Tuesday, April 05, 2005

குரு ரத்னங்கள் - March

காமகோடி பீடம்


21. ஸ்ரீஸார்வ பௌம சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்

கி.பி. 437-447

ஸ்ரீ ஸார்வபௌம சந்திர சேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள். முதல் சந்திரசேகரர் என அழைக்கப்பட்டவர். இவர் கொங்கண அந்தண குலத்தவர். இவரது தந்தையார் பெயர் அச்சுதன். இவரே மூகசங்கரரால் ஆட் கொள்ளப் பட்ட மாத்ரு குப்தன். இவர் தம் குரு நாதரோடு பல விஜய யாத்திரைகள் சென்றவர். பத் தாண்டுகள் குரு பீடத்தை அலங்கரித்தவர். இவர் கி.பி. 447ஆம் ஆண்டு, விய வருடம் ஆவணி மாதம் கிருஷ்ண ஜெயந்தி யன்று காசியில் சித்தியடைந்தார்.


22. ஸ்ரீ பரிபூர்ண போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்

கி.பி.447-481

ஸ்ரீ பரிபூர்ண போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள். மஹாராஷ்டிர அந்தண மரபினர். இரத் தினகிரி என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவரது தந்தையாரின் நாமதேயம் இராமநாதர். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் மதுரா. இவர் ‘பூலோக தன்வந்தரி’ என்று போற்றுமளவு மருத்து வத்திறன் வாய்ந்தவர். ‘அஸ்மா பிலாபிக’என்னும் மந்திரவல்லமை பெற்ற மந்திர சாஸ்திர விற்பன்னர். மாபெரும் யோகியாகத் திகழ்ந்தவர். இவர் கி.பி. 481 ஆம் வருடம் ரௌத்திரி ஆண்டு கார்த்திகை மாதம் வளர்பிறை நவமியன்று ஸ்ரீ ஜகந்நாதத்துக்கு அருகில் சித்தி பெற்றார்.