ஆர்.பி.
இரண்டாம் ஸ்ரீசுரேஸ்வரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மஹாராஷ்டிர அந்தண குலத்தவர். கொண்கா ணத்து மஹாபலேஸ்வரம் என்ற ஊரில் வசித்த ஈஸ்வர பண்டிதர் என்பவரின் குமா ரர். பெற்றோர் இட்ட நாமம் மகேஸ்வரர். இவரும் பல ஆண்டுகள் வட இந்தியா வெங்கும் விஜய யாத்திரைகள் மேற்கொண்டு வேத நெறியைப் பரப்பினார். காஞ்சியில் அக்ஷய வருடம் கி.பி. 127-ல் ஆஷாட பௌர்ணமியன்று இவர் சித்தியடைந்தார்.
11. சிவானந்த சித்கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
கி.பி. 127-172
ஸ்ரீசிவானந்த சித்கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் கன்னட அந்தண மரபினர். தந்தையின் பெயர் ‘உஜ்வலபட்டர்’. பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ‘ஈச்வர வடு’ சிவ அத்வைத நெறியில் மிகவும் ஈடுபாடு கொண்டவர் இவர். கி.பி.172ல் விரோதி கிருது ஆண்டு, சித்திரை மாதம் சுக்ல பக்ஷ தசமியில் விருத்தாசலத்தில் சித்தியடைந்தார்.
12. ஸ்ரீசந்திர சேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - ஐ
கி.பி. 172-235
ஸ்ரீ சந்திர சேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - ஐ, பாலாற்றங்கரையிலுள்ள ஒரு சிற்றூரில் பிறந்தவர். இவருக்கு வாத்ஸ்யாயன கோத்திரம். தந்தையின் பெயர் ஸ்ரீவத்ஸபட்டர். பெற்றோர் இவருக்கிட்ட பெயர் ஹரி. இவர் ஸ்ரீசத் சித்கனேந்திர சரஸ்வதியிடம் ஸ்ரீ மட நிர்வாகத்தை ஒப்படைத்து ‘சார்வ பௌம’ என்னும் சிறப்பான யோக நிஷ்டையைக் கடைப்பிடித்தவர். கி.பி. 235ஆம் ஆண்டு ஆனந்த வருடம் ஆஷாட மாதம் சுக்ல பக்ஷ நவமியன்று சேஷாசலத்திலுள்ள ஒரு குகையில் புகுந்து மறைந்தருளி அழியாப் பேரானந்தம் அடைந்தவர்.
13. ஸ்ரீசத்சித் கனேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
கி.பி. 235-272
ஸ்ரீசத்சித் கனேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் கெடில நதிக்கிரையிலுள்ள சிற்றூரில் பிறந்த ரத்னமாவார். ஸ்ரீதர பண்டிதர் தந்தையாகும் பாக்கியத்தைப் பெற்றவர். பெற்றோர் இட்டபெயர் சேஷய்யா. குருவழி எவ்வழி சீடர் அவ்வழி என்கிறபடி குருவைப் போல இவரும் ஸ்ரீகாமகோடி பீட நிர்வாகத்தை சிஷ்யரிடம் ஒப்படைத்து மௌன விரதராய், அவதூதர் போல பிரம்ம வரிஷ்டராய் காஞ்சி நகர்ப்புறத்தில் இருந்தவர். 32 ஆண்டு வாழ்ந்தார். கி.பி. 272ல் கர வருடம் மிருகசீரிஷம் சுக்லப்பிரதமையன்று காஞ்சியிலுள்ள ஸ்ரீகாயாரோஹணேஸ்வரர் ஆலயத்திலுள்ள சிவலிங் கத்தோடு ஐக்கியமாகி சித்தியடைந்தார்.
--------------------------------------------------------------------------------
14. ஸ்ரீவித்யா கனேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
கி.பி. 272-317
ஸ்ரீ வித்யா கனேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஆந்திர தேசத்தவர். ‘பாபண்ண ஸோமயாஜி” என்பவரின் புதல்வர். பெற்றோர் இட்ட பெயர் ‘நாயனா’. இவர் மந்திர சாஸ்திரத்தில் வல்லமை யுடையவர். மலைய மலைப் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் பைரவ மூர்த்தி பலி வாங்கிக் கொண்டிருந்தார். அதன் உக்கிரத் தைத்தணிக்க வேண்டு மென்று அவ்வூர் மக்கள் வந்து இவரிடம் முறை யிட்டனர். இவரும் மந்திரப்பிரயோகம் செய்து பைரவரை சாந்தப்படுத்தி மக்களின் பீதியைப் போக்கினார். இவர் கி.பி. 317ஆம் ஆண்டு தாது வருடம் மார்கழி மாதம் அமாவாசையைன்று மலைய மலைத்தொடரில் உள்ள அகஸ்திய மலையில் சித்தி அடைந்தார்.