Tuesday, April 05, 2005

பேழைக்குள் இருப்பவள்

கிராம தேவதைகள்


“அம்மா! தாயே! கண் தெரியாத கபோதிம்மா! பசி உயிர் போகுதும்மா! ஒரு பிடி சோறாவது போடுங்கம்மா! வயசான வனை எல்லாருமே துரத்தினா என்ன பண்ணுவேன்” பலகீனமாகக் குரல் கொடுத்தார் முதியவர்.

“இப்பதாம்பா சாப்பிட்டு முடிச்சோம். கொஞ்சம் முன்னே வந்திருக்கக் கூடாதா?”

“இன்னும் என் வீட்டுக்காரரே வரலே! அதுக்குள்ளே உனக்கெப்படி போட முடியும்?”

“குழந்தைக்குப் பால் கொடுத்திட்டி ருக்கேன். இப்ப எப்படிவர முடியும். அடுத்த வீட்டிலே போயிக்கேளு”

“நானும் உன்னை மாதிரிக் கண் தெரியாதவதான்! பிள்ளையும், மருமகளும் நாடகம் பார்க்கப் போயிருக்காங்க. வேறே இடம் பார்”

இப்படி வீட்டுக்கு வீடு ஆளுக்கொரு சாக்கு சொல்ல, ஊர் எல்லையிலுள்ள பத்ரகாளி கோயிலுக்கு வந்தார் அந்தக் கிழவர். கோயில் என்று தெரியாமல் அங்கும் குரல் கொடுத்தார்.


அன்னை பத்ரகாளி அன்னபூரணியாய் வந்து உணவிட்டாள்.

“தாயே! நீ நல்லா இருக்கணும்” என்று அம்பிகையை வாழ்த்தியவர் உண்ட மயக்கத்தில் அங்கேயே படுத்து உறங்கினார்.

மறுநாள் காலை கோயிலுக்கு வந்தவர்கள் அவரை எழுப்பி விசாரிக்க” “இந்த வீட்டு அம்மாளுக்கு நேற்று இரவு சோறிட்டதற்கு நன்றி சொல்லணும். கூப்பிடுங்க” என்றார் அவர்.

“ஓ, அந்த மகராசி இப்போதும் உங்களுக்கு உணவளிப்பாளா? இது காளி கோயில்” என்று வந்தவர்கள் கேலி செய் தார்கள். வயோதிகர் “பகவதி! பர மேஸ்வரி! நான் சொல் வது பொய் யில்லை என்று எப்படி நிரூபிப்பேன்” என்று கண்ணீர் சிந்த, அவரது பிட்சா பாத்தி ரத்தில் வெள்ளி முத்துக்களென அன்னம் நிறைந்தது. கூடியிருந்தவர்கள் இதைக் கண்டு அதிச யித்தனர். இப்படிப் பல அற்புதங்களை நிகழ்த்திய அன்னை குடியிருக்கும் ஸ்தலம் காவிரியின் கிளை நதியான வீர சோழனாற்றின் தென்கரையிலுள்ள திருக்களாச்சேரி. பண்டையப் பெயர் திருக்குராச்சேரி.

இந்த nக்ஷத்திரம் நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், காரைக்காலுக்கு வடக்கே யுள்ள பொறையாரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவைதான் இரண்டு நாட்கள் நடை பெறும் பூஜைத் திருவிழாவில் அம்பிகையைத் தரிசிக்க முடியும். அப்போது பத்ரகாளியைப் பேழையிலிருந்து எடுத்து திருக்கைகளில் ஆயுதங்களும் உடலெங்கும் ஆபரணங்களும், பூ அலங்காரமும் செய்கின்றனர். மற்றைய நாட்களில் பேழையிலிருந்தபடி அம்மன் அருள் பாலிக்கின் றாள்.இந்த அம்மன் அருள் பாலிக்கும் தலம் பத்ரகாளியம்மன் தேவஸ்தானம், திருக்களாச்சேரி, பொறையார் தரங்கம்பாடி வட்டம், நாகப்பட்டினம்.