Tuesday, April 05, 2005

குரு ரத்னங்கள்

காமகோடி பீடம் -ஆர்.பி.6. ஸ்ரீசுத்தானந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்

கி.மு.205-124

ஸ்ரீசுத்தானந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
தஞ்சை மாவட்டத்திலுள்ள வேதாரண்யத்தில் மருத்துவராகப் பணியாற்றியவர். இவர் பார்வு பண்டிதர் என அழைக்கப்பட்டார். இவரும் திராவிட அந்தணர். தந்தை இட்ட பெயர் விஸ்வநாதர். ஹிந்து மதம் வளரப் பெரும்பாடுபட்டவர். ஸ்ரீ சந்திர மௌலீஸ்வர பூஜை யை பெரும் ஈடுபாட்டோடு செய்து வந்த ஸ்ரீசுத்தானந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் கி.மு. 124-ல் நளவருடம் சித்திரை மாதம், சுக்லபக்ஷம், சஷ்டி திதியில் காஞ்சியில் சித்தியடைந்தார்.7. ஸ்ரீஅனந்தானந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்

கி.மு.124-55

ஸ்ரீஅனந்தானந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் சேர நாட்டில் வாழ்ந்த சூரிய நாராயணமஹி என்பவரின் தவப் புதல்வர். பெற்றோர் இட்ட நாமம் ‘சின்னையா’. சக்தி உபாசகர். அஷ்டமி, பௌர்ணமி, வெள்ளிக் கிழமைகளில் கௌரி தேவிக்கு விசேஷ பூஜை செய்வார். அம்பிகையின் அரு ளால் அளவிட முடியாதபடி இலக்கிய ஆற்றல் பெருகியது. ஸ்ரீ ஆதிசங்கரர் இயற்றிய ஸ்ரீசங்கர பாஷ்யங்களுக்கும், ஸ்ரீசுரேஸ்வரர் அருளிய வார்த்திகங்களுக்கும் எளிய நடையில் குறிப்புரை எழுதினார்.

அதற்கு “ஆனந்த கிரிடீகா” என்று பெயர். இவர் வட நாடெங்கும் விஜயயாத்திரை புரிந்து திரும்பும் போது நடுவழியில் ஆந்திராவிலுள்ள ஸ்ரீசைலத்தில். கி.மு. 55-ஆம் ஆண்டு, குரோதன வருஷம் வைசாக மாதம் கிருஷ்ண பக்ஷம் நவமியன்று சித்தியடைந்தார்.ஸ்ரீகைவல்யாநந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்

கி.மு. 55-கி.பி.28

ஸ்ரீகைவல்யாநந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஆந்திரதேசத்து அந்தண குலத்த வர். திருப்பதியில் வாழ்ந்த “த்ரைலிங்க சிவய்யா” என்பவரின் புதல்வர். பெற்றோர் வைத்த பெயர் ‘மங்கண்ணா’. இவரை ‘சச்சிதானந்தர்’ எனவும் கைவல்யயோகி’ என்றும் கூறுவார்கள். இவர் தம் வாரிசாக ஸ்ரீ க்ருபா சங்கரரை நியமித்தார். அவர் மூலமாக சிருங்கேரி மரபில் ஏற்பட்ட குழப்பத்தை நீக்கியிருக்கிறார். இவர் கி.பி. 28-ல் சர்வதாரி ஆண்டு தைமாதப் பிறப்பன்று காஞ்சி ‘மண்டன

மிச்ரர்’ அக்ரஹாரத்திலுள்ள ‘புண்ய ரஸா’ என்னும் பகுதியில் சித்தியடைந்தார்.


ஸ்ரீக்ருபா சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்

கி.பி. 28-68

ஸ்ரீக்ருபா சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஆந்திர நாட்டு அந்தணர். ‘ஆத் மன ஸோமயாஜி’ எனபவரின் திருமகனார். பெற்றோரிட்ட பெயர் கங்கையா. ‘கர்க்கா’ என்பது குலவழிப்பட்டம். இவருடைய பீடாதிபத்தியத்தை ஸ்ரீகாமகோடி பீடத்தின் பொற்காலமென்றே குறிப் பிடலாம். ஸ்ரீஆதிசங்கரர் வகைப்படுத்திய ஆறு சமயங்களும் பரவப் பாடு பட்ட இவர், ‘தாந்திரீய’ வழிபாட்டு முறைகளை வேரறுத்தார். ஆதிசங்கரருக்குப் பிறகு காலத்தால் மீண்டும் மாசு சூழ்ந்த சநாதன தர்ம நெறியை இவர் தூய்மைப்படுத்தி பெருமை சேர்த்தார். ஞான

மார்க்கத்தை, பக்தி நெறியை மக்களுக்கு எடுத்துரைத்தார். பக்தி மார்க்கத்தாலும் இறைவனை அடைய முடியும் என்று காட்டிய நாயன்மார்கள் ஆழ்வார்களுக்கு முன்னோடி எனத்தக்க இவர் காசி, காஞ்சி, திருவொற்றியூர், திருவானைக்காவல் ஆகிய ஸ்தலங்களில் யந்திரப் பிரதிஷ்டை செய்தார். அரும்பணிகளாற்றிய இவர் கி.பி.68-ல் விபவ ஆண்டு, கார்த்திகை மாதம், கிருஷ்ண பக்ஷம் திருதியை திதியில் விந்திய மலைப்பகுதியில் சித்தியடைந்தார்.