Tuesday, April 05, 2005

மார்ச் 2005 விசேஷ தினங்கள்

ஆர். பி.


8-3-2005 மஹா சிவராத்திரி
சிவபெருமானுக்குப் பிரியமான காலம் சிவராத்திரி. பரமேஸ்வரன்
லோகnக்ஷமத்துக்காக நஞ்சை உண்டு மயங்கிக் கிடந்த காலம் பிரதோஷ காலம். தேவர்கள் ஈஸ்வரன் நலமோடு எழ பிரார்த்தித்த தினம். பிரம்ம ஹத்தி தோஷத்தை நீக்கும் நாள். இன்று விரதம் இருந்து இரவு நான்கு ஜாமமும் சிவபூஜை செய்தாலோ, பூஜையைப் பார்த்தாலோ கிடைக்கும் பலன் கோடி. அவரவரால் இயன்ற பொருட்களை பூஜைக்குக் கொடுக்கலாம்.

முதல் ஜாமத்தில் அரிசியை அட்ச தையாகக் கொண்டு, சதபத்ரம், தாமரை, அரளி, வில்வம் இவற்றால் சிவலிங்கத்தை அர்ச்சிக்கலாம். பஞ்ச கவ்யத்தால் நீராட்ட வேண்டும். சிவப்பு வஸ்திரமும், தங்க நகையும் அணிவிக்க வேண்டும். நான்கு ஜாமத்துக்கும் நான்கு வேத மந்திரங்களைச் சொல்ல வேண்டும். முதல் ஜாமத்துக்கு ருக் வேதம். ருக்வேதம் தெரியாதவர்கள் சிவ ஸ்தோத்திரம் சொல்லலாம். வில்வப்பழம் விசேஷமாக சொல்லப் பட்டிருக்கிறது. தட்டிலே பூக்களை நிரப்பி நடுவிலே தீபம் ஏற்றுவது சிறப்பு. சந்தனத்துகள், பச்சைக் கற்பூரம் தூபம் காட்ட வேண்டும். சர்க்கரைப் பொங்கல் நிவேதிக்க வேண்டும். 2-ம் ஜாமத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து. மஞ்சள் வஸ்திரம், பச்சைக்கற்கள் பதித்த நகை அணி வித்து, வால் கோதுமையை அக்ஷதை யாகக் கொண்டு வில்வம், துளசி, அருகம்புல், தாமரை, செண்பகம் இவற் றால் அர்ச்சித்து மாலை சாற்றி தாம் பாளத்தில் நட்சத்திரக் கோலமிட்டு தீபமேற்றி, பச்சைக் கற்பூரம், அகில் துகளால் தூபமிட்டு, பாயசம், லட்டு, பலாச்சுளை நிவேதிக்க வேண்டும். மூன்றாம் ஜாமத்தில் தேன் அபிஷேகம் செய்து, வெண்மையான வஸ்திரமும், சிவப்புக்கல் பதித்த ஆபரணமும் அணிவித்து, கோதுமையை அக்ஷதை யாகக் கொண்டு, வில்வம், செங்கழு நீர்ப்பூ, அத்திப்பூ, பிச்சிப்பூ இவற்றால் அர்ச்சித்து, மாலை சாற்றி, பஞ்சமுக தீபம் ஏற்றி, கஸ்தூரி, சந்தனத்தூளால் தூபமிட்டு, சாமவேத மந்திரங்களைச் சொல்லி, மாதுளம்பழம், மாவும், நெய்யும் சேர்ந்த பலகாரம், பரமான்னமும் நிவேதித்து வணங்க வேண்டும்.

நான்காம் ஜாமத்தில் கரும்புச் சாற் றால் அபிஷேகம் செய்து நீல வஸ்திர மும், முத்தாலான நகைகளும் அணி வித்து, நவதானியங்களை அக்ஷதை யாகக் கொண்டு விளா, வில்வ பத்ரங் கள், நந்தியாவட்டை, நீலோத்பலம் ஆகியவற்றால் அர்ச்சித்து, மாலை சாற்றி, தட்டில் வில்வ தளத்தை நிரப்பி நடுவில் தீபமேற்றிக் காண்பித்து சந்த னத்துகள், குங்குமப்பூ தூபம் காட்டி கோதுமை அல்வா, சுத்த அன்னம், பலவிதமான பழங்கள் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டுமென்று சிவ புராணம் கூறுகின்றது. இருப்பதை, கிடைத்ததைக் கொண்டும் பூஜிக்க லாம். பக்தி மட்டுமே முக்கியம் என்கிறது லிங்க புராணம். சிவ சரித்திரத்தைப் படிப்பதோ, கேட்பதோ ஆயுள் விருத்தி யையும், ஆரோக்கியத்தையும் கொடுக் கும். மறுநாள் காலை ஸ்நானம் செய்து திருநீறணிந்தபின் உணவருந்தி விர தத்தை பூர்த்தி செய்யலாம்.

ஆந்திராவில் கர்நூல் மாவட்டத் திலுள்ள ஸ்ரீசைலத்தில், பாதாள கங்கையில் இன்று நீராடுவது மிகவும் விசேஷம். அங்கு திரு நந்தி தேவரே மலையாகி பகவானைத் தாங்கிக் கொண்டிருப்பதாக ஐதீகம். இன்று பஞ்சாட்சரம் ஜபித்தால் நூறு பங்கு பலன் கிடைக்கும்.


--------------------------------------------------------------------------------

8-3-2005 ஸ்ரீசுகப் பிரம்ம ரிஷி விழா

சிவபெருமான் உமாதேவிக்கு
தான் ஜனன மரணமற்றிருப்பதின் ரகசியத்தைச் சொல்லிக் கொண்டிருந் தார். மாய்கையால் சக்தி உறங்க “உம்” என்ற குரல் மட்டும் தொடர்ந்தது. சுற்றி லும் எவரும் இல்லாத போது ஓசை எங்கிருந்து வருகிறதென்று ஆராய்ந் தார் பரமேஸ்வரன். அவர் அமர்ந்தி ருந்த பாறைக்கடியில் ஒரு கிளி குஞ்சு பொரித்து விட்டுச் சென்று விட்டது. கிளிக்குஞ்சின் ஒலிதான் அது.

சிவரகசியத்தை அறிந்ததால் அது உடனே இறக்கை முளைத்துப் பறந்தது. சிவ பெருமான் துரத்தினார். வேத வியாசரின் மனைவி கருவுற்றிருந் தாள். வாசலில் அமர்ந்திருந்த அவள் கருவில் அது கலந்தது. வலி வந்தும் பிரசவமாகாமல் துடித்தாள் அம்மங்கை. “உன்னை எதுவும் செய்ய மாட்டேன். வா” என்று நங்கைமேல் இரக்கப்பட்டுக் குரல் கொடுத்தார் ஈசன். மனித உடலும், கிளிமுகமுமாகப் பிறந்தார் சுகப்பிரம்மம். சுக என்றால் கிளி. சிவ ரகசியம் அறிந்த அவர் ஞானியாகத் திகழ்ந்தார். அவரை ஜனகரிடம் பாடம் கற்க அனுப்பினார் வியாசர். பாகவ தத்தை ஏழு நாட்களில் பரிக்ஷித்து ராஜாவுக்குச் சொன்னவர் சுகப்பிரம்மம்.

--------------------------------------------------------------------------------
8-3-05 தன்வந்த்ரி விழா

மஹா விஷ்ணுவின் அம்சமான தன்வந்த்ரி அமிர்தகலசத்தோடு பாற்கடலிலிருந்து வெளிப்பட்டவர்.

“ஓம் நமோ பகவதே வாசு தேவாய, தன்வந்த்ரயே, அமிர்த கலச ஹஸ்தாய, ஸர்வ ஆமய விநாசநாய, திரைலோக்ய நாதாய, ஸ்ரீமஹா விஷ்ணவே நம:”

இந்த ஸ்தோத்திரத்தை தினமும் இயன்றவரை சொல்லி வந்தால் வியாதிகள் அண்டாது. இருக்கும் ரோகங்களும் குணமாகும்.

--------------------------------------------------------------------------------

14-3-2005 காரடையான் நோன்பு

வனத்திலே சத்தியவான் தேவி யான சாவித்திரி மண்ணைப் பிசைந்து அடைதட்டி நிவேதனம் செய்து கௌரி விரதத்தைப் பூர்த்தி செய்தாள். அதி லுள்ள சிறு கற்களை நினைவூட்ட காராமணிப்பயிற்றை அடையில் கலக்கிறோம். எமன் பின்னால் சென்ற அஸ்வபதி புத்திரி ஐந்து வரங்கள் பெற்று வந்தாள். அவள் திரும்பி வரும் வரை சத்தியவான் உடலை கழுகுகள் கொத்தாமல், சிங்கம், சிறுத்தை, ஓநாய் நரி போன்ற மிருகங்கள் தொடாமல் அவளது பூஜாபலன் காத்தது.

“உருக்காத வெண்ணெயும் ஓரடையும் நான் படைத்தேன்; ஒருக் காலும் என் கணவர் பிரியாது இருக்க வேண்டும்” என வேண்டிக் கொண்டு பூஜை அறையில் கோலமிட்டு, சிறிய நுனிவாழை இலை போட்டு, இலை நுனியில் வெற்றிலை, பாக்கு, வாழைப் பழம், மஞ்சள் சரடு (மஞ்சள், பூ இதழும் நடுவில் கட்டி) இவைகளை வைத்து இலை நடுவில் வெல்ல அடையும், வெண்ணெயும் வைக்க வேண்டும். முதிர்ந்த சுமங்கலி தன் இலையில் அம்பிகைக்கு ஒரு சரடு சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். மூன்று இலை போடக் கூடாது. நான்கு இலையாகப் போட்டு சரடு கட்டிக் கொண்ட பின், மீதமுள்ள இலையில் வீட்டிலுள்ள ஆடவர்களை சாப்பிடச் சொல்லலாம். தீர்த்தத்தால் இலையைச் சுற்றி நைவேத்தியம் செய்த பிறகு அம்பாள் படத்தில் சரட்டை அணிவித்த பின் இளைய மங்கையருக்கு முதிய சுமங்கலிகள் சரடுகட்ட வேண்டும். பிறகு தானும் கட்டிக் கொண்டு அம்பி கையை நமஸ்கரித்த பிறகு அடையை சாப்பிடலாம். நோன்பு ஆரம்பித்தது முதல் முடிக்கும் வரை தீபம் எரிய வேண்டியது முக்கியமானது.
மாசி முழுவதும் போகுமுன் சரடு கட்டிக் கொள்ள வேண்டும். பங்குனி மாதம் பிறக்கும் நேரம் மதியம் 2.04 மணி. மூன்று மணி வரை சரடு கட்டிக் கொள்ளலாமென பஞ்சாங்கத்தில் போட்டிருக்கிறது. கர்ப்பிணிகள் குழந்தைகள் உடல் நலம் குன்றியவர் கள் எளிய பலகாரம் சாப்பிடலாம். மற்றவர்கள் பாலும், பழமும் சாப்பிடுவது மாங்கல்ய பலத்தைப் பெருக்கும். நோன்பு நோற்ற பின்னும் அடை தான் சாப்பிடலாம். மறுநாள் சூரியோத யத்திற்கு முன் பசுவிற்கு இரண்டு வெல்ல அடைகள் கொடுக்க வேண் டும். நோன்பு தினத்தில் சாவித்திரி சரித்திரம் படிப்பது விசேஷம்.

வாணலியின் அடியில் வைக் கோலைப் போட்டு மேலே தட்டில் அடையை வேக வைப்பார்கள். அதன் பொருள் நெல் கதிரிலிருந்து பிரியும் வரை காப்பது வைக்கோல். “சத்திய வான் உடலிலிருந்து உயிர் பிரிந்து விட்டது. உயிரை மீட்டுக்கொண்டு வரும் வரை உடலைக் காத்திரு” என்று சொல்லி வைக்கோலால் மூடி விட்டுப் போனாள் சாவித்திரி. அதன் அடையா ளமாகத் தான் வைக்கோல் போடுகி றோம். “ருசிக்காக உப்புப் போட்டும் அடை தட்டிக் கொள்ளலாம். இந்த விரதத்தால் பிரிந்த தம்பதியர் கூடுவர். கணவரின் ஆயுளும், ஆரோக்கியமும் அதிகரிக்கும். கன்னிப் பெண்கள் நல்ல குணவானுக்கு மாலையிட்டு சீரும் சிறப்புமாய் வாழ்வர்.


--------------------------------------------------------------------------------

19-3-2005 நந்திகேஸ்வரர் ஜனனதினம்

கர்நாடகாவில் இங்குளாபுரியில் மாதிராஜையர் என்ற வேதியருக்கும் மாதாம்பா என்ற பதிவிரதைக்கும் பிறந்தவர் வசவேஸ்வரர். தவமிருந்து பிறந்த இவர் மூன்றாண்டுகள் கர்ப்ப வாசம் செய்தவர். மாதாம்பாளின் தமையனார் விஜ்ஜல ராஜனின் அமைச் சராக இருந்தார். அவர் பெயர் ஸ்ரீபல தேவர். அவர் தன் புதல்வி கங்காம் மைக்கு வசவேஸ்வரரை மண முடிக்கும் படி வேண்டி விஜ்ஜல நகரத்துக்கு அழைத்துச் சென்று விவாகத்தை நடத்தி வைத்தார். விஜ்ஜல ராஜன் சபையில் அரசன் விரும்பியபடி தண்டநாயகராகப் பதவி வகித்தார் வசவேஸ்வரர். அவரது அதிகாரத்தின் கீழ் பன்னிரண்டு அமைச்சர்களும், 12,000 யானைப்

படைகளும், 1,60,000 குதிரைப் படைகளும், 1,20,000 காலாட்படைகளும் இருந்தன.
ஒருநாள் ஆகாயத்திலிருந்து ஒரு ஓலைச் சுருள் வந்து விழுந்தது. சிவலிபியால் எழுதப்பட்டிருந்த அதை எவராலும் படிக்க முடியவில்லை. வசவேஸ்வரர் படித்து சொன்னார். “மன்னா! உன் சிம்மாசனத்தின் கீழ் 88 கோடிப் பொன்னை உன் தந்தை புதைத்துவைத்திருப்பதாக இது சொல்கிறது” என்றார்.

கொற்றவன் உடனே சிம்மாச னத்தை நகர்த்தித்தோண்ட உத்தர விட்டான். சொன்னபடி சொன்ன கணக்கில் புதையல் கிடைத்தது. அதைக் கொண்டு பல தர்ம காரியங் கள் செய்தான் வேந்தன் தீவிர சிவ பக்தரான வசவேஸ்வரர் நந்தி தேவரின் அம்சம் எனப்படுகிறார். இப்புனித நாளில் சிவாலயம் சென்று நந்தியை வழிபட நினைத்த காரியம் நடக்கும்.


--------------------------------------------------------------------------------

25-3-2005 பங்குனி உத்திரம்

குரு வீடான மீனராசியில் சூரி யனும், கன்யா ராசியில் சந்திரனும் சம மாகப் பார்த்துக் கொள்ளும் திருநாளே பங்குனி உத்திரம். ஸ்ரீசுப்பிரமணியர் வள்ளியையும், ஸ்ரீராமர், சீதையையும், உமாதேவி சிவபெருமானையும் திருமணம் செய்து கொண்ட திருநாள் இது. ஸ்ரீரங்கநாச்சியார், ஸ்ரீஐயப்பன் பிறந்த திருநாள். குடந்தை ஸ்ரீஆதி கும்பேஸ்வரர் மகாமகக்குளத்தில் தெப்பத்தில் வலம் வரும் வைபோக தினம் இதுவே. சென்னை, மயிலை ஸ்ரீகற்பகாம்பாள்ஸ்ரீகபாலீஸ்வரர் திருமணமும் ஆண்டு தோறும் இன்றுதான் நடக்கும். ஸ்ரீமகாலக்ஷ்மி இன்று விரதம் இருந்து திருமாலின் மார்பில் இடம் பெற்றாள். இதே விரதத்தால் இந்திரன் இந்திராணி யையும், ஸ்ரீபிரம்மா சரஸ்வதியையும் அடைந்தனர். ரதியின் பிரார்த்த னைக்கு செவி சாய்த்து மன்மதனை
மகேஸ்வரன் உயிர் பெறச் செய்த திரு நாள் இது. வடநாட்டில் இதை ஹோலி என்று வண்ணப்பொடிகளை வாரியி றைத்துக் கொண்டாடுகின்றனர்.

இத்தினத்தில் தான் வில்வீரன் அர்ஜுனன் பிறந்தான். காஞ்சி ஸ்ரீவரதர், மதுரை ஸ்ரீகூடலழகர், திருமோகூர், ஸ்ரீவில்லிப்புத்தூர்,அழகர் கோயிலில் திருக்கல்யாண வைபவத்தை இன்று தரிசிக்கலாம். காஞ்சி, திருவாரூர் போன்ற ஸ்தலங்களில் ருத்ரபாத தீர்த்தமும் பெறலாம். திருநாவலூர் ஸ்ரீதண்டபாணி ஸ்வாமிக்கு பக்தர்கள் 1008 காவடி எடுத்து வந்து சமர்ப்பிக்கிறார்கள்.


--------------------------------------------------------------------------------

29-3-2005 வியாசராஜர் ஜன்ம நக்ஷத்திரம்

மத்வ குருவான வியாஸராஜா வுக்கு ஜாதகம் நன்றாகப் பார்க்கத் தெரியும். கிருஷ்ண தேவராயரின் ஆஸ்தான குரு இவர். மன்னர் ஜாதகத் தைப் பார்த்த இவர், “சிறிது காலம் nக்ஷத்ராடனம் சென்று விட்டு வாருங்கள்” என்றார். குரு பக்தி மிகுந்த வேந்தர் மறு கேள்வி கேட்கா மல் தீர்த்த யாத்திரை புறப்பட்டுவிட்டார். வியாசராஜர் தன் காஷாய ஆடையை சிம்மாசனத்தில் வைத்து ராஜ்ய காரியங்களை நடத்திக் கொண்டிருந்தார். ஒரு நாள் காவி ஆடை தீப்பிடித்து எரிந்தது. nக்ஷத்ரா டனம் சென்ற அரசர் திரும்பி வந்து குருவை நமஸ்கரித்து

“உயிர் பிச்சை கொடுத்தீர்களே” என கண்கலங் கினார். கொஞ்ச காலம் ஆட்சி நடத்தியதால் ‘வியாசராயர்; வியாச ராஜாவானார். பெற்றோர் சூட்டிய நாமம் ‘யதிராஜர்’. குருவான ஸ்ரீபாத தீர்த்தர் கொடுத்த தீட்சாநாமம் வியாச நாராயணர். இவருடைய சீடர்களில் ஒருவர் தான் கனகதாசர்.