Tuesday, April 26, 2005

2005 ஏப்ரல் மாத விரத, விசேஷ தினங்கள்

14-4-2005

‘பார்த்திப’ தமிழ் வருடப் பிறப்பு விஷு புண்ணிய காலம்

இன்று முதல் ‘பார்த்திப’ தமிழ் ஆண்டு தொடங்குகிறது. ‘பார்த்திப’ என்றால் அரசன் என்பது ஒரு பொருள். ‘மண்’ என்று அர்த்தம் சொல்கிறது சிவபுராணம். ராமேஸ்வரத்திலிருப்பது சீதாதேவி மண்ணால் பிடித்த லிங்கம் தான். காசி யாத்திரை கூட ஒருதடவை செய்தால் போதும். ராமேஸ்வரத்திலி ருந்து மணல் எடுத்துக் கொண்டு போய் கங்கையில் போட்டு, கங்கா ஜலத்தை எடுத்து வந்து இராமலிங் கேஸ்வரருக்கு

அபிஷேகம் செய்தாலே காசியாத்திரை பூரணமடையும் என்கிறது புராணம். மகாலக்ஷ்மியின் அம்சமான சீதை கையால் பிடித்து ஸ்ரீராமபிரான் பூஜித்ததால் இராமேஸ் வரத்துக்கு அத்தனை மகிமை!

ஒவ்வொருவரும் சொந்தமாக வீடு வாங்க, கட்ட ஆசைப்பட்டு முயல்கி றோம். அந்த வீடு ஆடாமலிருக்க வேண்டுமே! பஞ்சபூதங்களில் ஒன்று மண். மூவாசைகளில் மண்ணாசை பெரிது. ஆதியில் விஸ்வகர்மா மகா விஷ்ணுவின் கட்டளைப்படி ஒவ்வொரு பிரிவினருக்கும் சிவலிங்கங்கள் செய்து கொடுத்தார். தேவலோக மருத்துவர்க ளான அஸ்வினி தேவர்கள் ‘பார்த்திவ’ லிங்கத்தைப் பெற்றனர். மூலிகைகள், பூக்கள், தாவரங்களெல்லாம் விளைவது மண்ணில் தானே! மண்ணை ஆராதித் தால் பூமாதேவி மகிழ்ந்து வளங்களை வாரி வழங்குகிறாள். ‘பார்த்திவ’ என்ற பெயரை சில பஞ்சாங்கங்களில் பார்க்கலாம். (உ-ம்) திருநெல்வேலி பஞ்சாங்கம். அடுத்து அந்தணர்களுக் கும் பார்த்திவலிங்கம் கிடைத்தது. அவர்களுக்கு தர்ப்பை, சமித்து இவை வழங்குவது மண்தான்! அவர்கள் யாகம் செய்வது மண்ணில் தான்! அவர்களுக் கும் பூமாதாவின் அனுக்கிரகம் அத்தியாவசியமாகிறது. குசுமை என்ற பெண் தினமும் புதியதாக மண்ணால் 101 லிங்கங்களைச் செய்து பூஜை செய்த பின் லிங்கங்களைத் தடாகத்தில் விட்டாள். லக்ஷம் பார்த்திவ லிங்க பூஜை முடிந்ததும் அவள் கருவுற்று ஆண் குழந்தையைப் பெற்றதாக சிவ புராணம் கூறுகிறது. மண்ணோ, அரசனோ இருவரும் ஸ்திரமாயிருக்க வேண்டும். இருவர் தயவும் மக்களுக்குத் தேவை. அரசனிட மிருந்து நல்ல ஆட்சியை எதிர்பார்க்கிறார்கள் மக்கள். இந்த ஆண்டு நில வளமும், நீதி நெறியான நிர்வாகமும் அமைய வேண்டும் என நாமும் பிரார்த்தித்துக் கொள்வோம். நார(தரி) தியின் அறுபது குழந்தை களில் இது கம்பீரமாயிருந்திருக்க வேண்டும். அதனால்தான் ‘பார்த்திப’ எனப் பெயரிட்டிருக்கிறார்கள். முதல்நாள் இரவே புத்தாடைகள், வெற்றிலை, பாக்கு, பழங்கள், தங்கம், வெள்ளி நகைகள், நிறை நாழி(படி)யில் அரிசி, கிண்ணத்தில் பருப்பு, தேங்காய், பூ, இனிப்பு எல்லாம் எடுத்து தெய்வத் தின் முன்வைக்க வேண்டும். அதி காலை முதிய சுமங்கலியர் எழுந்து விளக்கேற்றி, இளையவர்களைக் கண்ணை மூடிக்கொண்டே வரச் செய்து அவற்றில் கண் விழிக்கச் செய்வர். கேரளத்தில் இதற்கு ‘விஷுக் கனி காணல்” என்று பெயர். ஆண்டு முழுவதும் மங்களத்துக்கும், சந்தோஷத் துக்கும் குறைவு ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த சாங்கியம் நடத்தப் படுகிறது. உலகெல்லாம் சுபீட்சம் பெருக, ஊரில், இல்லத்தில், சுற்றத்தில் மகிழ்ச்சி ததும்ப, தொழிலில் முன்னேற இந்நன்னாளில் நாமும் ஆண்டவனைப் பிரார்த்திப்போம்.


--------------------------------------------------------------------------------

17-4-2005

ஸ்ரீராமநவமி

“வேய் புனர்பூசமும் விண்ணு ளோர்களும் தூய கற்கடகமும் எழுந்து துள்ள”ப்பிறந்தவர் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி. பத்ராசலத்தில் இன்று திருமண விழா நடக்கும். ஸ்ரீராமர் சித்திரை மாதம் நவமியன்று புனர் பூசம் 4ஆம் பாதத்தில் பிறந்தவர். கிருஷ்ணா வதாரம் நள்ளிரவில் சிறையில் நிகழ்ந்த தென்றால் இராமாவதாரம் நடுப்பகலில் அரண்மனையில் நடந்தது. ஸ்ரீராமர் பிறந்ததைக் கொண்டாடுவது ஜன் மோத்ஸவம். பிரதமை முதல் நவமி வரை ராமாயணத்தைப் பாராயணம் செய்து தசமியன்று பட்டாபிஷேகத்தைப் படிப்பது ஒருமுறை. நவமி முதல் பத்து நாட்கள் பாராயணம் செய்வோரும்

உண்டு. பட்டாபிஷேகத்தன்று, ஸ்ரீராம நவமியன்று பானகம், நீர்மோர் வடை பருப்பு, விசிறி எல்லாம் கொடுப்ப துண்டு. விசுவாமித்திரர் பின் சென்ற போதும் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்தபோதும் ராமர் வெய்யிலில் காய்ந்தார். அவர் பிறந் ததோ கோடைகாலம். அதனாலேயே இந்த நிவேதனங்களும், தானங்களும் வகுக்கப்பட்டிருக்கின்றன. அஷ்டமியும், நவமியும் திருமாலிடம் சென்று “ஜனங் கள் எங்களை ஒதுக்கு கின்றனரே” என கண்ணீர் விட்டனவாம்! “இரு திதிகளையும் கொண்டாடச் செய் கிறேன்” என வாக்களித்தாராம் ஸ்ரீஹரி. உறுதியளித்தபடி ஸ்ரீராம நவமியும், கோகுலாஷ்டமியும் மக்களால் பூஜிக்கப்படுகின்றன. வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனை யும், அரக்கனான விபீஷணனையும் தமது சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீரகுநந்தனர். ஒரே பாணம், ஒரே சொல், ஒரே பத்தினி என வாழ்ந்த அவரது மலரடியை இந்நன்னாளில் வணங்கி வழிபடுவோம். திருநெல்வேலி பஞ்சாங்கப்படி வைஷ்ணவ ஸ்ரீராமநவமி 18-04-2005ல் கொண்டாடப்படுகிறது.

--------------------------------------------------------------------------------

22-4-2005

உமாபதி சிவாச்சாரியார் திருநக்ஷத்திரம்

மெய்கண்ட சிவாசாரியார், அருள் நந்தி சிவாசாரியார், மறைஞான சம் பந்தர், உமாபதி சிவாசாரியார் நால்வ ரும் சைவ சமயம் தழைத்தோங்க உத விய சந்தான குரவர்கள். பசு+பதி+ பாசம் என்பது சைவசித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கை. பக்தர்களைப் பசுவாகவும், பரமேஸ்வரனைப் பதியா கவும் விவரிக்கும் இத்தத்துவத்திற்கு விளக்கம் அளித்த அருளாளர்களுள் உமாபதி சிவாச்சாரியாரும் ஒருவர். பல சிவாலயங்களில் சந்தான குரவர்கள் நால்வருக்கும் சிலை வடித்திருக்கி றார்கள். சிதம்பரத்தில் தில்லை மூவாயி ரத்தார் குலத்தில் உதித்த உமாபதி சிவாச்சாரியர் மறை ஞான சம்பந்தரின்

மாணவர். சிவப்பிரகாசம், திருவருட் பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சு விடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் ஆகிய எட்டு சைவசித் தாந்த நூல்களைத் தமிழில் இயற்றியவர். கோயிற்புராணம் என்ற நூலை சம்ஸ்கிருதத்திலுள்ள சிதம்பர மான்மியத்தின்படி எழுதினார். மொத்தம் 14 நூல்கள் இவர் தமிழில் இயற்றி உள்ளார். இவர் ஜாதி வித்தியாசம் பாராதவர். இவரது இந்தப் பெருமையை முதலில் உணராத தில்லை வாழ்அந்தணர், சிவபெருமான் அருளால் பல அற்புதங்கள் நிகழ்த்திய பின், நாடாளும் மன்னர் பாராட்டிய பிறகு சிந்தை தெளிந்து இவரைப் போற்றினர். சைவ நெறி தழைக்கப் பாடுபட்ட இவரை இன்று மனமார நினைத்து வணங்கினாலே ஈசன் அருள்கிட்டும்.

--------------------------------------------------------------------------------

22-4-2005

மீனாக்ஷி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

மலையத்துவஜன் செய்த யாகத் தில் தோன்றி, காஞ்சன மாலை முற் பிறவியில் செய்த புண்ணிய பலத்தால் அவள் மகளாய் வளர்ந்து திக்விஜயம் செய்து கைலாயத்தில் சிவபெருமானை சந்தித்தாள் தடாதகைப் பிராட்டி. பிறவியிலேயே தோன்றியிருந்த அவளது மூன்றாவது ஸ்தனம் உடனே மறைந்தது. “எட்டாவது நாள் சோம வாரத்தன்று உனக்கு மாலையிடுகிறேன்” என்றார் கடம்பவன நாதர். வாக்குப்படி மண முடித்த திரு நாள் இது. இந்த தெய்வத் திரும ணத்தை தரிசித்தால் கன்னியரும், காளையரும் விவாக

பந்தத்துள் புகுவர். இந்தக் கல்யாணத்தைக் காண கோயிலில் திரண்டிருக்கும் கூட்டத்தில் எள் விழுந்தால் எண்ணெய்யாகி விடும்.

--------------------------------------------------------------------------------
23-4-2005

சித்ராபௌர்ணமி

சித்திரை மாதம், சித்திரை நக்ஷத் திரம், பௌர்ணமி கூடிய தினம் சித்ரா பௌர்ணமி. சந்திரனிலிருந்து பெருகும் அமுதக் கதிர்களுக்காகவே சிவன், திருமால், அம்பிகை போன்ற தெய்வங் கள் தங்கள் விழிகளில் ஒன்றாக சந்திரனை வைத்திருக்கிறார்கள். அந்த ஒளி நம் மேனியில் பட்டால் தேஜஸ் கூடும். தோல் நோய்கள் வராது. உஷ்ணம் தணியும் ஆயுள் அதிகரிக்கும். அதற்காகவே அந்நாளில் நிலாச் சாப்பாடு, நிலவில் விளையாட்டு என்றெல்லாம் ஏற்படுத்தியிருந்தனர். அதுவும் இளவேனிற் கால சந்திரன் அமுத தாரைகளை அதிகம் பொழி வான். அதனால் சித்திரை மாதம் பல ஊர்களிலும் திருவிழா நடக்கும். ‘சாமி தரிசனம், என்று ஜனங்கள் தெருக் களில் உலா வருவார்கள். இந்திரன் பிரம்மஹத்தி நீங்கியதற்காக ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமியன்று மதுரைக்கு வந்து சோமசுந்தரப் பெருமானை வழிபடுகிறான். இன்று எதைத் தானம் செய்தாலும் கிரிவலம் வந்தாலும் புண்ணியம் பல மடங்காகும். திருக்குற்றாலத்து சித்ரா நதியில் நீராடுவது விசேஷம்.


--------------------------------------------------------------------------------

23-4-2005 சித்ரகுப்த பூஜை

சித்திரை மாதம் சித்திரை நக்ஷத்தி ரத்தில் பிறந்தவர் சித்ரகுப்தர். சிவனும், உமையும் ‘சித்திரத்துப் புத்திரனே, வா!” என்றழைக்க சித்திரபுத்திரன் பிறந்ததாக ஒரு வரலாறு கூறுகின்றது. இந்திராணி வளர்த்த பசுவின் வயிற்றில் ஏடும், எழுத்தாணியும் கொண்டு பிறந்ததாகவும் புராணத்தில் இருக் கிறது. சித்திரகுப்தன் பிறந்தவுடன் ஈன்ற பசு மாண்டு போனதால் சித்ரபுத்ர நோன்பு நோற்பவர்கள் பசுவின் பாலும், பாலிலிருந்து பெறப்படும் பொருள்களை யும் சேர்க்கக்கூடாதென்பது நியதி. அதோடு உப்பையும் நீக்க வேண்டுமாத லால் கனிகளை உண்பது நல்லது. அரிசிமாவால் சித்ர குப்தன் படம் வரைந்து கையில்


ஏடும், எழுத்தாணி யும், விரலில் மோதிரமும், காதில் குண்டலங்களும் எழுத வேண்டும். குப்தன் என்றால் கணக்கன் என்று பொருள். சித்ர குப்தனின் மனைவி பெயர் ஸ்ரீகாணாம்பிணி தேவி. இன்று சித்ரகுப்தனுக்கு பூஜை செய்து தலைவாழை இலையில் பாயசம், பட்சணங்கள், அன்னம், கிண்ணங்க ளில் பால், தயிர், நெய், தேன், உப்பு, மோர்க்குழம்பு, காய்கறிகள் சேர்ந்தகூட்டு எல்லாம் நிவேதிக்க வேண்டும். பூஜையைத் தானே செய்தால்கூட ஒரு சாஸ்திரிகளுக்கு புது முறத்தில் நவதானியங்கள், உப்பு, கற்பூரம், பருத்தி, பேனா அல்லது பென்சில், நோட்டு ஆகியவற்றை வைத்துத் தானம் கொடுக்க வேண்டும். காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தன் கோவி லில் காலையில் மகா அபிஷேகமும், மாலையில் திருமணமும் நடக்கிறது. சித்ரா பௌர்ணமி தோறும் இந்திரன் காஞ்சிபுரம் வந்து சித்ரகுப்தனை பூஜிப்பதாக ஐதீகம். சித்ரகுப்தனை தரிசித்தால் கேது உபாதையிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.


--------------------------------------------------------------------------------

24-4-2005 ஸ்ரீகள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல்

திருமாலிருஞ்சோலை கள்ளழகர் தங்கையான ஸ்ரீமீனாக்ஷியின் திருமணத்திற்காக சீர் எடுத்துக் கொண்டு ஆயிரம் பொன் சப்பரத்தில் வருகிறார். தங்கக் குதிரை மேல் அமர்ந்து வைகை நதியில் இறங்கும் போது மாலை மாற்றி பட்டு உடுத்தி லட்சக்கணக்கான பக்தர்களுக்குத் தரிசனம் தருகிறார். அப்போது பக்தர்கள் முடி இறக்குவதும், அர்ச்சனை செய்து, கற்பூரம் ஏற்றுவதும், தேங்காய் உடைப்பதும் வழக்கம். முதல் நாளே மீனாக்ஷி சொக்கேசர் திருமணம் நடந்து விட்டதை அறிந்து கரை ஏறாமல் திரும்புகிறார் அழகர். இரவு வண்டியூ ரில் சைத்யோபசாரம் நடைபெறும். மறுநாள் அழகர் எனப்படும் சுந்தரராஜப் பெருமாள் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளி கருட வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சமளிக் கிறார். அன்று இரவு இராமராயர் மண்டபத்தில் தசாவதாரக்கோலம் காணலாம், இராமநாதபுரம் ராஜா ஸ்ரீசேதுபதி மண்டபம் வரை ஸ்ரீஅனந்த ராயர் ராஜாங்க ஸேவை. செவ்வாயன்று காலை மோகினி அவதாரம். இரவு மைசூர் மண்டபத்தில் பூப்பல்லக்கில் கள்ளழகர் அலங்காரம். புதனன்று அதிகாலையில் அழகர் மலைக்குப் புறப்படுகிறார். சித்திரைத் திரு விழாவின் ஒரு பகுதியே அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்!


--------------------------------------------------------------------------------


28-4-2005 வராஹ ஜெயந்தி

வைகுண்டத்தின் வாயிற்காப்போர் ஜய விஜயர்கள். சனகாதி முனிவர்க ளின் சாபத்தினால் கசியபர்-திதியின் மைந்தர்களாகப் பிறந்தனர். அவர்களே இரண்ய கசிபு-இரண்யாட்சன். இவர் கள் பிறந்த போது பல அபசகுணங்கள் தோன்றின. பிரம்மாவை நோக்கித் தவமிருந்த ஹிரண்யாட்சன் பன்றியைக் கேவலமாக நினைத்ததால் அதை விலக்கி மற்ற எவராலும், பறவை, விலங்குகளாலும் தனக்கு மரணம் வரக்கூடாது என வரம் பெற்றான். பிரம்மா யோக நிஷ்டையில் ஆழ்ந்தார். அவரது நாசியிலிருந்து கட்டை விரல் அளவில் வெளிப்பட்ட வராகம் விநா டிக்கு விநாடி வளர்ந்து மலையளவா

னது. அதன் உறுமல் பதினான்கு லோகங்களிலும் கேட்டது. பூமியை எடுத்துச் சென்று கடலுக்கடியில் ஒளித்து வைத்தான் இரண்யாட்சன். பின்னர் வருணனை போருக்கழைத் தான். அவன் வராஹ மூர்த்தியைக் காண்பித்து“ அவரே உனக்கு சம மானவர். அவரிடம் சண்டையிடு” என்றான். வராஹ மூர்த்தியோடுயுத்தம் செய்தான் ஹிரண்யாட்சன். அவனை சம்ஹாரம் செய்து பூமா தேவியை மீட்டு வந்து மீண்டும் நிலை நிறுத்தினார் பூவராகர். அவரது அவதாரதினம் இது.

- ஆர். பி.