ஆர்.பி
எந்த இடத்தைத் தோண்டினாலும் ஜலம் கிடைக்கிறது. தண்ணீர் காற்றிலே அலையடிக்கும். அப்படிப்பட்ட ஜலத்திலேதான் இந்த பூமி சுத்திண்டிருக்கு. இந்த ஜகத்துக்கு அவ ஈஸ்வரி ‘யதிதம் கிஞ்ச ஜகத் ஸர்வம்’ என்கிறது கடோபநிஷத்.
அவள் வீரேஸ்வரி. அந்த ஒப்பில்லாத தேவ தையை முதல்லே பூஜை பண்ணிட்டுப் போனா வெற்றி கெடைக்கும். முருகன் தாயாரை நமஸ்கரிச்சு வேல் வாங்கிண்டு போகலையா? பாண்டவர்கள் துர்க்கையை பூஜை பண்ணி வன்னி மரத்திலே ஆயுதங்களை மறைச்சு வெச்சதாலே அஞ்ஞாத வாசத்திலே யாராலேயும் கண்டுபிடிக்க முடியலே!
பதினாறு ஸ்ரீபுரங்கள் அவளுக்கு. தரையிலே ஒன்பது; சமுத்திரத்துலே ஏழு. அதிலே மேரு பர்வதத்துலே இருக்கிறதை வர்ணிக்கவே மனுஷ ஆயுள் போதாது இதைத்தான் பஞ்ச தசாக்ஷரியின் 40-ஆவது நாமா சொல்றது. இதோட பஞ்சதசாக்ஷரியோட இரண்டாவது எழுத்துக்கான அர்த்தம் சுருக்கமா சொல்லப்பட்டிருக்கு.
பஞ்ச தசாக்ஷரியோட மூணாவது எழுத்து ஈஸர்வேசீ, காமேஸ்வரீ, ராஜேஸ்வரீ, கல்யாணீ, மங்களேஸ்வரீ, அமிர்தேஸ்வரீ என்று ஈயில் முடிவதெல்லாம் அம்பாளோட ஈகார ரூபந்தான். இவள் சாந்த சொரூபி. பிரார்த்தனை பண்ணுகிறவாளோட கோரிக்கையை நிறைவேற்றுகிறவள் இவள். அதுக்காக அஞ்சு வயசுக் குழந்தை காய் நறுக்கு வேன்னா கத்தியைத் தரமுடியுமா? சைக்கிள் ஓட்டுவேன்னு அடம்புடிச்சா சைக்கிளைக் கொடுக்க முடியுமா? உன்னால் இதைச்செய்ய முடியுமா?”ன்னு அவ யோசிச்சு செய்ய முடியும்னா கண்டிப்பாத் தருவா. ஸ்வாயம்பு மனுன்னு ஒரு ராஜா. அவரோட பிள்ளை பிரிய விரதன். அவனுக்கு ரொம்ப நாளா சந்தான பாக்கியம் இல்லே. கசியபரிஷி வந்து புத்திரகாமேஷ்டி யாகம் பண்ணி னார். யாக ஹவிஸை பிரியவிரதனோட பார்யாளான மாலி னிக்குக் கொடுத்தார். அவள் கர்ப்பவதியானா. பன்னிரண்டு தேவவருடம் கழிச்சு ஒரு குழந்தை பிறந்தது. குழந்தை என்ன தேஜஸா இருந்தா என்ன? உயிர் இல்லையே! தாயாருக்கு எப்படி இருக்கும்? மயக்கமாயிட்டா. பிள்ளையை ஸ்மசானத் துக்கு எடுத்துண்டுபோனா.
“அம்பிகே! யாகபலன் இதுதானா?”ன்னு கதறினான் பிரிய விரதன். அப்போ சஷ்டி தேவி வந்தா. தேவசேனைக்கு சஷ்டி தேவின்னு ஒரு பேருண்டு. சந்தானபாக்கியத்துக்காக சஷ்டி விரதம் இருக்கோமே! அது இந்த அம்பாளை நோக்கித்தான். சுப்ரமண்யரின் சம்சாரமும் இவதான்! சந்தேகமே வேண்டாம்! பிரியவிரதனோட குழந்தை அவ பார்வையாலே உயிர் பெற்றது. அதுக்கு சுவ்விரதன்னு பேர்வைச்சு வளர்த்தான். அந்த சஷ்டி தேவியும் இந்த ‘ஈ’யில் சேர்ந்ததுதான்! மனுவம்சத்திலே பிறந்த மங்களன் என்கிற ராஜா சண்டிகையை பூஜை பண்ணி ஏழு தீவுகளையும் அரசாட்சி பண்ணினதால் துர்க்கைக்கு மங்கள சண்டிகை என்கிற பேர் வந்தது. திரிபுர சம்ஹாரம் வெற்றிகரமாக நடக்க விஷ்ணு இந்த தேவியைத் தான் துதித்திருக்கிறார். அப்போது அவள் பெயர் மங்களேஸ்வரீ. ஒரு சமயம் நாரதரிடம் விந்தியமலை “திரிலோக சஞ் சாரியே! விசேஷச் செய்தி ஏதாவது உண்டா? ” ன்னு கேட்டது. இப்படி விசாரிச்சாலே சிக்கல் ஆரம்பமாயிடுத்துன்னுதான் அர்த்தம். “இமயமலை சிவபெருமானுக்கு மாமனாரா யிட்டது. மேருபர்வதமோ தங்கமலை. கைலாச மலையோ பரமசிவனோட வாசஸ்தலமாயிட்டது. கந்தமாதனமோ மூலிகை மலை. மேருமலையைத் தினமும் சூரியன் சுத்தறதாலே அதுக்கு ரொம்ப அகம்பாவம். நீதான் பாவம், இந்திரனோட எதிரியாயிட்டே.” அப்படீன்னார் நாரதர். இத்தனை போறாதா! நான் இருக்கிறதை எல்லாரும் உணரச் செய்யறேன். சூரியன் எப்படி சுத்தறான்னு பார்க்கறேன்னு சொல்லி வளர்ந்துண்டே போச்சு விந்தியமலை. அருணனாலே அதைத்தாண்ட முடியலே! தேவர்கள் மகா விஷ்ணுகிட்டே முறையிட பெருமாள் “அகஸ்தியர் காசியிலே இருக்கார். அவர் தான் விந்தியத்தை அடக்குவார்” அப்படின்னார். எல்லாரும் அகஸ்தியர்கிட்டே போய் சரணடைஞ்சா.
அகஸ்தியர் விந்தியமலை கிட்டே போய் “நான் பொதிகை மலைபோக வேண்டும். வழிவிடு. நான் திரும்பி வந்தபின் உயரலாம்” என்றார். விந்தியம் இயல்பு நிலையை அடைந்தது. அகஸ்தியரும் திரும்பி வரலே! அகஸ்தியர் இந்த வடிவம், இந்த நிறம் என்று உருவகப்ப டுத்தாமல் ஜகத் தாத்ரியாக, தாரிணியாக தேவியை வழி பட்டு வந்தார். அவள் ஈஸ்வர பாவத்தை அளிப்பவள். ஈசனில் பாதியான அவளுடைய பகுதியான இடது காலால் யமனை உதைத்திருக்க மார்க்கண்டேயரைக் காப்பாற்றினதில் சிவனுக்கென்ன சம்பந்தம்?’ என்று கேட்கிறார் ஆனந்த ஸாகரஸ்தவத்தில் நீலகண்ட தீக்ஷிதர்.