட்டது. அங்கேதான் லீலா தரங்கிணியைப் பாடினார். அரங் கேற்றத்தன்று பகவான் சன்னதியில் திரையிடப்பட்டிருந்தது. சில விதண்டா வாதிகள் “பரந்தாமனால் திரையை அகற்ற முடியாதா?” என வாதிட்டனர். தரங்கிணியைப் பாடினார் நாராயணர். காளிங்க நர்த்தனம் பாடும் போது கர்ப்பக் கிரகத்திலிருந்து சதங்கை ஒலி கேட்டது. தரங்கிணி முடியும் வரை நிற்கவேயில்லை. தரங்கிணி முடியும் சமயம் விளக்குகள் தாமாக ஏற்றிக்கொண்டன. கண்டாமணி கள் ஒலி எழுப்பின. திரை அறுந்து விழுந் தது. தர்க்கவாதிகள் அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர். திருப்பூந்துருத்தி யிலுள்ள அவரது சமாதியில் லீலா தரங்கிணியைப் பாடி பக்தர்கள் இன்று நாத அஞ்சலி செலுத்துகின்றனர். இவரது விரிவான வரலாற்றை கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட்டின் வெளியீடான பாண்டு ரங்க மஹிமையைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
--------------------------------------------------------------------------------
18.2.2005 ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
இவர் காஞ்சி குமரக் கோட்டத் தில் அர்ச்சகராக இருந்தவர். ஆதி சைவர் குலத்தில் அவதரித்தவர். இவர் தகப்ப னாரின் பெயர் காளத்தியப்ப சிவாச்சாரி யார். வேதங்களை நன்கு கற்றவர் இவருக்கு உரிய வயதில் உபநயனம் நடந்தது. தமிழ், ஸம்ஸ்கிரு தம் இரண்டி லும் ஆற்றலுடைய இவர் ஆசார்ய அபி ஷேகம் செய்யப்பட்டு ஆறுமுகப் பெரு மானை ஆகமவிதிப்படி பூஜை செய்து வந்தார். ஒரு சமயம் குமரன் இவர் கனவில் தோன்றி “திகிட சக்கர செம்முகம் ஐந்து ளான்” என அடி எடுத்துக் கொடுத்து கந்த புராணத்தை எழுத வைத்தார்.
கந்த புராணம் 12,000 பாடல்கள் கொண்டது. தினம் நூறு பாடல்களாக பாடினார். இவரைத் தந்தப் பல்லக்கில் அமரச் செய்து முருகன் சன்னதி வரை 24 கோட்டத்தின ரும் மாறிமாறி பல்லக்கை சுமந்து சென்று நூலை அரங்கேற்றினார்கள். அரங்கேறிய ஸ்தலம் குமரகோட்டம். அரங்கேற்ற நாளில் கந்தவேள் புலவர் வேடத்தில் வந்து கேட்டருளினார் என்பது தலவரலாறு.
--------------------------------------------------------------------------------
18.2.2005 திருக்கச்சி நம்பி ஜன்மதினம்
இவருக்குக் காஞ்சி பூரணர் என்ற பெயரும் உண்டு. வைணவ ஆசார்ய ரான இராமானுஜரின் குரு இவர். இவருக்கு ஒருநாள் தன் இல்லத்தில் அமுது படைக்க விரும்பினார் இராமானுஜர். பல நாட்கள் தொடர்ந்து வற்புறுத்தியதில் ஒரு நாள் ஒப்புக் கொண்டார் நம்பி. இராமானுஜர் மனைவியிடம் “சிறப்பாக அறுசுவை விருந்து தயார் செய்க சாட்சாத் அந்த நாராயணனே சாப்பிட வருகிறார் என்று நினைத்துக் கொள்” என்றார். திருக்கச்சி நம்பியிடம் இராமானு ஜருக்கு அத்தனை அன்பு! விருந்து தயாராகி விட்டது. நம்பியைக் காணோம். வடக்கு வீதி வழியாக நம்பி வர, தெற்கு வீதி வழியாக நம்பிகளைத் தேடிக் கொண்டு புறப்பட்டார்
இராமானுஜர். நம்பி வாசலிலிருந்து குரல் கொடுக்க, அவரை வரவேற்ற இராமா னுஜரின் மனைவி ரேழியிலேயே வைத்து உணவு பரிமாறினாள். அவள் ஆசாரமுள்ள அந்தண குலத்தவள். நம்பியோ வைசிய குலத்தவர். நம்பிகள் சாப்பிட்டு முடித்துதும் விடை பெற்றார். நம்பியைச் தேடிச் சென்ற ராமானுஜர் சோர்ந்து போய் வீடு திரும்பினார். வந்தவர் மனiவி குளிப்ப தைக் கண்டு காரணம் கேட்டார். “நம்பி சாப்பிட்ட இடத்தைத் தொட்டு சுத்தம் செய்த பிறகு அப்ப டியேவா சாப்பிட முடியும்?” என்றாள் இல்லாள். யாதவ குலத்தில் வளர்ந்ததற்காகக் கண்ணனே வந்தாலும் ரேழியில் வைத்துத் தான் சாப் பாடு போடுவாயா?” என்று கண்டித்து விட்டு “இது முதல் பிழை” என்று மன் னித்தார். அவள் மூன்று பிழை செய்ததும் மனையறம் துறந்தார். துறவறம் பூண்டு காஞ்சி வரதர் கோயில் சென்றார். அர்ச்சகர் மேல் சன்னதம் வந்து திருக்கச்சி நம்பியி டம் “இவனுக்குத் தகுந்த மடம் ஏற்படுத்தி அதற்குரிய விருதுகளோடு மடாதிபதி யாக்கு” என உத்தரவு பிறந்தது. திருக்கச்சி நம்பிகள் அதை நிறைவேற்றினார்.
--------------------------------------------------------------------------------
19.2.2005 கவியோகி சுத்தானந்தபாரதி ஆராதனை
சிவகங்கையில் காமாக்ஷி ஜடாதரர் தம்பதிகளுக்கு புதல்வனாகப் பிறந்தவர் இவர். பரம்பரைத் தொழில் கதாகாலட் சேபம். இளமையிலேயே கவி மழை பொழிய ஆரம்பித்து விட்டார். சிறிது காலம் ஆசிரியராகப் பணிபுரிந்தார். மகாத்மா காந்தியை சந்தித்த பிறகு மக்களிடையே தேசபக்திக் கனலைத் தூண்டி விடும் படியான சொற்பொழிவு களை நிகழ்த்தி னார். விடுதலைப் போராட்ட வேள்வியில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்ட வர். அந்நிய ஆட்சியில் சிறை புகுந்த தியாகி இவர். துறவுக் கோலம் பூண்டு அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கி இருந் தார். பிரெஞ்சு கற்றுக் கொண்டார். மௌனமாய் நீண்ட காலம் தவமிருந் தார். வரலாற்று நூல்கள் எழுதிக்குவித்தார். பிரெஞ்சு நாவல்களைத் தமிழில் மொழி பெயர்த்தார். ஆத்மா வைத் தட்டியெழுப்பும் கவிதைகள் நிறையப் புனைந்தார். ரவீந்திர நாத் தாகூரின் ஆசி பெற்றவர். வ.வே.சு. அய்யரின் நெருங்கிய நண்பர் இவர்.
--------------------------------------------------------------------------------
20.2.2005 திருமலையாண்டார்பிறந்த தினம்
இவர் இராமானுஜரின் தாய்மாமன். குருபரம்பரையில் வந்தவர். ஆளவந்தா ரிடம் இராமானுஜரை அழைத்து வந்த வரும் இவரே! பெரிய நம்பி, ஸ்ரீசைல பூரணர் என்ற பெயர்களும் இவருக்குண்டு. இராமானுஜருக்காக கூரேசனோடு முத லாம் குலோத்துங்கச் சோழன் கட்டளையை ஏற்று சிதம்பரம் சென்றார். தீவிர சைவ ரான மன்னன் கட்டளையினால் கண் களைப் பறி கொடுத்து ஸ்ரீரங்கம் திரும்பும் வழியில் உயிர்துறந்த தியாகி இவர். இவர் தியாகத்தை இன்று நினைவு கூர்வோம்.
--------------------------------------------------------------------------------
24.2.2005 மாசிமகம்
கும்பராசியில் சூரியனும், சிம்மத்தில் சந்திரனும் ஒருவருக்கொருவர் சமபார்வை யாக நோக்கும், பௌர்ணமியில் வரும் மக நட்சத்திரம் மாசி ஆராட்டு எனப்படும். இப் படி 12 பௌர்ணமிகள் கடந்தால் அது மகா மகம் ஆகும். அன்று குடந்தை ஆதி கும்பேஸ்வரர் மகாமகக்குளத்தில் தீர்த்த மாடுவார். இரவு கைலாச வாகனத்தில் பவனிவருவார். நாமும் அந்த நேரத்தில் அங்கு நீராடினால் பாபங்கள் கரையும். மதுரை அருகே உள்ள திருமோகூர்ஸ்ரீ காளமேகப் பெருமான் யானை மலை யில் கஜேந்திர மோட்சம் கொடுக்கும் விழா நடைபெறுவதும் இன்று தான்.
--------------------------------------------------------------------------------
24.2.2005 மணக்கால் நம்பிகள் ஜன்மதினம்
மணக்கால் என்ற ஸ்தலத்தில் பிறந்தவர் இந்தப் பெருமாள் பக்தர்-வைஷ்ணவ குருபீடத்தை அலங்கரித் தவர். 12 வருடகாலம் தனக்கு இருந்த குருவாக உய்யக் கொண்டாரைப் பிரியாமல் தொண்டு செய்தவர். குருபத்தினியான ஆண்டாள் மறைந்ததும் குருநாதருடைய இல்லப் பணிகளைச் செய்து வந்தார். ஒரு சமயம் உய்யக் கொண்டாரின் இரு பெண் குழந்தைகளையும் ஸ்நானம் செய்வித்து அழைத்து வருகையில் வாய்க்கால் சேறாகக் குழம்பி வழுக்கும் நிலையில் இருக்க அதனைத் தாண்ட முடியாமல் குழந்தைகள் தவித்தனர். நம்பி கொஞ்சமும் யோசிக் காமல் சகதியில் குப்புறப்படுத்தார். “குழந்தைகளே! முதுகில் ஏறிச் செல்லுங் கள்” என்றார். இதைக் கேள்விப்பட்ட குருதேவர் வியந்து பாராட்டி இவருக்கு திருவடி தீட்சை அளித்தார். ஆளவந் தாரை சமயப்பணிக்கு இழுத்தவரும் இவரே.
--------------------------------------------------------------------------------
24.2.2005 திருவொற்றியூர் மகிழடி சேவை
சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலி நாச்சியாரை இரண்டாவது மனைவியாக திருவொற்றியூரில் மணந்து கொண்டார். சிவபக்தையான சங்கிலியாரின் கனவில் சிவபெருமான் வந்து என்றும் “பிரிய மாட் டேன்’ என சுந்தரரிடம் சத்தியம் வாங்கிக் கொள். சன்னதிக்குள் வேண்டாம். வெளி யிலுள்ள மகிழ மரத் தடியில்” என்று முதல் நாள் சொல்லியி ருந்தார். அதன்படி பரவை நாச்சியார் கேட்டு சத்தியம் வாங்கிய காட்சி இன்று திருவொற்றியூர் கோயிலில் விழா வாக நடக்கும்.